என் மலர்
- சென்னையில் உள்ள கோ கார்ட் சர்க்யூட்டில் அஜித்தின் மகன் கார் ரேஸில் பயிற்சி பெற்றார்.
- குடும்பத்தினருடன் சென்று நடிகர் அஜித் மகனை உற்சாகப்படுத்தினார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் அஜித்குமார், நடிப்பை தொடர்ந்து கார் பந்தயத்திலம் அசத்தி வருகிறார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது.
அதேவேளை கலைத்துறையில் ஆற்றி வரும் சிறந்த பங்களிப்புக்காக அஜித்குமாருக்கு, மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது. கார் பந்தயங்களை முடித்துக்கொண்டு, அஜித் சென்னை திரும்பியுள்ளார்.
இந்நிலையில், தந்தை வழியில் கார் ரேஸில் நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் களமிறங்கியுள்ளார்.
சென்னையில் உள்ள கோ கார்ட் சர்க்யூட்டில் அஜித்தின் மகன் கார் ரேஸில் பயிற்சி பெற்றார்.
குடும்பத்தினருடன் சென்று நடிகர் அஜித் மகனை உற்சாகப்படுத்தினார்.
- தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சௌந்தரராஜா.
- நடிப்பு மட்டுமின்றி சமூகம் சார்ந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சௌந்தரராஜா. நடிப்பு மட்டுமின்றி சமூகம் சார்ந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். மரம் வளர்ப்பது தொடர்பாக தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சௌந்தரராஜா இதற்காக பல்வேறு முன்னெடுப்புகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
இதுதவிர நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி அறிவிப்பு வெளியானது முதலே சௌந்தரராஜா அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். முன்னதாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி அறிவிப்புக்கு வாழ்த்து தெரிவித்த சௌந்தரராஜா, பிறகு கட்சியின் கொடி வெளியிட்டதும் அதனை மதுரை மீனாட்சி அம்மன் சன்னதியில் வைத்து சிறப்பாக வழிபாடு நடத்தி இருந்தார். பின்னர் மாநாட்டுக்கு சைக்கிள் பேரணி ஆகியவற்றை முன்நின்று செய்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்திற்காக 'தலைவன் நீயே, தொண்டன் நானே...' என்ற தலைப்பில் ஆல்பம் பாடல் ஒன்றை உருவாக்கும் பணிகளில் நடிகர் சௌந்தரராஜா ஈடுபட்டு வருகிறார். மேலும், இந்த பாடலுக்கான பூஜை இன்று போடப்பட்டுள்ளது. டாக்டர் நந்துதாசன் நாகலிங்கம் இந்த பாடலை எழுத, சந்தோஷ் இசையமைக்கிறார்.
நிரோஜன் இயக்க இருக்கும் இந்த பாரலுக்கு நடன இயக்குநராக பிரசாந்த், புகைப்பட கலைஞராக சக்தி பிரியன் ஆகியோர் பணியாற்ற உள்ளார்கள். இந்தப் பாடலில் நடிகர் சௌந்தரராஜா நடிப்பதோடு மட்டுமல்லாமல் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான மதுரை டூரிங் டாக்கீஸ் மூலம் தயாரிக்கவும் செய்கிறார். இப் பாடல் தொடர்பான இதர விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- TEST படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர்.
- ஹேமந்த் நாராயணன் மர்மர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
டெஸ்ட்
விக்ரம் வேதா', 'இறுதிச்சுற்று', 'மண்டேலா' போன்ற படங்களை தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் எழுதி, இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் 'TEST. இந்தப் படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதற்கு முன் சித்தார்த், மாதவன், மீரா ஜாஸ்மின் ஆகியோர் ஆய்த எழுத்து, ரங் தே பசந்தி ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் திரைப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி உள்ளது.
இந்தத் திரைப்படம் வருகிற நாளை நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது.
