அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் சம்பத் எம்.எல்.ஏ. தலைமையில் ஆலோசனை
- முதலியார்பேட்டை தொகுதியில் அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து சம்பத் எம்.எல்.ஏ. தலைமையில் ஆலோசனை நடத்தினர்.
- பள்ளிகள் துவங்குவதற்கு முன் அரசு பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படைத் தேவைகள் குறித்த ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம்
புதுச்சேரி:
பள்ளிகள் துவங்குவதற்கு முன் அரசு பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படைத் தேவைகள் குறித்த ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு முதலியார் பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. சம்பத் தலைமை தாங்கினார். இதில் பொதுப்பணித்துறை சிறப்பு கட்டிட பிரிவு கோட்ட செயற்பொறியாளர் ஸ்ரீதரன், இளநிலைப் பொறியாளர்கள் ஜெயராமன், கோபிநாத் மற்றும் முதலியார் பேட்டை தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வருகிற 23-ந் தேதி பள்ளி திறப்பதற்கு முன் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், ஒவ்வொரு பள்ளியில் உள்ள குறைபாடுகள் மற்றும் தேவைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக மாணவருக்கு சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரமான கழிவறை வசதி இருப்பதை பொதுப்ப ணித்துறை சார்பில் கள ஆய்வு மேற்கொண்டு குறை பாடுகளை சரி செய்வதாக பொதுப்பணித்துறை சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.