டென்னிஸ்
null

இதுவே கடைசியாக கூட இருக்கலாம்- ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடேல்

Published On 2024-05-28 02:30 GMT   |   Update On 2024-05-28 02:48 GMT
  • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றிலேயே ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
  • களிமண் ஆடுகளத்தின் ராஜா என்றும் அவர் புகழப்பட்டு வருகிறார்.

பாரீஸ்:

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஸ்பெயினை சேர்ந்த ரபேல் நாடல், ஜெர்மனி வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவுடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் 6-3, 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ரபேல் நடாலை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

14 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் வீரர் நடால் முதல் சுற்றிலேயே வெளியேறியது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

முன்னதாக ரபேல் நடால் தனது 19 ஆண்டுகால பிரெஞ்சு ஓபன் வாழ்க்கையை இந்த சீசனுடன் முடித்துக் கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன. பிரெஞ்சு ஓபனில் அவர் புரிந்த சாதனை மற்றும் நற்பெயரை ஒருபோதும் ஒப்பிட முடியாது. இதுவரை 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை பிரெஞ்சு ஓபனில் வென்றுள்ளார். களிமண் ஆடுகளத்தின் ராஜா என்றும் அவர் புகழப்பட்டு வருகிறார்.

22 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஸ்பெயின் வீரர் நடால், 2005 ம் ஆண்டில் ரோலண்ட் கரோசில் தனது முதல் பட்டத்தை வென்றார். இன்னும் ஒரு வாரத்தில் ( வரும் திங்கட்கிழமை) அவர் தனது 38-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இனியொரு முறை இங்கு விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவு தான் என நடால் கூறியுள்ளார்.

இது குறித்து ரசிகர்கள் மத்தியில் அவர் கூறியதாவது:-

முந்தைய போட்டிகளை விட இந்த போட்டியில் என்னால் சிறப்பாக விளையாட முடிந்தது என்று உணர்ந்தேன். ஆனால் எனக்கு முன்னால் ஒரு கடினமான எதிரி இருந்தார். அவர் நன்றாக விளையாடினார்.

உங்கள் முன் நான் விளையாடிய கடைசி பிரெஞ்சு ஓபன் இதுவா என்பது எனக்கு தெரியாது. ஆனால் இனியொரு முறை இங்கு விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவு தான். இன்று என்னால் எதுவும் சொல்ல முடியாது. அதே நேரத்தில் ஒலிம்பிக் போட்டியில் இதே மைதானத்தில் விளையாடுவேன் என்று நம்புகிறேன். மேலும் எனக்கு நிறைய விளையாடுவது மற்றும் எனது குடும்பத்துடன் பயணம் செய்வது மிகவும் பிடிக்கும்.

என்று நடால் கூறினார்.

Tags:    

Similar News