ஷாட்ஸ்
அமைச்சராக பதவியேற்றார் டி.ஆர்.பி.ராஜா
சென்னை ராஜ்பவன் மாளிகையில் நடைபெற்ற விழாவில் மன்னார்குடி சட்டசபை உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக பதவியேற்றார்.டி.ஆர்.பி. ராஜாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.