என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
    • 'குட் பேட் அக்லி' படம் உலகம் முழுவதும் கடந்த 10-ந்தேதி வெளியானது.

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள படம் 'குட் பேட் அக்லி'. இப்படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    'குட் பேட் அக்லி' படம் உலகம் முழுவதும் கடந்த 10-ந்தேதி வெளியானது. அஜித் ரசிர்களிடையே பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படம் வெளியாகி ஒரு வாரமே ஆன நிலையில் இந்தியாவில் ரூ.112 கோடி வரை வசூலித்துள்ளது.

    இந்த நிலையில், 'குட் பேட் அக்லி' படம் கேரளாவில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. இதனால் 100 ஸ்கிரீன்களில் இருந்து 200 ஸ்கிரீன்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அஜித்தின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    • நீண்ட இடைவேளைக்குப் பிறகு, காமெடி சரவெடியாக உருவாகியுள்ள திரைப்படம் “கேங்கர்ஸ்”.
    • வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரவுள்ளது

    avni Cinemax (P) Ltd சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் Benz Media PVT LTD சார்பில் A.C.S அருண்குமார் தயாரிப்பில், இயக்குநர் சுந்தர் சி மற்றும் வைகைப்புயல் வடிவேலு கூட்டணியில், நீண்ட இடைவேளைக்குப் பிறகு, காமெடி சரவெடியாக உருவாகியுள்ள திரைப்படம் "கேங்கர்ஸ்".

    வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி, ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில், A.C.S மருத்துவக் கல்லூரி விழாவில், படக்குழுவினர் அனைவரும் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது.

    இந்நிகழ்வினில்..

    நடிகர் மைம் கோபி பேசியதாவது…

    விச்சு அண்ணா தான் என்னை சுந்தர் சி அண்ணனிடம் அறிமுகப்படுத்தி இப்படத்தில் நடிக்க வைத்தார். அவருக்கு நன்றி. சுந்தர் சி எப்படி இருப்பார்? எப்படி நடந்து கொள்வார்? எனத் தயக்கமாக இருந்தது. என்னைப் பார்த்ததும் கை கொடுத்தார், அவர் கை அவ்வளவு சாஃப்டாக இருந்தது. அவர் மனதும் அதே மாதிரி தான். மிக இனிமையானவர். அவருடன் 1000 படம் கூட வேண்டுமானாலும் நடிக்கலாம். இப்படத்தில் வடிவேலு அண்ணனுடன் நடித்தது மகிழ்ச்சி. அவர் நடிப்பைப் பார்க்க அத்தனை அற்புதமாக இருக்கும். அவ்வளவு எக்ஸ்பிரஷன் தருவார். இந்தப்படம் மிக நன்றாக வந்துள்ளது எல்லோரும் தியேட்டரில் போய்ப் படம் பாருங்கள் நன்றி.

    இயக்குநர் சுந்தர் சி பேசியதாவது…

    கல்லூரியில் உங்கள் எல்லோரையும் பார்க்க அத்தனை உற்சாகமாக உள்ளது. இனிமேல் நிறையக் கல்லூரி விழாவிற்கு வருகை தருவேன். நானும் வடிவேல் அண்ணனும் மீண்டும் இணைந்து, உங்களை மகிழ்விக்க, உழைத்துள்ளோம். என் மீது இப்படத்திற்காக நம்பிக்கை வைத்த, ஏ சி சண்முகம் அண்ணன், ஏசிஎஸ் அருண்குமார் ஆகியோருக்கு நன்றி. இந்தப்படம் ஆரம்பிக்க விதை போட்டது வடிவேல் அண்ணன் தான். தமிழில் மணிஹெய்ஸ்ட் மாதிரி ஒரு சின்ன ஊரில், ஆட்டோ ஓட்டுநர், டீச்சர் எல்லாம் வைத்து, பண்ணினால் எப்படி இருக்கும் என்பது தான் கதை. இந்தப்படத்திற்கு என்னடா தலைப்பு வைப்பது எனத் திணறியபோது, வடிவேல் அண்ணன் போற போக்கில் கேங்கர்ஸ் என்றார். அதையே தலைப்பாக வைத்து விட்டோம். கண்டிப்பாக இப்படம் உங்கள் எல்லோரையும் சந்தோசப்படுத்தும் நன்றி.

