ஷாட்ஸ்
சென்னை-மதுரை வந்தே பாரத் ரெயில் சேவை- பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை
மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
விழாவில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள சென்னை சென்ட்ரல்- கோவை வந்தே பாரத் ரெயில், மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என தெரிவித்தார். மேலும், இதேபோன்று சென்னை - மதுரை இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்க வேண்டும் என்றும், வந்தே பாரத் ரெயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் கேட்டுக்கொண்டார்.