ஷாட்ஸ்
யார் மீதோ உள்ள கோபத்தை தி.மு.க. பக்கம் காட்டுகிறார் எடப்பாடி பழனிசாமி - ஆர்.எஸ்.பாரதி
அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக மோதலுக்கும், திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் வீணாக திமுகவை வம்புக்கு இழுக்க வேண்டாம். எதற்கு எடுத்தாலும் முதலமைச்சரையும், திமுகவையும் தாக்கிப் பேசுவது எடப்பாடி பழனிசாமிக்கு வாடிக்கையாகிவிட்டது என தெரிவித்தார்.