ஷாட்ஸ்
கர்பா நடனம் ஆடிய 10 பேர் மாரடைப்பால் மரணம் - அனைவரும் இளவயதினர்
குஜராத்தில் நடந்த நவராத்திரி விழாவில் கடந்த 24 மணி நேரத்தில் கர்பா நடனமாடிய 10 பேர் மாரடைப்பால் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த 10 பேரும் இள வயது மற்றும் நடுத்தர வயதுடையோர் என டாக்டர்கள் தெரிவித்தனர். கர்பா நடனமாடிய 609 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் கர்பா நடனமாடும் இடங்களுக்கு அருகே ஆரம்ப சுகாதார மையங்கள் தயார் நிலையில் இருக்கும்படி மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.