ஷாட்ஸ்
முதலமைச்சர் பேசியது சட்டசபை மரபுக்கு எதிரானது- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
கவர்னரை அமர வைத்து கொண்டு முதலமைச்சர் அவ்வாறு பேசியது மரபுக்கு எதிரானது. சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் புதிய பெரிய திட்டங்கள் எதுவும் கவர்னர் உரையில் இடம் பெறவில்லை. அரசும், முதலமைச்சரும் தங்கள் முதுகை தாங்களே தட்டிக்கொண்டு கவர்னர் மூலமாக சபாஷ் போட்டுக் கொண்டுள்ளனர் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.