என் மலர்tooltip icon

    சிம்மம் - வார பலன்கள்

    சிம்மம்

    வார ராசிபலன் 11.5.2025 முதல் 17.5.2025 வரை

    11.5.2025 முதல் 17.5.2025 வரை

    விபரீதராஜயோகமான வாரம். ராசி அதிபதி சூரியன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குரு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சாரம். மந்த தன்மை குறைந்து விரைந்து செயல்படும் தன்மை அதிகரிக்கும். தைரியத்துடன் மனம் விரும்பும் அனைத்தையும் சாதித்து காட்டுவீர்கள். எந்த கிரகம் உங்களை கை விட்டாலும் குரு பகவான் உங்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவார்.

    வேற்று மொழி பேசுபவர்கள், வேற்று மதத்தினரின் நட்பு மற்றும் உதவிகள் கிடைக்கும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். ஆயுள், ஆரோக்கியம், அறுவை சிகிச்சை சார்ந்த பயம் அகலும். குடும்ப உறவுகள் சந்திப்பால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வேலையை மாற்றம் செய்யும் எண்ணத்தை தவிர்ப்பது புத்திசாலித்தனம்.

    போட்டி பந்தயங்களை தவிர்க்க வேண்டும். திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகள் திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். காதல் முயற்சிகளால் அவப்பெயர் உண்டாகும். சித்ரா பவுர்ணமி அன்று சிவ வழிபாடு செய்யவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    வார ராசிபலன் 4.5.2025 முதல் 10.5.2025 வரை

    4.5.2025 முதல் 10.5.2025 வரை

    எண்ணங்கள் ஈடேறும் வாரம். 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெற்ற ராசி அதிபதி சூரியன் தன, லாப அதிபதி புதனுடன் சேர்க்கை பெறுகிறார். மலை போல் துயரம் வந்தாலும் பனி போல் நீங்கி விடும். வெளியூர், வெளிநாட்டு பயணங்களில் ஆதாயம் கிட்டும். பதவியில் நிலவிய குளறுபடிகள் நீங்கும். வேலை மாற்றத்திற்கான விருப்பம் நிறைவேறும். விவாகரத்து வரை சென்ற குடும்ப விஷயம் சீராகும். கணவன்-மனைவி அந்நியோன்யம் கூடும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் நல்ல குணம் தெரியும்.

    குடும்பத்தில் பிறரின் தலையீட்டால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். வீடு, வாகன யோகம் உண்டு. அலுவலகத்தில் விண்ணப்பித்த கடன் கிடைக்கும். புதிய ஆயுள் காப்பீடு, மெடிகிளைம் பாலிசிகள் எடுக்க உகந்த நேரம். ராசியை கேது நெருங்குவதால் அரசியல் பிரமுகர்கள் கட்சியையும், தொண்டர்களையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம். மனம், வாக்கு, இரண்டையும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். பதவிக்கு எந்த ஆபத்தும் ஏற்பட வாய்ப்பு இல்லை. சரபேஸ்வரர் வழிபாடு நிம்மதியை கூட்டும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    வார ராசிபலன் 27.4.2025 முதல் 03.5.2025 வரை

    27.4.2025 முதல் 03.5.2025 வரை

    நிதானமான வாரம். ராசி அதிபதி சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி உண்டாகும். பூர்வீக சொத்து தொடர்பான பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவிற்கு வரும். பூர்வீகச் சொத்துக்களை நல்ல விலைக்கு விற்க ஏற்ற நேரம். நண்பர்களும், பங்குதாரர்களும் தொழில் வளர்ச்சிக்கு கைகொடுத்து உதவுவார்கள்.

    பேச்சை மூலதனமாக கொண்டவர்கள், கமிஷன் தொழில் புரிபவர்களுக்கு நல்ல தொழில் முன்னேற்றமும், லாபமும் கிடைக்கும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் தேடி வரும். வேலையில் உள்ளவர்களுக்கு இடமாற்றம், சம்பள உயர்வு கிடைக்கும். சிலரின் வாழ்க்கை துணைக்கு வேலை மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்களுக்கு பணி நிரந்தரமாகும்.

    உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய காலம். உடல் உஷ்ணம் மற்றும் கண் தொடர்பான பாதிப்புகள் ஏற்படலாம். கணவன், மனைவியிடம் சிறு,சிறு மன பேதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை பாதிக்காது. நண்பர்கள் மற்றும் தொழில் கூட்டாளிகளுக்கு ஜாமீன் போடக்கூடாது. தினமும் ஆதித்திய ஹிருதயம் கேட்கவும் அல்லது படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    வார ராசிபலன் 20.4.2025 முதல் 26.4.2025 வரை

    20.4.2025 முதல் 26.4.2025 வரை

    காரியத்தடை அகலும் வாரம். பாக்கிய ஸ்தானத்தில் ராசி அதிபதி சூரியன் உச்சம் பெறுவதால் பிறர் எளிதில் செய்யத் தயங்கும் காரியத்தையும் நீங்கள் வெற்றிகரமாக செய்வீர்கள். அஷ்டமச் சனி முடியும் வரை திருமண முயற்சியை தவிர்க்கவும். வெளி நாட்டு குடியுரிமை முயற்சியில் வெற்றி உண்டாகும். புகழ் அந்தஸ்து உயரும். தடைபட்ட உயர் ஆராய்ச்சி கல்வி முயற்சி கூடும்.

    திற மைக்கும், தகுதிக்கும். தகுந்த உத்தியோகம் கிடைக்கும். சிலர் வெளிநாட்டிற்கு இடம் பெயரலாம். சிலர் தொழில் மற்றும் உத்தியோகத்திற்காக அடிக்கடி அலைச்சல் மிதந்த பயணம் செய்ய நேரும். பெண்களுக்கு மன உளைச்சல் நீங்கி நிம்மதி கிடைக்கும். பூர்வீக சொத்து சம்மந்தப்பட்ட முயற்சிகள் இழுபறியாகும்.

    செயற்கை முறை கருத்தரிப்பு பலன் தரும். முதியவர்களுக்கு, அரசின் உதவித் தொகை, பென்சன் கிடைக்கும். 25.4.2025 அன்று காலை 3.25 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் வேண்டாத வேலையை அடுத்தவர் பிரச்சனையை இழுத்துப் போட்டு வீண் அவமானம், பிரச்சனையை சந்திப்பீர்கள். மேலும் சுப பலன் கிடைக்க மகிஷாசுரமர்த்தினியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    வார ராசிபலன் 13.4.2025 முதல் 19.4.2025 வரை

    13.4.2025 முதல் 19.4.2025 வரை

    பாக்கிய பலன்கள் மிகுதியாகும் வாரம். ராசி அதிபதி சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் அடைவதால் ஆன்ம பலம் பெருகும். சுய ஜாதக ரீதியான தோஷங்களும் சாபங்களும் விலகும். அஷ்டமச் சனியினால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. தொட்டது துலங்கும். தடைக்கற்கள் படிக்கற்களாக மாறும்.பெற்றோர்கள், பெரியோர்கள், முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். ஆன்மீக தலங்களுக்கு சுற்று பயணம் செய்து மகிழ்வீர்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்பு அரசாங்க உத்தியோகம் அல்லது அதற்கு இணையான வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

    குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களின் மனமறிந்து நடந்து கொள்வார்கள். மனதிற்கு இனிமை தரும் இடமாற்றங்கள் கிடைக்கும். வாடகை வருமானம் தரக் கூடிய சொத்துக்கள் சேரும். தடைபட்ட வாடகை வருமானம் வரத் துவங்கும். வீண், இழப்புகள், விரயங்கள் நஷ்டங்கள் குறையத் துவங்கும். கடந்த கால இழப்புகளை ஈடு செய்யும் அளவில் லாபங்கள் அதிகரிக்கும். வராத கடன்கள் வசூலாகும். குழந்தை பாக்கியத்தில் நிலவிய தடை தாமதங்கள் அகலும். பேரன் பேத்தி பிறக்கும். அரச மரத்தடி விநாயகரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    வார ராசிபலன் 06.4.2025 முதல் 12.4.2025 வரை

