புதுச்சேரி

கோப்பு படம்.

ரங்கசாமிக்கு-என்.ஆர்.இலக்கிய பேரவை பாராட்டு

Published On 2022-11-23 05:03 GMT   |   Update On 2022-11-23 05:03 GMT
  • முதல்-அமைச்சர் ரங்கசாமியின் சீர்திருத்த நடவடி க்கை தொடரவேண்டும் என்று என்.ஆர். இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் கூறியுள்ளார்.
  • மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அதிகாரிகளும், அலுவல ர்களும் இப்படி செயல்ப ட்டால் அரசு இயந்திரம் எப்படி இயங்கும்? மாநில வளர்ச்சி என்பது எட்டாக் கனியா கத்தானே இருக்கும்.

புதுச்சேரி:

முதல்-அமைச்சர் ரங்கசாமியின் சீர்திருத்த நடவடி க்கை தொடரவேண்டும் என்று என்.ஆர். இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் கூறியுள்ளார்.

என்.ஆர்.இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாநிலத்தின் மொத்த வருவாயில் 50 சதவீதத்துக்கு அதிகமாகவே அரசு ஊழியர்களுக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது. அதில் ஒவ்வொரு ஊழியரும் ரூ.50 ஆயிரத்துக்கும் குறைவில்லாமல் பெறுகின்றார்கள். அவ்வாறு ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள் காலத்தோடு அலுவலகத்துக்கு வருவதில்லை.

மதியம் உணவு இடைவேளைக்கு செல்பவர்கள் கூடமாலை 3 அல்லது 3.30 மணிக்குத்தான் மீண்டும் அலுவலகம் வருகிறார்கள். அப்படி வந்தவர்கள் மாலை 4 மணிக்கு பள்ளியில் உள்ள தங்களின் பிள்ளைகளை அழைத்துவர சென்று விடுகிறார்கள். இப்படித்தான் அரசு ஊழியர்களின் அன்றாட செயல்பாடுகளாய் இருந்து வருகிறது.

இதனால் கிராமப் புறங்களிலிருந்து அலுவலர்களை சந்திக்க வரும் பொது மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அதிகாரிகளும், அலுவல ர்களும் இப்படி செயல்ப ட்டால் அரசு இயந்திரம் எப்படி இயங்கும்? மாநில வளர்ச்சி என்பது எட்டாக் கனியா கத்தானே இருக்கும்.

அரசு ஊழியர்களு க்கான சங்கத்தில் இணைந்து கொண்டு ஊதிய உயர்வு மற்றும் இதர சலுகைகள் கேட்டு போரா டுவது அல்லது துறைசார்ந்த உயர் பதவிகளில் இருப்பவ ரோடும், அரசியல் தலைவர்க ளோடும் நெருக்கும் காடடிக் கொண்டு தங்கள் பதவிக்கு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்வது.

இப்படிப்பட்ட நிலைகள் தொடர்வதை அறிந்த முதல்-அமைச்சர் ரங்கசாமி தன்னுடைய துணிச்சலான நடவடிக்கை யின் பயனாய் இன்று மாநில நிர்வாக சீர்திருத்தத்துறை தனிப்படை அமைத்து அனைத்து அரசு அலுவலகங்களிலும் வருகை பதிவேடு மற்றும் இதர நடவடிக்கை களை கண்காணிப்பது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலை தொடரவேண்டும். இப்படிப்பட்ட சீர்திருத்த அதிரடி நடவடிக்கையால் மட்டுமே நமது மாநில வளர்ச்சி என்ற சிகரத்தை தொடமுடியும். நமது முதல்-அமைச்சரின் இந்த சீரிய செயலுக்கு என்.ஆர்.இலக்கிய பேரவை பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News