ஷாட்ஸ்
ஆஸ்கர் தம்பதி பொம்மன் -பெள்ளியை சந்தித்த பிரதமர் மோடி
'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்த பிறகு இந்த படத்தில் நடித்த முதுமலை தெப்பக்காடு பகுதியை சேர்ந்த பாகன் பொம்மன், பெள்ளி தம்பதியினர் உலக அளவில் புகழ் பெற்று விட்டனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, பாகன் தம்பதிகளான பொம்மன் -பெள்ளியை இன்று சந்தித்தார். இதைத்தொடர்ந்து ஆவண குறும்படத்தில் நடித்த யானையையும் பார்வையிட்டார்