புதுச்சேரி

புதுவை புறக்கணிக்கப்படுவதை ஒப்புக் கொள்ள மாட்டேன்-கவர்னர் தமிழிசை பேட்டி

Published On 2022-11-30 06:00 GMT   |   Update On 2022-11-30 06:00 GMT
  • பிரிவினையை பேசியதை கண்டித்த ராணுவவீரர் வீடு புகுந்து மிரட்டிய சம்பவத்தை ஏற்க முடியாது. இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடாது. புதுவையில் அரசு வக்கீல்கள் நியமனத்தில் முதல்-அமைச்சர் கொடுத்த பட்டியலை நான் புறக்கணித்ததாக கூறுவது தவறு.
  • புதுவை புறக்கணிக்க ப்படுவதை என்றும் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். புதுவைக்கு தேவையான உதவிகளை மத்திய அரசிடம் சென்று கேட்டு வருகிறேன்.

புதுச்சேரி:

காட்டேரிக்குப்பத்தில் பழங்குடியினர் கவுரவ விழாவில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரிவினையை பேசியதை கண்டித்த ராணுவவீரர் வீடு புகுந்து மிரட்டிய சம்பவத்தை ஏற்க முடியாது. இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடாது. புதுவையில் அரசு வக்கீல்கள் நியமனத்தில் முதல்-அமைச்சர் கொடுத்த பட்டியலை நான் புறக்கணித்ததாக கூறுவது தவறு.

எனக்கும், வக்கீல்கள் தேர்வுக்கும் சம்பந்தமே இல்லை. பட்டியல் மட்டுமே என்னிடம் வந்தது. அதில் ஒருவர் மட்டும் சென்னையை சேர்ந்தவர், மற்றவர்கள் புதுவையை சேர்ந்தவர்கள். தலைமை செயலர், சட்டசபை செயலர் நேர்முகத்தேர்வு நடத்தி மதிப்பெண் கொடுத்து தகுதிபடைத்தவர்கள் என பட்டியல் கொடுத்தனர். இதில் எனது பங்கு எதுவும் இல்லை.

புதுவை புறக்கணிக்க ப்படுவதை என்றும் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். புதுவைக்கு தேவையான உதவிகளை மத்திய அரசிடம் சென்று கேட்டு வருகிறேன். முதல்- அமைச்சருக்கும், எனக்கும் எந்தவித விரிசலும் இல்லை. தமிழக கவர்னர் காலாவதியானவர் என கனிமொழி எம்.பி கூறியுள்ளார். கவர்னர்களை மிகவும் மோசமாக விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News