ஷாட்ஸ்
null
நெய்வேலி என்.எல்.சி.யில் இயந்திரம் தீப்பிடித்து எரிவதால் பரபரப்பு
நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் 2-வது சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட நிலக்கரி கன்வேயர் பெல்ட் மூலமாக மின் உற்பத்திக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த கன்வேயர் பெல்ட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். ஆனாலும் லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.