புதுச்சேரி

கோப்பு படம்.

அரசு துறைகளை விற்பனை செய்வதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுவதா?-என்.ஆர்.இலக்கிய பேரவை

Published On 2022-10-29 06:03 GMT   |   Update On 2022-10-29 06:03 GMT
  • என்.ஆர்.இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
  • அதன் பின் ஆட்சிக்கு வந்தவர்களின் நிர்வாக திறமையின்மையினால் அத்தனை கட்டமைப்புகளையும் சிதைத்துவிட்டார்கள்.

புதுச்சேரி:

என்.ஆர்.இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

எதிர்கட்சிகள் பொய் குற்றச்சாட்டை நிறுத்திக்கொள்ள வேண்டும். கடந்த முறை ஆட்சியின் போது பாப்ஸ்கோ, பாண்டெக்ஸ், காண்பெட், பாண்லே, பாசிக் போன்ற எண்ணற்ற அரசு சார்பு நிறுவனங்களை உருவாக்கி மாநில இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தியதோடு இல்லாமல் நலிவுற்ற நிலைகளில் இருந்துவந்த கூட்டுறவு மற்றும் அமுதசுரபி ஆகியவற்றை மீட்டெடுக்க அவைகளுக்கு மதுபான மற்றும் பெட்ரோல் பங்கு உரிமங்களை வழங்கி அவற்றிற்கே புத்துயிர் கொடுத்தவர் முதல்-அமைச்சர் ரங்கசாமி.

அதன் பின் ஆட்சிக்கு வந்தவர்களின் நிர்வாக திறமையின்மையினால் அத்தனை கட்டமைப்புகளையும் சிதைத்துவிட்டார்கள். மீண்டும் ஆட்சி பொறுப்பேற்ற ரங்கசாமி சிதைந்துபோன அரசு சார்பு நிறுவனங்களை மீட்டெடுக்கும் முயற்சியாய் பல்வேறு பொருளாதார நெருக்கடிகள் இருந்த போதும் அதில் பணியாற்றிய ஊழியர்களின் நிலுவை ஊதியத்தை வழங்கி வருவதோடு அவர்களின் பணிபாதுகாப்பை உறுதிசெய்யும் விதத்தில் கால அளவை நிர்ணயித்து பணி நிரந்தரம் செய்து வருகின்றார்.

சமீப காலமாய் மாநிலத்தில் 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள் என்ற வார்த்தையை தகர்த்தெரியும் விதத்தில் அவற்றை நடைமுறைபடுத்த நடவடிக்கையை துரிதப்படுத்தியுள்ளார். ஏற்கனவே காவல்துறையில் 400க்கும் அதிகமான பணியிடங்களும், சுகாதாரத் துறையில் 147 பணியிடங்களும், மருந்து கட்டுப்பாட்டு அலுவலர்கள், தற்காலிக ஆசிரியர்கள் நிரந்தரம் போன்றவை நிரப்பப்பட்டுள்ள நிலையில் தற்போது யூ.டி.சி., எல்.டி.சி. மற்றும் உதவியாளர்கள் என 1540-க்கும் மேற்பட்ட பணிகளுக்கு நேர்முகத்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வருகிற காலங்களில் அனைத்து காலிப்பணியிடங்களும் நிரப்ப தேவையான நடவடிக்கை மற்றும் நிதி ஆதாரத்தை தன்னுடைய நிர்வாக ஆளுமையால் உருவாக்கி வருகின்றார் முதல்-அமைச்சர் ரங்கசாமி.

கூட்டணி தர்மத்துக்கு மதிப்பளித்து ஒரு சில கொள்கைமுடிவுகளில் தாமதம் ஏற்படுமே தவிர மாநில நலன், மக்கள் நலப்பணிகளில் ஒரு போதும் சமரசம் செய்துகொள்ளாதவர். இவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாத எதிர்கட்சிகள் அரசு துறைகளை விற்பனை செய்வதாக கூறும் பொய் குற்றச்சாட்டை என் ஆர் இலக்கியப் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News