என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • எம்புரான்' திரைப்படம் உலகளவில் வெளியான 2 நாளில் 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனை.
    • எம்புரான் படத்தில் 2002 குஜராத் கலவரத்தை தொடர்புபடுத்தும் காட்சிகள் உள்ளதாக சர்ச்சை எழுந்தது

    நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உலகம் முழுவதும் வெளியானது 'எம்புரான். கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் இதுவாகும்.

    எம்புரான்' திரைப்படம் உலகளவில் வெளியான 2 நாளில் 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.

    எம்புரான் படத்தின் வில்லன் காதாபாத்திற்கு பால்ராஜ் படேல் என்கிற பாபா பஜ்ரங்கி என்று பெயரிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்துத்த்துவா வலதுசாரி அமைப்பான பஜ்ரங் தளத்தின் முன்னாள் தலைவரான பாபுபாய் படேல் என்கிற பாபு பஜ்ரங்கி, 2002 குஜராத் கலவரத்தில், 97 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    2022 குஜராத் கலவரத்திற்கு தொடர்புடைய பாபுபாய் படேல் என்கிற பாபு பஜ்ரங்கி என்ற பெயருடன் எம்பூரான் படத்தின் வில்லன் பெயர் பொருந்தி போவதால் இப்படத்திற்கு இந்துத்த்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்துத்துவ அமைப்பினர் எதிர்ப்பை அடுத்து, எம்புரான் படத்திற்கு 17 இடங்களில் காட்சிகள் நீக்கப்பட்டது.இதனிடையே , எம்புரான் பட சர்ச்சை தொடர்பாக நடிகர் மோகன்லால் வருத்தம் தெரிவித்தார்.

    இந்நிலையில், எம்புரான் பட சர்ச்சை தொடர்பாக இயக்குனர் பிரித்விராஜை ஆதரித்து அவரது தாயார் மல்லிகா பேஸ்புக்கில் நீண்ட பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

    எம்புரான் திரைப்படம் பலரின் கூட்டுமுயற்சியால் உருவாகியிருந்தாலும் இப்படம் தொடர்பான சர்ச்சையில் தனது மகன் மட்டும் பலிகடா அளிக்கப்படுவதாக பிரித்விராஜின் தாயார் ஆதங்கத்துடன் இப்பதிவில் தெரிவித்துள்ளார்.

    மேலும், "எம்புரான் படத்தில் இடம்பெற்ற காட்சிகள் அனைத்தையும் மோகன்லால் நன்றாகவே அறிவார். ஆகவே சர்ச்சியுரிய காட்சிகளுக்கு தனது மகனை மட்டும் பொறுப்பாக்குவது முறையல்ல" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • மித்ரன் இயக்கத்தில் கார்த்தி சர்தார் 2 திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • சர்தார் 2 படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் பி.எஸ். மித்ரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'சர்தார்.' இந்தப் படத்தின் வெளியீட்டின் போதே இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. சர்தார் திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வேக வேகமாக உருவானது.

    அதன்படி, சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில், படத்திற்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

    இதனையடுத்து, படத்தின் முன்னோட்ட வீடியோவை படக்குழு மதியம் 12.45 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    சர்தார் 2 படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    மேலும், ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு பணிகளையும், கலை இயக்குநராக ராஜீவன், சண்டை பயிற்சி திலீப் சுப்பராயன், படத்தொகுப்பு பணிகளை விஜய் வேலுக்குட்டி மேற்கொண்டுள்ளார்.

    • இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிக்கு முன்னாள் இந்திய அணி கேப்டன் ஐ.எம்.விஜயன் கேப்டனாக இருந்தார்.
    • பிரேசில் கால்பந்து வீரர் ரொனால்டினோ நடிகர் அஜித்-ன் மகன் ஆத்விக்கை சந்தித்து ஊக்கப்படுத்தினார்.

    பிரேசில் லெஜண்ட்ஸ், இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிகள் இடையேயான நட்சத்திர கால்பந்து போட்டி சென்னை ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

    இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிக்கு முன்னாள் இந்திய அணி கேப்டன் ஐ.எம்.விஜயனும், பிரேசில் லெஜண்ட்ஸ் அணிக்கு ரொனால்டினோவும் கேப்டன்களாக இருந்தனர்.