மர்மர்
ஹேமந்த் நாராயணன் மர்மர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படமே தமிழில் உருவாகியுள்ள முதல் Found footage ஹாரர் திரைப்படமாகும். Found footage ஹாரர் திரைப்படங்கள் என்றால் திரைப்படத்தின் காட்சிகள் பெரும்பாலானவை டேப் ரெகார்டர், சிசிடிவி கேமரா ஃபூட்டஜ் போலயே காட்சி படுத்திருப்பர்.
இதன் மூலம் உண்மையாகவவே அந்த அமானுஷ்ய சம்பவ உணர்வை அது பார்வையாளர்களுக்கு கடத்தும். திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் டெண்ட் கொட்டா ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.
லெக் பீஸ்
நகைச்சுவை நடிகரான ஸ்ரீனாத் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியானது லெக் பீஸ் திரைப்படம். இப்படம் 5 ஆண்களை சுற்றி நடக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது. படத்தில் யோகி பாபு, ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி மற்றும் ரமேஷ் திலக் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். லெக் பீஸ் படம் நாளை டென்ட் கொட்டா ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.
கர்மா
4 வித்தியாசமான கதாப்பாத்திரத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது கொரியன் திரைப்படமான கர்மா. வெவ்வேறு சூழ்நிலை மற்றும் மனநிலையில் உள்ள மனிதர்கள் ஒரு சூழ்நிலையால் ஒன்று சேர்கிறார்கள்/ இதை மையப்படுத்தியே இக்கதை உருவாகியுள்ளது. இப்படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிதி தளத்தில் வெளியாகிறது.
ராஜாகிளி
சமீபத்தில் சமூத்திரகனி மற்றும் தம்பி ராமையா இணைந்து நடித்த திரைப்படம் ராஜாகிளி. இப்படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.
கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், பழ.கருப்பையா, ஆடுகளம் நரேன், பிரவின்.ஜி, இயக்குனர் மூர்த்தி, 'கும்கி' அஸ்வின், ரேஷ்மா, வெற்றிக்குமரன், தீபா, பாடகர் கிரிஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் ராஜாகிளி திரைப்படம் நாளை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
- அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன்' படம் பல தடைகளை தாண்டி வெளியானது.
திரைப்படத்தின் கதைக்களம் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் உருவாகியுள்ளது. சீயான் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது.
திரைப்படம் வெளியாகி ஒரு வாரம் முடிவடைந்த நிலையில் 37 கோடி ரூபாயை வசூலித்துள்ள நிலையில் தற்பொழுது திரைப்படம் உலகளவில் 52 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக படக்குழு புது போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். திரைப்படம் இந்த வார இறுதியில் அதிகம் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் படத்தில் இடம் பெற்று ஹிட்டான கல்லூரம் வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
- அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
- சீயான் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது.
சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன்' படம் பல தடைகளை தாண்டி வெளியானது.
திரைப்படத்தின் கதைக்களம் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் உருவாகியுள்ளது. சீயான் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது.
திரைப்படம் வெளியாகி ஒரு வாரம் முடிவடைந்த நிலையில் 37 கோடி ரூபாயை வசூலித்துள்ள நிலையில் தற்பொழுது திரைப்படம் உலகளவில் 52 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக படக்குழு புது போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். திரைப்படம் இந்த வார இறுதியில் அதிகம் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இயக்குநர் ஹோசிமின் இயக்கத்தில் சுமோ என்கிற திரைப்படத்தில் நாயகனாக சிவா நடித்துள்ளார்.
- இப்படத்தில் பிரியா ஆனந்த் நாயகியாகவும் நடித்துள்ளார்.
இயக்குநர் ஹோசிமின் இயக்கத்தில் சுமோ என்கிற திரைப்படத்தில் நாயகனாக சிவா நடித்துள்ளார். இப்படத்தில் பிரியா ஆனந்த் நாயகியாகவும் நடித்துள்ளார்.
இப்படத்தில் யோகிபாபு, வி.டி.வி. கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள இப்படத்தில், மல்யுத்த வீரர் யோஷினோரி தாஷிரோவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டே வெளியாக வேண்டிய இத்திரைப்படம் கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் தள்ளிப்போனது.
