search icon
என் மலர்tooltip icon
    • ஒவ்வொரு சுற்றுக்கும் 50 வீரர்கள் களம் இறங்கி மாடுகளை பிடிப்பார்கள்.
    • மொத்தம் 1000 மாடுகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்படுகின்றன.

    பொங்கல் பண்டிகையான நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 1,100 காளைகள் சீறிப்பாய்ந்தன. 900 வீரர்கள் மாடுகளை பிடிக்க முயன்றனர்.

    இதில் வி.கே. சசிகலா காளைக்கு சிறந்த காளைக்கான டிராக்டர் பரிசு வழங்கப்பட்டது. 19 காளைகளை அடக்கி கார்த்தி முதலிடம் பிடித்தார். இவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. வீரர்கள் உறுதி மொழி ஏற்று மாடுகளை பிடிக்ச் சென்றர். முதலாவதாக கோவில் மாடு அவிழ்த்து விடப்பட்டது. அதன்பின் ஒவ்வொரு காளைகளாக வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன. மொத்தம் 1,000 காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன. 900 வீரர்கள் காளைகளை அடக்க உள்ளனர்.

    வீரர்கள் அதிகாலை முதல் போட்டி நடைபெறும் இடத்தில் குவிந்தனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இரண்டு கட்ட மருத்துவ பரிசோதனை முடிவடைந்த பிறகே வீரர்கள் மாடு பிடிக்க அனுமதிக்கப்படுவார்கள். மருத்துவ பரிசோதனைக்கு வீரர்கள் முண்டியடித்து சென்றதால் தடுப்புகள் கீழே விழுந்தனர். இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

    மருத்துவம பரிசோதனைக்குப் பிறகு வீரர்கள் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அனுமதிக்கப்படுவார்கள். ஒவ்வொரு சுற்றிலும் அதிக மாடுகள் பிடிக்கப்பட்ட வீரர் இறுதிச் சுற்றுக்கு அனுமதிக்கப்படுவார். இறுதிச் சுற்று முடிவில் அதிக காளை பிடிக்கும் வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படும்.

    அதேபோல் காளைகளை உரிமையாளர்கள் நள்ளிரவு முதல் பாலமேடுக்கு அழைத்து வந்தனர். காளைக்கு மருத்துவபரிசோதனை செய்யப்பட்டு, அதன்பின் டோக்கன் வழங்கப்படும். டோக்கன் அடிப்படையில் காளைகள் அவிழ்த்துவிடப்படும்.

    • பொங்கல் பண்டிகை ஒவ்வொருவரின் மனதில் மகிழ்ச்சியையும், உடலில் உற்சாகத்தையும் கொண்டுவரட்டும்! என்று பதிவிட்டு இருந்தார்.
    • பூக்கும் புன்னகை ஒவ்வொன்றிலும் மனம் நிறைகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு தமிழகத்தில் 2.21 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு கடந்த வாரம் வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து எக்ஸ் தள பக்கத்தில் டாக்டர். மாளவிகா ஐயர் என்பவர், தமிழக அரசு வழங்கிய இலவச சேலை அணிந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, தமிழக அரசின் விலையில்லா பொங்கல் சேலையில், விலை மதிப்பில்லாத புன்னகையுடன் உங்கள் மாளவிகா! பொங்கல் பண்டிகை ஒவ்வொருவரின் மனதில் மகிழ்ச்சியையும், உடலில் உற்சாகத்தையும் கொண்டுவரட்டும்! என்று பதிவிட்டு இருந்தார்.

    இந்த நிலையில், மாளவிகாவின் எக்ஸ் தள பக்கத்தை பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:- பூக்கும் புன்னகை ஒவ்வொன்றிலும் மனம் நிறைகிறேன் என்று பதிவிட்டுள்ளார். 



    • நான் 1978-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநில முதல்வராக இருந்தேன்.
    • அப்போது அமித் ஷா எங்கிருந்தார் என்பது எனக்குத் தெரியாது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கலந்து கொண்டு பேசும்போது, 1978-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சரத் பவாரின் துரோக அரசியல், 2024 மகாராஷ்டிர மாநில தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது எனக் கூறினார்.

    இந்த நிலையில் அமித் ஷாவின் விமர்சனத்திற்கு சரத் பவார் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக சரத் பவார் கூறுகையில் "நான் 1978-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநில முதல்வராக இருந்தேன். அப்போது அமித் ஷா எங்கிருந்தார் என்பது எனக்குத் தெரியாது. நான் முதல்வராக இருந்தபோது, ஜன சங்கத்தை சேர்ந்த உத்தமராவ் பாட்டீல் போன்றவர்கள் (பாஜக-வின் முன்னோடிகள்) என்னுடைய மந்திரி சபையில் இடம் பிடித்தனர். அரசியல் தலைவர்களிடையே முன்னதாக நல்ல தொடர்பு இருந்தது. தற்போது அது இல்லை" என்றார்.

    இதற்கு சான்றாக 2001-ம் ஆண்டு புஜ் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, தான் எதிர்க்கட்சியில் இருந்தாலும் கூட, வாஜ்பாய் தன்னை பேரிடர் நிர்வாக ஆணையத்தின் துணைத் தலைவராக்கினார் என சரத் பவார் தெரிவித்தார்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 15 ஜனவரி 2025

    முன்னேற்றம் ஏற்படும் நாள். அலுவலக பணிகளில் ஏற்பட்ட தாமதங்கள் அகலும். பிள்ளைகளின் பழக்க வழக்கங்களை நெறிப்படுத்துவீர்கள். நெடுநாளைய நண்பர் ஒருவரின் சந்திப்பு கிட்டும்.

    கும்பம்

    இன்றைய ராசிபலன் - 15 ஜனவரி 2025

    நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும். 

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 15 ஜனவரி 2025

    முயற்சிகளில் ஏற்பட்ட தடுமாற்றம் அகலும் நாள். வெளியூர் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் நிறைவேறும். பிரபலமானவர்களின் சந்திப்பால் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 15 ஜனவரி 2025

    நட்பு பகையாகும் நாள். பேச்சிலும், செயலிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். உறவினர் பகை உருவாகலாம். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது. 

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 15 ஜனவரி 2025

    சான்றோர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். தொலைபேசி வழித்தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணை புரியும். வரன்கள் வாயில் தேடிவரும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 15 ஜனவரி 2025

    எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு. பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர். 

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 15 ஜனவரி 2025

    முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வரலாம்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 15 ஜனவரி 2025

    பொறுப்புகள் அதிகரிக்கும் நாள். பொதுநல ஈடுபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். தனவரவு தாராளமாக வந்து சேரும். தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்யும் எண்ணம் மேலோங்கும். 

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 15 ஜனவரி 2025

    வீடு மாற்றம் பற்றிச் சிந்திக்கும் நாள். உடன்பிறப்புகள் வழியில் ஏற்பட்ட உபத்திரவங்கள் மாறும். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் உண்டு.

    ×