    போட்டியின் முடிவில் பிரேசில் லெஜண்ட்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தியது.

    இந்தப் போட்டியைக் காண திரண்டு வந்த கால்பந்து ரசிகர்கள் மைதானத்தில் தங்கள் ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.

    பிரேசில் லெஜெண்ட்ஸ் vs இந்தியா ஆல் ஸ்டார்ஸ் கால்பந்து போட்டியை நடிகை ஷாலினி அஜித்குமார் பார்த்து ரசித்தார். பிரேசில் நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டினோ நடிகர் அஜித்-ன் மகன் ஆத்விக்கை சந்தித்து ஊக்கப்படுத்தினார்.

    • பவர் ஸ்டார் பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு.
    • எம்.எம்.கீரவாணி படத்தின் இசையமைப்பை மேற்கொள்கிறார்.

    பவர் ஸ்டார் பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு. இத்திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை அதிகரித்திருக்கிறது.

    பவன் கல்யாணின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் படம் என்பதால் ரசிகர்கள் ஏகோபித்த எதிர்பார்ப்புடன் பாடலை ஹிட் அடித்து வருகிறார்கள். .

    ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி படத்தின் இசையமைப்பை மேற்கொள்கிறார்.

    ஜோதி கிருஷ்ணா, கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் மேகா ஸூர்யா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஏ.எம். ரத்த்னம் தயாரிக்கும் ' ஹரி ஹர வீர மல்லு . திரைப்படம் வரும் மே மாதம் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இந்நிலையில் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

    • இயக்குநர் அட்லி அடுத்து இயக்கும் படத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கவுள்ளார்.
    • இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    தமிழில் வெளியான 'ராஜா ராணி' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. இவர் கடைசியாக இயக்கிய 'ஜவான்' திரைப்படம் உலகளவில் ரூ. 1,100 கோடியை கடந்து அசத்தியது.

    இந்த நிலையில், இயக்குநர் அட்லி அடுத்து இயக்கும் படத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அல்லு அர்ஜுன் இரு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன் அட்லீ இயக்கிய மெர்சல், பிகில் மற்றும் ஜவான் திரைப்படங்களில் இரு வேடங்களில் கதாநாயகர்கள் நடித்து இருப்பனர். அந்த வகையில் இப்படமும் அமையவுள்ளது.

    இப்படம் ஒரு பேரலல் யூனிவர்ஸ் ஆக்ஷன் எண்டர்டெயினர் கதைக்களத்தில் உருவாக இருக்கிறது. படத்தின் ப்ரோமோ ஷூட் முடிவடைந்துள்ளதாகவும். வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு இந்த ப்ரோமோவை படக்குழு வெளியிடவுள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • பிரபலமான தமிழ் யூடியூப் சேனலில் விஜே சித்து vlogs முக்கிய பங்கை வகிக்கும்
    • டிராகன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

    பிரபலமான தமிழ் யூடியூப் சேனலில் விஜே சித்து vlogs முக்கிய பங்கை வகிக்கும். இவர்களின் வீடியோ அனைத்துமே மில்லியன் வியூஸ்களை அள்ளும். இவர்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. பல இளைஞர்களில் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் இவர்களது வீடியோக்கள் இருப்பதால் மக்கள் இதனை கொண்டாடி ரசித்து வருகின்றனர்.

    சமீபத்தில் சித்து மற்றும் ஹர்ஷத் கான் இருவரும் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இவர்களது கதாப்பாத்திரத்தை மக்கள் கொண்டாடினர்.

     

    இந்நிலையில் அடுத்ததாக சித்து இயக்குன்நர் அவதாரம் எடுக்கவுள்ளார். இவரே படத்தை இயக்கி அதில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டெர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் அறிவிப்பை விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

    • தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக 'இட்லி கடை' என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது.
    • அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான 'பவர் பாண்டி', 'ராயன்' போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அடுத்து இவரது இயக்கத்தில் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படம் அண்மையில் வெளியானது. இதனை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக 'இட்லி கடை' என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது.