இந்நிலையில், 'சுமோ' திரைப்படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்தது ஆனால் சில சூழ்நிலை காரணமாக படத்தை வெளியிட முடியவில்லை. தற்பொழுது படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு நாளை மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். அதில் இந்த தடவை மிஸ்ஸே ஆகாது என தெரிவித்துள்ளனர்.
- சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்திற்கு 'லவ் மேரேஜ்' என்று பெயரிட்டுள்ளனர்.
- இப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
அறிமுக இயக்குநர்சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்திற்கு 'லவ் மேரேஜ்' என்று பெயரிட்டுள்ளனர்.
இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக சுஷ்மிதா பட் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ், முருகானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் படத்தின் முதல் பாடலான கல்யாண கலவரம் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை ஷான் ரோல்டன் எழுதி பாடியுள்ளார்.
திருமணம் தாமதமாவதால் ஒருவர், குடும்பத்திலும் சமூகத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சினை மற்றும் சிக்கல்களைப் பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
- இரண்டு வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
- கூலி படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி ஒரு கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கூலி.
இந்தப் படத்தின் டைட்டில் வீடியோ மற்றும் பாடல் க்ளிம்ப்ஸ் உள்ளிட்டவை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இரண்டு வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
கூலி படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். மேலும், படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி ஒரு கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது.
கூலி படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்தார். அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்கினார்.
இந்நிலையில், கூலி படத்தின் புதிய அட்டேட் ஒன்றை நாளை வெளியிடப்படும் என்று படக்குகுழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
- சீயான் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது.
சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன்' படம் பல தடைகளை தாண்டி வெளியானது.
திரைப்படத்தின் கதைக்களம் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் உருவாகியுள்ளது. சீயான் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது.
திரைப்படம் வெளியாகி ஒரு வாரம் முடிவடைந்த நிலையில் 37 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் இயக்குனர் அருண்குமார் பங்கேற்றார். அப்பொழுது திரையரங்கில் மொபைல் யூஸ் செய்வர்களைப் பற்றிய கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் " திரையரங்கில் மொபைலை எடுத்து ஃபோட்டோ எடுப்பவரை பார்த்தால் கோவமாக வரும். "திரையரங்கில் படம் ஆரம்பித்த பிறகு, படத்தின் காட்சிகளை செல்போனில் படம் பிடிப்பது, ஸ்டேடஸ் வைப்பது, இடையில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது, படம் ஆரம்பித்த பிறகு டார்ச் அடித்துக் கொண்டு சீட்டை தேடுவது போன்ற செயல்கள் அதிருப்தி அளிக்கிறது. மக்கள் படத்தை உன்னிப்பாக கவனித்தால்தான் கதையோட்டம் புரியும், இதுபோன்ற இடையூறுகள் காட்சிகளின் ரசனையை குறைக்கும்" என தெரிவித்துள்ளார்.
- ஜே எஸ் கே முதன்முறையாக இயக்குநர் அவதாரம் எடுத்த படம் தான் 'ஃபயர்'.
- பிப்ரவரி 14 அன்று திரையரங்குகளில் வெளியான் 'ஃபயர்', 50 நாட்களைக் கடந்தும் வெற்றி நடை போட்டு வருகிறது.
'தங்க மீன்கள்' மூலம் ராம், 'குற்றம் கடிதல்' வாயிலாக பிரம்மா, 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' ஊடாக பாலாஜி தரணிதரன், 'ரம்மி' வாய்ப்பால் பாலகிருஷ்ணன் என பல்வேறு திறமைமிக்க இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மீது வெளிச்சம் பாய்ச்சியவரும், ஜெ எஸ் கே ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலம் தேசிய விருது பெற்ற வெற்றிப் படங்களை தயாரித்தவருமான ஜெ எஸ் கே சதீஷ் குமார், 'தரமணி' திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகி, 'கபடதாரி', 'ஃபிரெண்ட்ஷிப்', 'அநீதி', 'வாழை' என நடிகராகவும் தொடர்ந்து தன்னை திறம்பட வெளிப்படுத்தி பாராட்டுகளை அள்ளி வருகிறார்.