    06.4.2025 முதல் 12.4.2025 வரை

    சிக்கனத்தை கடை பிடிக்க வேண்டிய வாரம்.தற்காலிகப் பணியில் இருப்பவர்களுக்கு வேலை நிரந்தரமாகும். பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். வாழ்க்கைத் துணைக்கு விரும்பிய வேலை கிடைக்கும். இந்த வாரம் வீடு, வாகன யோகம் உண்டாகும். பூர்வீக சொத்து தொடர்பான சர்ச்சையில் மூத்த சகோதர, சகோதரியின் ஆதரவு மகிழ்சியைத் தரும். சிலர் குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு இடம் பெயரலாம். தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் லாபகரமாக இருந்தாலும் விரயங்கள் அதிகரிக்கும். குடும்பச் சுமை கூடும்.

    வரவை விட செலவு அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தால் பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து விடுபடலாம். சிலர் ஆரோக்கியத்தை சீராக்க மாற்று மருத்துவ முறையை நாடலாம். தேவையற்ற வாக்குவாதத்தால் குடும்பத்தில் பிரச்சினைகள் எழலாம். எனவே, அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் நிம்மதியான சூழ்நிலை உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சிவ வழிபாட்டால் சுப பலன்கள் உண்டாகும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    வார ராசிபலன் 30.3.2025 முதல் 5.4.2025 வரை

    30.3.2025 முதல் 5.4.2025 வரை

    அஷ்டமச் சனி துவங்கி விட்டது. பயம் தான் ஒரு மனிதனுக்கு எதிரி. மனிதனைக் கொல்வது நோயா பயமா என்று ஆய்வு செய்தால் பய உணர்வு தான் முன்னே நிற்கும். வாழ்க்கையை பாதிக்கும் எந்த புதிய முடிவும் எடுக்காமல் இயல்பான வழக்கமான பணியில் ஈடுபட்டால் எந்த பாதகமும் ஏற்படாது என்பதை உறுதியாக கூறலாம். அதே போல் குறி கேட்பது, வாக்கு சொல்பவரை நாடுவது பத்து ஜோதிடரிடம் அஷ்டமச் சனிக்கு பலன் கேட்பது ஆகியவற்றைத் தவிர்த்தால் நிம்மதியாக இருக்க முடியும்.

    என் அனுபவத்தில் இதுவரை ஜாதகம் பார்க்க வருபவர்களுக்கு அஷ்டமச் சனி, ஏழரைச் சனி என்று பலன் சொன்னதாக எனக்கு நினைவு இல்லை. இந்த காலகட்டத்தில் பிரபஞ்ச சக்தியை ஆத்மார்த்தமாக சரணாகதி அடையுங்கள். உங்களின் சந்தோஷத்தையும், துக்கத்தையும் உறவினர்களிடம் கொட்டித் தீர்க்காதீர்கள். நடந்த கெட்ட விஷயத்தை உடனே மறந்து விடுங்கள். சந்தோஷமான நிகழ்விற்கு கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். 30.3.2025 அன்று மாலை 4.35 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற பேச்சை குறைக்கவும். தினமும் சிவபுராணம் படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    30.3.2025 முதல் 05.4.2025 வரை

    அஷ்டமச் சனி துவங்கி விட்டது. பயம் தான் ஒரு மனிதனுக்கு எதிரி. மனிதனைக் கொல்வது நோயா பயமா என்று ஆய்வு செய்தால் பய உணர்வு தான் முன்னே நிற்கும். வாழ்க்கையை பாதிக்கும் எந்த புதிய முடிவும் எடுக்காமல் இயல்பான வழக்கமான பணியில் ஈடுபட்டால் எந்த பாதகமும் ஏற்படாது என்பதை உறுதியாக கூறலாம். அதே போல் குறி கேட்பது, வாக்கு சொல்பவரை நாடுவது பத்து ஜோதிடரிடம் அஷ்டமச் சனிக்கு பலன் கேட்பது ஆகியவற்றைத் தவிர்த்தால் நிம்மதியாக இருக்க முடியும்.

