புதுச்சேரி

கோப்பு படம்.

மக்கள் நலன் கருதியே கவர்னர் செயல்படுகிறார்

Published On 2023-05-11 08:26 GMT   |   Update On 2023-05-11 08:26 GMT
  • பா.ஜனதா தொகுதி தலைவர் செல்வகுமார் பாராட்டு
  • ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

புதுச்சேரி:

புதுவை அரியாங்குப்பம் தொகுதி பா.ஜனதா தலைவர் செல்வகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 புதுவையில் கடந்த காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியில் முதல்வர், துணை நிலை ஆளுநருடன் மோதல் போக்கையே கடைபிடித்து வந்தார். ஆனால் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சியில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

இதனால் புதுவை அரசு நிர்வாகம் பிரதமர் மோடி கூறியதைப்போல் இரட்டை இன்ஜினைப்போல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் வர பிரதமர் மோடி முதல் காரணம் என்பதைப்போல், புதுவையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர துணை நிலை ஆளுநராகிய தமிழிசை சவுந்தரராஜன் என்பது நடுநிலையான மக்களுக்கும், சுகாதாரத்துறை அதிகாரி கள், ஊழியர்களுக்கும் தெரியும். ஜிப்மர் மருத்துவ மனையில் கால் நூற்றாண்டி ற்கும்மேலாக சில மருத்துவ சிகிச்சைகளுக்கு கட்டணம்வசூலிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள்தான் ஆகிறது. அதுவும் புதுவையில் தேசிய ஜனநாக கூட்டணி ஆட்சிக்கு வந்து 2ஆண்டுகள்தான் ஆகிறது.

இதுபோன்ற நிலையில் பா.ஜனதா மீதும், தற்போதைய அரசு மீதும், ஜிப்மர் நிர்வாகத்துமீதும் குற்றச்சாட்டு கூறுவது எப்படி சரியாக இருக்கும்? அவ்வாறு தற்போதுதான் கட்டணம் நிர்ணயம் மற்றும் உயர்வு செய்யப்பட்டு ள்ளது என்றாலும் முதலில் ஜிப்மர் இயக்குனரை சந்தித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசியிருக்க வேண்டும். அந்த பேச்சு வார்த்தைக்கு ஜிப்மர் இயக்குனர் சம்மதிக்காமல் இருந்தாலோ, அல்லது தரும் விளக்கம் சரியானதாக இல்லாமல் இருந்தாலோ போராட்டம் நடத்தியிருக்கலாம். அதுவும் கூட ஜிப்மருக்கு செல்லும் நோயாளிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். இவைகளை செய்யாமல் அரசியலுக்காக போராட்டம் , நடத்துவது தவறு. இதை த்தான் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன் கண்டித்தார். இதில் என்ன தவறு உள்ளது. இதற்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் தெரிவித்த பா.ஜனதா தலைவர் சாமி நாதனை பாராட்டுகின்றோம். அதேசமயம் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புதுவை மக்கள் நலன் கருதி செயல்படுகின்றாரே தவிர, பா.ஜனதாவின் கொள்கை பரப்புச் செயலாளராக செயல்படவில்லை. அவரது அனைத்து நடவடிக்கை களையும் கூர்ந்து கவனித்தால் தெரியும். எனவே எதிர்க்கட்சிகள் பா.ஜனதா கண்ணாடி அணிந்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் செயல்களை பார்க்காமல், வெறும் கண்ணால் பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News