ஜே எஸ் கே என்று திரையுலகினரால் அன்போடு அழைக்கப்படும் இவர், முதன்முறையாக இயக்குநர் அவதாரம் எடுத்த படம் தான் 'ஃபயர்'. பிப்ரவரி 14 அன்று திரையரங்குகளில் வெளியான் 'ஃபயர்', 50 நாட்களைக் கடந்தும் வெற்றி நடை போட்டு வருகிறது.
பெரிய நட்சத்திரங்கள், இயக்குநர்களின் படங்களின் ஆயுட்காலமே ஒன்று அல்லது அதிகபட்சம் இரண்டு வாரங்கள் என ஆகிவிட்ட இந்த காலகட்டத்தில் 'ஃபயர்' படத்தின் மாபெரும் வெற்றி ஜே எஸ் கே மற்றும் படக்குழுவினரை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் திரையுலகத்தையே உற்சாகப்படுத்தி உள்ளது.
இந்த ஆண்டு சுமார் 80 படங்கள் இதுவரை வெளியாகியுள்ள நிலையில் 'டிராகன்', 'குடும்பஸ்தன்' உள்ளிட்ட வெகு சில திரைப்படங்களே லாபத்தை ஈட்டியுள்ளன. இந்நிலையில் பெரும்பாலும் புதுமுகங்கள் மற்றும் அறிமுக இயக்குநர் கூட்டணியில் உருவான 'ஃபயர்' இத்தகைய வெற்றியை ஈட்டியுள்ளது கதையையும் திறமைகளையும் மட்டுமே நம்பி படமெடுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் பெரும் நம்பிக்கையை ஊட்டி உள்ளது. இப்படத்தை ஜே எஸ் கே ஃபிலிம் கார்ப்பரேஷன் பேனரில் தயாரித்திருப்பதோடு, பிரதான பாத்திரமொன்றில் ஜெ எஸ் கே நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
'ஃபயர்' படத்தின் வெற்றியை தொடர்ந்து படங்களை இயக்குவதற்கும், நடிப்பதற்கும் ஜே எஸ் கே-க்கு அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இது பற்றி கூறிய அவர், "நல்ல உள்ளடக்கத்தை தமிழ் ரசிகர்கள் எப்போதும் ஏற்பார்கள் என்பதற்கு 'ஃபயர்' வெற்றியே சாட்சி. இதற்காக தமிழக மக்களுக்கும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும், படக்குழுவினருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தரமான படங்களை தொடர்ந்து தயாரித்து இயக்குவதோடு மட்டுமில்லாமல், சவாலான வேடங்களில் தொடர்ந்து நடிப்பேன்," என்றார்.
- ஐஷ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் நடித்து வெளியான சுழல் 2 வெப் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
- இப்படத்தை அறிமுக இயக்குநரான தினேஷ் லக்ஷ்மனன் இயக்கியுள்ளார்.
ஐஷ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் நடித்து வெளியான சுழல் 2 வெப் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து அடுத்ததாக `தீயவர் குலை நடுங்க' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநரான தினேஷ் லக்ஷ்மனன் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் முதல் பாடலான அந்திபேர அழகலியே பாடல் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் ஐஷ்வர்யா ராஜேஷுடன் அர்ஜுன், ராம்குமார் சிவாஜி, ஜிகே ரெட்டி, பிரவீன் ராஜா, பிராங்ஸ்டர் ராகுல் மற்றும் தங்கதுரை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை ஜி அருள் குமார் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்திற்கு 'லவ் மேரேஜ்' என்று பெயரிட்டுள்ளனர்.
- இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக சுஷ்மிதா பட் நடித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்திற்கு 'லவ் மேரேஜ்' என்று பெயரிட்டுள்ளனர்.
இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக சுஷ்மிதா பட் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ், முருகானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் படத்தின் முதல் பாடலான கல்யாண கலவரம் பாடல் இன்று மாலை 5 மணிக்கும் வெளியாக இருக்கிறது என்பதை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
திருமணம் தாமதமாவதால் ஒருவர், குடும்பத்திலும் சமூகத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சினை மற்றும் சிக்கல்களைப் பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.