    என் அனுபவத்தில் இதுவரை ஜாதகம் பார்க்க வருபவர்களுக்கு அஷ்டமச் சனி, ஏழரைச் சனி என்று பலன் சொன்னதாக எனக்கு நினைவு இல்லை. இந்த காலகட்டத்தில் பிரபஞ்ச சக்தியை ஆத்மார்த்தமாக சரணாகதி அடையுங்கள். உங்களின் சந்தோஷத்தையும், துக்கத்தையும் உறவினர்களிடம் கொட்டித் தீர்க்காதீர்கள். நடந்த கெட்ட விஷயத்தை உடனே மறந்து விடுங்கள். சந்தோஷமான நிகழ்விற்கு கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். 30.3.2025 அன்று மாலை 4.35 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற பேச்சை குறைக்கவும். தினமும் சிவபுராணம் படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    வார ராசிபலன் 23.3.2025 முதல் 29.3.2025 வரை

    23.3.2025 முதல் 29.3.2025 வரை

    அமைதி காக்க வேண்டிய நேரம். இந்த வாரத்தில் கண்டகச் சனி முடிந்து அஷ்டமச் சனி துவங்கப் போகிறது. பணம் குறைவாக கிடைத்தாலும் மனதிற்கு பிடித்த வேலையை மட்டுமே செய்ய விரும்புவீர்கள்.தொழில் கூட்டாளி அல்லது நண்பர்கள் நடவடிக்கையால் மன அழுத்தம் உருவாகும். போட்டி, பொறாமையை சமாளிக்க திணறுவீர்கள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களால் சிக்கல்கள் ஏற்படலாம். சிலர் புதிய சொத்துக்களில் முதலீடு செய்யலாம். அதிர்ஷ்டத்தின் மேல் ஆர்வம் அதிகரிக்கும்.சிலர் உத்தியோகம் அல்லது தொழில் மாற்றங்களை சந்திக்க நேரும்.

    சில வாரங்களில் பெற்றோர் வழிச் சொத்துகளை பிரிப்பதில் நிலவிய குழப்பங்கள் அகலும்.இதில் பெற்றோர்களின் அன்பும், ஆசீர்வாதமும் உங்களுக்கு துணையாக இருக்கும். ஜாமீன் போடக் கூடாது. கடன் கொடுக்கக் கூடாது. விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பாதுகாக்க வேண்டும். 28.3.2025 மாலை 4.47-க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் தேவையற்ற கற்பனை, பயங்கள் உருவாகி மறையும். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பணி மீண்டும் உங்களை வந்தடையும். அமாவாசையன்று வெண்மையான மலர்களால் அம்பிகையை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    வார ராசிபலன் 16.3.2025 முதல் 22.3.2025 வரை

    16.3.2025 முதல் 22.3.2025 வரை

    சுமாரான வாரம்.ராசி அதிபதி சூரியன் அஷ்டம ஸ்தானம் செல்கிறார். அஷ்டம ஸ்தானத்தில் 4 கிரகச் சேர்க்கை ஏற்படுகிறது. ராசியில் சனி பார்வை பதிவது சில நாட்களுக்கு மட்டுமே என்று ஆறுதல் அடைந்தால் அஷ்டமச் சனி துவங்குவது மன பயத்தை ஏற்படுத்தலாம். அஷ்டமச் சனியின் காலம் என்பதால் முக்கியமான பணிகளை விரைந்து முடிப்பது சிறப்பு. குடும்ப உறவுகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. அரசு பதவி, அரசு உத்தியோகம், அரசு வகை ஆதரவு உண்டு. சொத்து இல்லாத வர்களுக்கு புதியவீடு, வாகன யோகம் உண்டாகும்.