    நடிகர் வடிவேலு பேசியதாவது…

    முதலில் சுந்தர் அண்ணன் சார்பிலும் என் சார்பிலும் ஏ சி சண்முகம் அய்யா அவர்களுக்கு நன்றி. 10 ஆயிரம் மாணவர்கள் முன்னிலையில் இப்பட விழா நடப்பது மகிழ்ச்சி. நானும் சுந்தர் சி அண்ணனும் 15 வருஷமா சேர வில்லை, நம்மூரில் பிரிச்சி வைக்க ஆளா இல்லை, இடையில் நாங்கள் பிரிந்திருந்தது பெரிதாகத் தெரியவில்லை. இந்தப்படம் எதோ நேற்று செய்த வின்னர் படம் மாதிரி, அத்தனை புதிதாக இருக்கிறது. சுந்தர் சி அண்ணனுக்கு சொல்லவா வேண்டும். ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து உருவாக்கியிருக்கிறார். பேசி முடிச்சு 35 நாளில் இப்படத்தை முடித்து விட்டோம். உங்களுக்குத் தேவையான அத்தனை தீனியும் படத்தில் இருக்கிறது. இது தியேட்டரில் எல்லோரும் சேர்ந்து பார்த்து கொண்டாட வேண்டிய படம். சுந்தர் சி அண்ணன் அருமையாக எடுத்துள்ளார், என்னிடம் என்ன வாங்க வேண்டும் என, அவருக்கும் தெரியும் உங்கள் எல்லோருக்கும் கொண்டாட்டம் காத்திருக்கிறது. அனைவருக்கும் நன்றி.

    • ஜிவி பிரகாஷ் மற்றும் திவ்யா பாரதி நடிப்பில் கமல் பிரகாஷ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியானது கிங்ஸ்டன்
    • கயல் ஆனந்த் மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் தேவராஜ் பரணிதரன் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியானது சிவாங்கி திரைப்படம்.

    'எமகாதகி'

    இயற்கைக்கு அப்பாற்பட்டு இறப்பு வீட்டில் நடக்கும் கதையையும், அமானுஷ்யமான விஷயத்தையும் மையாக கொண்டு உருவாகியுள்ள படம் 'எமகாதகி'. இப்படத்தை ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கியுள்ளார். இப்படத்தில் நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், சுபாஷ் ராமசாமி, ஹரிதா, பொற்கொடி, ஜெய், பிரதீப், ராமசாமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜாதி, காதல், ஆவணப்படுகொலை ஆகியவற்றை பேசும் இப்படம் கடந்த 14-ந் தேதி ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    'ஜென்டில்வுமன்'

    அறிமுக இயக்குனர் ஜோசுவா சேதுராமன் இயக்கத்தில் ஜென்டில்வுமன்' திரைப்படம் உருவாகியுள்ளது. கோமலாஹரி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் லிஜோமோல், ஹரிகிருஷ்ணன் உடன் லாஸ்லியாவும் நடிக்கிறார். கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் கடந்த 14-ந் தேதி டென்ட்கொட்டா ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    கிங்ஸ்டன்

    ஜிவி பிரகாஷ் மற்றும் திவ்யா பாரதி நடிப்பில் கமல் பிரகாஷ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியானது கிங்ஸ்டன் திரைப்படம். இப்படமே தமிழில் முதல் sea adventure திரைப்படமாக உருவானது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. திரைப்படம் கடந்த 13 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.

    தாவீத்

    ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் ஒரு பாக்சிங்கை அடிப்படையாக கொண்டு ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாக உருவாகி வெளியான திரைப்படம் தாவீத். இப்படம் நாளை ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    சிவாங்கி

    கயல் ஆனந்த் மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் தேவராஜ் பரணிதரன் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியானது சிவாங்கி திரைப்படம். இப்படம் நாளை ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    அம் ஆ

    Kaapi Productions தயாரிப்பில், தாமஸ் செபாஸ்டியன் இயக்கத்தில், திலீஷ் போத்தன் மற்றும் தேவதர்ஷினி நடிப்பில், மனதை இலகுவாக்கும், அருமையான அன்பைப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள மலையாளப் படம் "அம் ஆ". இப்படம் நாளை மலையாள மொழியில் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இப்படத்தின் தமிழ்ப் பதிப்பு நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.

    'கத்திஸ் கேங்'

    கத்திஸ் கேங் என்பது ஒரு மலையாளம் திரில்லர் திரைப்படம். இதில் உன்னி லாலு மற்றும் சவுந்தரராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனை அனில் தேவ் இயக்கியுள்ளார். ஒரு கிராமத்தின் பின்னணியில் உருவான இப்படம் திரையறங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படம் நாளை (18-ந் தேதி) சம்பிலி சவுத் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

    'லாக் அவுட்'

    அமித் கோலானி இயக்கியுள்ள படம் 'லாக் அவுட்'. இதில் நிமிஷா நாயர், காந்தர்வ் திவான் மற்றும் புவன் பாம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் ஒரு இளைஞன் தனது ஆன்லைன் நற்பெயரால் பிணைக் கைதியாகப் பிடிபடும் கதையைச் சொல்கிறது. இந்த நிலையில், இப்படம் நாளை ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. 

    • பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `லூசிஃபர்'.
    • எம்புரான்' திரைப்படம் வெளியான 11 நாள்களில் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூலித்தது

    பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `லூசிஃபர்'. இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் `எல் 2: எம்புரான்' கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. முதல் படத்தை போலவே இரண்டாம் பாகத்திற்கும் அதிக வரவேற்பு கிடைத்தது.

