புதுச்சேரி

நமோ கிரிக்கெட் 2023 போட்டியை புதுவை பா.ஜனதா தலைவர் சாமிநாதன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

நமோ கிரிக்கெட் 2023 போட்டி

Published On 2023-01-21 09:07 GMT   |   Update On 2023-01-21 09:07 GMT
  • புதுவை லாஸ்பேட்டை தாகூர் கலைக் கல்லூரி மைதானத்தில் நமோ கிரிக்கெட் 2023 போட்டி தொடங்கியது.
  • முதல் பரிசு கோப்பையுடன் ரூ.50ஆயிரம் ரொக்கம் வழங்கப்படும், 2-ம் பரிசு கோப்பையுடன் ரூ.30ஆயிரம், 3-ம் பரிசு கோப்பையுடன் ரூ.20ஆயிரம், 4-ம் பரிசு ரூ.10 ஆயிரம், 5-ம் பரிசு ரூ.5ஆயிரம் முறையே வழங்கப்பட உள்ளது.

புதுச்சேரி:

புதுவை லாஸ்பேட்டை தாகூர் கலைக் கல்லூரி மைதானத்தில் நமோ கிரிக்கெட் 2023 போட்டி தொடங்கியது.

போட்டியை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், எம்.எல்.ஏக்கள் வி.பி.ராமலிங்கம், வெங்கடேசன், கல்யாணசுந்தரம், ரிச்சர்ட் ஜான் குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த கிரிக்கெட் போட்டி நேற்று இரவு தொடங்கி 22-ந் தேதி வரை நடைபெறுகிறது.

முதல் பரிசு கோப்பையுடன் ரூ.50ஆயிரம் ரொக்கம் வழங்கப்படும், 2-ம் பரிசு கோப்பையுடன் ரூ.30ஆயிரம், 3-ம் பரிசு கோப்பையுடன் ரூ.20ஆயிரம், 4-ம் பரிசு ரூ.10 ஆயிரம், 5-ம் பரிசு ரூ.5ஆயிரம் முறையே வழங்கப்பட உள்ளது. விளையாட்டில் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

கிரிக்கெட் தொடக்க விழா நிகழ்ச்சியில், பா.ஜனதா இளைஞரணி துணைத் தலைவர்கள் உமாசங்கர், ராக் பெடரிக், மாநில செயலாளர்கள் அஸ்வின்குமார், அமல்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில்குமரன் மாநில வணிகர் பிரிவு இணை அமைப்பாளர் சீனிவாசப்பெருமாள், ஓ.பி.சி. அணி மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணராஜ், உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், பிரண்ட்ஸ் மொபைல் சரவணன், ஆனந்த கண்ணன், பிரபுதாஸ், லட்சுமி நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News