- புதுவை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 4-வது மாநில மாநாடு கருத்தரங்கம் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள மங்கலட்சுமி திருமண நிலையத்தில் நடைபெற்றது.
- மாநாட்டில் 10- மற்றும் 12-ம் வகுப்புகளில் ஒவ்வொரு பள்ளியிலும் முதல் 3 நிலையில் தேர்ச்சி பெற்ற தலித் மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.
புதுச்சேரி:
புதுவை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 4-வது மாநில மாநாடு கருத்தரங்கம் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள மங்கலட்சுமி திருமண நிலையத்தில் நடைபெற்றது.
தலைவர் நிலவழகன் தலைமை தாங்கினார். துணை தலைவர் அரிகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். துணை செயலாளர் சரவணன் அஞ்சலி உரை வாசித்தார். துணை தலைவர் ஆனந்தன் தொடக்க உரையாற்றினார். செயலாளர் ராமசாமி களச் செயல்பாட்டறிக்கையை வாசித்தார். பொருளாளர் ரமேஷ் வரவு செலவு அறிக்கை வாசித்தார்.
மாநாட்டில் 10- மற்றும் 12-ம் வகுப்புகளில் ஒவ்வொரு பள்ளியிலும் முதல் 3 நிலையில் தேர்ச்சி பெற்ற தலித் மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.
சி.ஐ.டி.யூ. சீனிவாசன், தமிழ்ச்செல்வன், கொளஞ்சியப்பன் ஆகியோர் தீர்மானங்களை முன் மொழிந்தனர்.
மாநாட்டில், மின்சார திருத்த மசோதாவை சட்டமாக்க கூடாது என மத்திய அரசை வலியுறுத்துவது, மின்துறையை தனியாருக்கு விற்கும் திட்டத்தை உடனே புதுவை அரசு கைவிட வேண்டும், அக்ஷய பாத்ரா திட்டத்தை கைவிட்டு மீண்டும் மதிய உணவு கூடம் மூலமே மாணவர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள் ராஜாங்கம், பெருமாள், கங்காதரன், ராமமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி, அன்பழகன் விஸ்வநாதன், சலேத்தையன், பிரகாஷ், ஏகாம்பரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.