    இது தனுஷின் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. எம்மாதிரியான கதைக்களத்துடன் இப்படம் இருக்கும் என மக்களிடம் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இதனிடையே இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.ஆனால் திரைப்படத்தின் சில காட்சிகள் இன்னும் எடுக்கப்படாதலால் திரைப்படம் அந்த தேதியில் வெளியாகாது என படக்குழு சமீபத்தில் தெரிவித்தது.

    இந்நிலையில் படத்தின் ஓடிடி உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான நெபிளிக்ஸ் கைப்பற்றியுள்ளதாகவும். அதனை 45 கோடிக்கும் மேல் கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • சிபி சத்யராஜ் அடுத்ததாக டென் ஹவர்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தை அறிமுக இயக்குநரான இளையராஜா கலியபெருமாள் இயக்கியுள்ளார்

    சிபி சத்யராஜ் அடுத்ததாக டென் ஹவர்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநரான இளையராஜா கலியபெருமாள் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்கள் கவனத்தை பெற்றது. இப்படம் ஒரு பஸ்ஸில் நடந்த கொலை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. ஓர் இரவில் அதை கண்டுபிடிக்கும் கதாநாயகன்.

    திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருந்தது ஆனால் சில சூழ்நிலையில் காரணமாக வெளியிடவில்லை. இந்நிலையில் திரைப்படத்தின் இரண்டாம் டிரெய்லரை படக்குழு நாளை மாலை மணிக்கும் வெளியிவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.

    படத்தின் இசையை கே எஸ் சுந்தரமூர்த்தி மேற்கொண்டுள்ளார்.ஒளிப்பதிவு -ஜெய் கார்த்திக் செய்துள்ளார். டுவின் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.

    • தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் பூரி ஜெகநாத்.
    • கடந்த 2000 ஆம் ஆண்டில் பவன் கல்யாண் நடிப்பில் பத்ரி திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார்.

    தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் பூரி ஜெகநாத். இவர் கடந்த 2000 ஆம் ஆண்டில் பவன் கல்யாண் நடிப்பில் பத்ரி திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். அதை தொடர்ந்து மகேஷ் பாபு நடிப்பில் போக்கிரி திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்று படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்தனர்.

    இவர் இயக்கிய இட்லு ச்ரவனி சுப்ரமணியம்,அப்பு, இடியட், சிவமணி, பிஸ்னஸ்மேன், ஹார்ட் அடாக், டெம்பர், இஸ்மார்ட் ஷங்கர் திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது.

    இவர் கடைசியாக டபுள் இஸ்மார்ட் திரைப்படத்தை இயக்கினார். ஆனால் இப்படம் மக்களிடையே எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் பூரி ஜெகநாத் அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதி வைத்து திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

    விஜய் சேதுபதி நடித்து அவரது 50-வது திரைப்படமான மகாராஜா திரைப்படம் மாபெரும் வெற்றிப்பெற்றது. இதை தொடர்து அடுத்ததாக பூரி ஜெகநாத் இணைந்துள்ளார். இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.

    பூரி ஜெகநாத் சமீபத்தில் இயக்கிய எந்த திரைப்படமும் சரியாக மக்களிடம் வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் விஜய் சேதுபதி இவருடன் இணைவது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது இதனை நெட்டிசன்கள் பதிவிட்டுவருகின்றனர். விஜய் சேதுபதி நடித்த ஏஸ் திரைப்படம் விரைவில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • மித்ரன் இயக்கத்தில் கார்த்தி சர்தார் 2 திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • படத்தின் டீசர் நாளை வெளியாகிறது.

    நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் பி.எஸ். மித்ரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'சர்தார்.' இந்தப் படத்தின் வெளியீட்டின் போதே இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. சர்தார் திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வேக வேகமாக உருவானது.

