புதுச்சேரி
மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி
- புதுவை அரசு கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் சமகர சிக்ஷா மூலம் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
- உடற்கல்வி ஆசிரியர் பால முருகன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரிய, ஆசிரியைகள் பள்ளி ஊழியர்கள் செய்திருந்தனர்.
புதுச்சேரி:
புதுவை அரசு கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் சமகர சிக்ஷா மூலம் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கல்மண்டபம் அரசு பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கவுரி தலைமை தாங்கினார். கராத்தே மாஸ்டர்கள் ஞானசேகரன் முருகன் மற்றும் விஸ்வசுந்தரம் ஆகியோர் தற்காப்பு கலை பயிற்சி அளித்தனர்.
ஆசிரியை அருண்மொழி வரவேற்றார்.
உடற்கல்வி ஆசிரியர் பால முருகன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரிய, ஆசிரியைகள் பள்ளி ஊழியர்கள் செய்திருந்தனர்.