    சிலருக்கு குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் எண்ணம் அதிகரிக்கும். தொழில் வியாபரம் தொடர்பான சிறு அலைச்சல் இருந்தாலும் அதன் மூலம் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.சுய ஜாதக தசா புக்தி சாதகம் அறிந்து செயல்பட வேண்டும். சக ஊழியர்கள் உங்களுக்கு அனுசரனையாக நடந்து கொள்வார்கள். சகோதர உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும்.கடமைகளை சரியாகச் செய்யுங்கள். அனைத்தும் வெற்றி பெறும் நல்ல காலமாக இந்த வாரம் அமையும். தினமும் திருக்கோளறு பதிகம் படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    வார ராசிபலன் 9.3.2025 முதல் 15.3.2025 வரை

    9.3.2025 முதல் 15.3.2025 வரை

    சுமாரான வாரம். கண்டகச் சனி விலகி அஷ்டமச் சனி துவங்கப் போகிறது. ராசி அதிபதி சூரியன் அஷ்டமாதிபதி சனியுடன் இணைந்து தன் வீட்டைத் தானே பார்ப்பதால் வேலைப்பளு மிகுதியாகும். உழைத்த கூலி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். மறைமுக எதிரிகள் உருவாகலாம். நெருக்கமானவர்களே உங்களுக்கு எதிராக திரும்பும் வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். பங்கு வர்த்தகத்தை தவிர்க்கவும். சிலருக்கு வீடுமாற்றம், தொழில் இடமாற்றம் போன்றவைகள் நடக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் வரும்.உயர் கல்வி முயற்சி வெற்றி தரும்.

    விண்ணப்பித்த வீடு, வாகன கடன் கிடைக்கும். சகோதர, சகோதரிகளின் பணத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.பிள்ளைகளின் திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். தேவையற்ற பேச்சையும், வாக்கு கொடுப்பதையும் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு தாய்மாமாவால் வீண் செலவு அல்லது கடன் உருவாகும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற பேச்சை தவிர்க்கவும். இளம் பெண்க ளுக்கு கருவுறுதல் நடைபெறும் வாய்ப்புள்ளது. மாசி மகத்தன்று ஆதித்ய ஹிருதயம் படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    வார ராசிபலன் 02.03.2025 முதல் 08.03.2025 வரை

    02.03.2025 முதல் 08.03.2025 வரை

    கொள்கை பிடிப்போடு செயல்படும் வாரம். ராசி அதிபதி சூரியன் தன் வீட்டைத் தானே பார்ப்பதால் ஆன்ம பலம் பெருகும். தொழிலில் நினைப்பதொன்று, நடப்ப தொன்றுமாக இருந்த நிலை மாறும். ஏழாம் அதிபதி சனியுடன் சூரியன் இணைவதால் கணவன் மனைவி ஒற்றுமை பெருகும்.

    சிலருக்கு பொதுக் காரியங்களில் ஆர்வம் உண்டாகும். கருத்து வேறுபாட்டால் பிரிந்த கணவன், மனைவி மீண்டும் இணைந்து குடும்பம் நடத்துவார்கள். சிலர் பிள்ளைகளின் கல்விக்காக இடப் பெயர்ச்சி செய்ய நேரும்.

    அஷ்டமச் சனி துவங்குவதை நினைத்து கவலைப் படாமல் உங்கள் கடமையில் கவனமாக இருந்தால் நவ கிரகங்களும் உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். சிலர் மன நிம்மதிக்காக ஆன்மீக சுற்றுப் பயணம் செல்வார்கள்.

    3.3.2025 அன்று மாலை 6.39 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் நிதானத்தை கடைபிடிக்கவும். பேச்சில் நிதானம் தேவை. அமைதியாக இருப்பது அவசியம். அமைதியால் அனைத்து பிரச்சனைகளும் அடிப்பட்டு போகும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் ஆன்மபலம் உயரும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×