    அதன்படி, சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில், படத்திற்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் படத்தின் முன்னோட்ட வீடியோவை படக்குழு நாளை வெளியிடவுள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. அதில் சர்தார் பாகம் 1 படத்தின் ஒரு ரீகேப் போல அமைந்துள்ளது.

    சர்தார் 2 படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    மேலும், ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு பணிகளையும், கலை இயக்குநராக ராஜீவன், சண்டை பயிற்சி திலீப் சுப்பராயன், படத்தொகுப்பு பணிகளை விஜய் வேலுக்குட்டி மேற்கொண்டுள்ளார்.

    • எம்புரான்' திரைப்படம் உலகளவில் வெளியான 2 நாளில் 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.
    • எம்புரான் படத்தின் வில்லன் காதாபாத்திற்கு பால்ராஜ் படேல் என்கிற பாபா பஜ்ரங்கி என்று பெயரிடப்பட்டது

    நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உலகம் முழுவதும் வெளியானது 'எம்புரான். கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் இதுவாகும்.

    எம்புரான்' திரைப்படம் உலகளவில் வெளியான 2 நாளில் 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.

    எம்புரான் படத்தின் வில்லன் காதாபாத்திற்கு பால்ராஜ் படேல் என்கிற பாபா பஜ்ரங்கி என்று பெயரிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்துத்துவா வலதுசாரி அமைப்பான பஜ்ரங் தளத்தின் முன்னாள் தலைவரான பாபுபாய் படேல் என்கிற பாபு பஜ்ரங்கி, 2002 குஜராத் கலவரத்தில், 97 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    2022 குஜராத் கலவரத்திற்கு தொடர்புடைய பாபுபாய் படேல் என்கிற பாபு பஜ்ரங்கி என்ற பெயருடன் எம்பூரான் படத்தின் வில்லன் பெயர் பொருந்தி போவதால் இப்படத்திற்கு இந்துத்த்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இப்படத்தில் குஜராத் கலவரங்களை குறித்து காட்சிகள் இருப்பதால் இதை இந்துத்துவ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இதனால் மோகன்லால் மன்னிப்பு கேட்டு பதிவிட்டு இருந்தார். மேலும் எம்புரான் படத்திற்கு 17 இடங்களில் காட்சிகள் நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், எம்புரான் பட சர்ச்சை தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆதரவு கொடுத்து பேசியுள்ளார். திரைப்படத்தை சமீபத்தில் திரையரங்கிள் பார்த்தார் பினராயி விஜயன்.

    அவர் ""நாட்டின் மிக மோசமான இன அழிப்பு சம்பவத்தை 'எம்புரான்' படத்தில் காட்சியாக வைத்தது சங்க பரிவாரம், ஆர்.எஸ்.எஸ், பாஜகவை கோபமடையச் செய்துள்ளது. படத்திற்கு எதிராக பகிரங்கமாக மிரட்டல்கள் விடுத்து வருகின்றனர். இதன் எதிரொலியாக படத்தின் காட்சிகளை நீக்கும் நிலைக்கு தயாரிப்பாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

    பிரிவினைவாதத்திற்கு எதிராக பேசிய என்ற ஒரே காரணத்தால் ஒரு கலை படைப்பு அழிக்கப்படுவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல" என கூறியுள்ளார்.

    • அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
    • சீயான் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது.

    சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன்' படம் பல தடைகளை தாண்டி வெளியானது.

    திரைப்படத்தின் கதைக்களம் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் உருவாகியுள்ளது. சீயான் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது.

    திரைப்படத்தின் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது. நாளுக்கு நாள் முன்பதிவுகள் அதிகரித்து வருகிறது. படத்தின் ப்ரோமோஷன் பணிகளிலும் தமிழ்நடு முழுக்க உள்ள திரையரங்களுக்கு படக்குழு நேரில் சென்று படத்தின் ஆதரவை பார்க்கின்றனர்.

    இந்நிலையில் படத்தின் இரண்டாம் பாகம் வெளியான நிலையில் முதல் பாகமும் மூன்றாம் பாகமும் கண்டிப்பாக எடுப்போம் என சீயான் விக்ரம் சமீபத்தில் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

    ×