null
நிதித் துறையில் டிஜிட்டல் தளம் உருவாக்கும் ஏர்டெல் - பஜாஜ் ஃபைனான்ஸ்
- இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் தளத்தை உருவாக்குவதற்காக கூட்டணி.
- நிதி சார்ந்த சேவைகளை ஏர்டெல் தேங்ஸ் செயலியில் வழங்கும்.
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களில் ஒன்று பாரதி ஏர்டெல். இந்த நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கி சாரா நிதி நிறுவனமான (NBFC) பஜாஜ் ஃபைனான்ஸ் உடன் ஒன்றிணைந்து நிதி சேவைகளுக்கான இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் தளத்தை உருவாக்குவதற்காக கூட்டணி அமைத்துள்ளது.
இது குறித்த அறிவிப்பை ஏர்டெல் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டுள்ளன. இந்தக் கூட்டணி மூலம், ஏர்டெல் நிறுவனம் பஜாஜ் ஃபைனான்ஸ்-இன் நிதி சார்ந்த சேவைகளை அதன் ஏர்டெல் தேங்ஸ் செயலியில் வழங்கும். பின்னர் அதன் நாடு தழுவிய கடைகள் மூலம் வழங்கும்.
டிஜிட்டல் சொத்துக்களின் ஒருங்கிணைந்த வலிமை, ஏர்டெல் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் ஊடுருவலை ஆழப்படுத்த இந்த திட்டம் உதவும் என்று இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. கூட்டணியின் ஒரு பகுதியாக, இரு நிறுவனங்களும் தரவு தனியுரிமை - பாதுகாப்பு, தடையற்ற வாடிக்கையாளர் சேவை மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்தை உறுதி செய்யும்.
இந்தக் கூட்டாணி ஏர்டெல்லின் 375 மில்லியன் வாடிக்கையாளர் தளத்தையும், 12 லட்சத்திற்கும் அதிகமான விநியோக வலையமைப்பு, பஜாஜ் ஃபைனான்ஸ்-இன் 27 சேவைகள் மற்றும் 5,000-க்கும் அதிக கிளைகள் மற்றும் 70,000 கள முகவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட தொகுப்பையும் ஒன்றிணைக்கிறது.