    'எம்புரான்' திரைப்படம் வெளியான 11 நாள்களில் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகப் படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

    இதன்மூலம் மலையாளத் திரையுலகில் ரூ.250 கோடி வசூலைக் கடந்த முதல் படம் என்ற பெருமையை எம்புரான் பெற்றுள்ளது. முன்னதாக மலையாளத் திரையுலகில் அதிக வசூலைக் குவித்த 'மஞ்சுமெல் பாய்ஸ்' சாதனையை 'எம்புரான்' திரைப்படம் முறியடித்துள்ளது.

    இதற்கிடையே எம்புரான் படத்தில் குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றதாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் படத்தில் சில காட்சிகளும் நீக்கப்பட்டன. படத்தில் முல்லை பெரியாறு அணை குறித்து தவறான காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளதாக தமிழகத்தில் எதிர்ப்பு குரல்கள் எழுந்தது.

    இந்நிலையில் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி திரைப்படம் வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.

    • சிபி சத்யராஜ் தற்போது டென் ஹவர்ஸ் என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • விஜய் நடித்த 'சச்சின்' படம் 2005-ம் ஆண்டு தமிழ்புத்தாண்டு தினத்தில் திரைக்கு வந்தது.

    டென் ஹவர்ஸ்

    சிபி சத்யராஜ் தற்போது டென் ஹவர்ஸ் என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநரான இளையராஜா கலியபெருமாள் இயக்கியுள்ளார்.இப்படம் ஒரு பஸ்ஸில் நடந்த கொலை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. ஓர் இரவில் அதை கண்டுபிடிக்கும் கதாநாயகன். திரைப்படம் நாளை வெளியாகிறது.

    நாங்கள்

    அவினாஷ் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நாங்கள். இப்படம் தாயின் அரவணைப்பு இல்லாமல் தந்தையின் அரவணைப்பில் வளரும் 3 மகன்களின் கதையாக உருவாகியுள்ளது. பல சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படம் நாளை வெளியாகிறது.

    அம் ஆ

    Kaapi Productions தயாரிப்பில், தாமஸ் செபாஸ்டியன் இயக்கத்தில், திலீஷ் போத்தன் மற்றும் தேவதர்ஷினி நடிப்பில், மனதை இலகுவாக்கும், அருமையான அன்பைப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள மலையாளப் படம் "அம் ஆ". இப்படத்தின் தமிழ்ப் பதிப்பு நாளை ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியாகிறது.

    சச்சின்

    விஜய் நடித்த 'சச்சின்' படம் 2005-ம் ஆண்டு தமிழ்புத்தாண்டு தினத்தில் திரைக்கு வந்தது. இதில் விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா நடித்து இருந்தார். இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் டைரக்டு செய்ய, கலைப்புலி தாணு தயாரித்து இருந்தார். இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் படத்தை நாளை மீண்டும் ரிலீஸ் செய்கின்றனர்.

    • நாடோடிகள், சீதம்மா வகிட்லோ சிரிமல்லி சேத்து, மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர் நடிகை அபிநயா.
    • நடிகை அபிநயா அவரது நீண்ட நாள் காதலனான கார்த்திகை திருமண செய்துக் கொண்டார்

    நாடோடிகள், சீதம்மா வகிட்லோ சிரிமல்லி சேத்து, மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர் நடிகை அபிநயா. சமீபத்தில் மலையாள திரைப்படமான பணி திரைப்படத்தில் ஜோஜு ஜார்ஜ் மனைவி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    நடிகை அபிநயா அவரது நீண்ட நாள் காதலனான கார்த்திகை திருமண செய்துக் கொள்ளப்போவதாகவும் அவர்கள் இருவருக்கும் நிச்சயம் நடைப்பெற்றதையும் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் கடந்த மாதம் புகைப்படத்துடன் வெளியிட்டு அறிவித்தார்.

     

    இந்நிலையில் இன்று அவர்களது திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. அவர்களது திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அபிநயா அவரது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். திரைப்பிரபலங்களும் மற்றும் ரசிகர்களும் அவர்களை வாழ்த்தி வருகின்றனர்.

    நடிகை அபிநயா தற்பொழுது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக தமிழில் சுந்தர் சி இயக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குநர் வெற்றி மாறன் மற்றும் நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் வாடிவாசல்.
    • வாடிவாசல் படத்தின் இசை பணிகள் துவங்கிவிட்டதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் அறிவித்து இருந்தார்.

    இயக்குநர் வெற்றி மாறன் மற்றும் நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் வாடிவாசல். இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு வெளியானது முதல், இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில், வாடிவாசல் படத்தின் இசை பணிகள் துவங்கிவிட்டதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் அறிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், வாடிவாசல் திரைப்படம் குறித்த புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் ஜூலை மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் திரைப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் திரைப்படம் வெளியாகும் என தயாரிப்பாளர் தானு கூறியுள்ளார்.

    வாடிவாசல் திரைப்படம் ஜல்லிக்கட்டு சம்பந்தப்பட்ட கதையை கொண்டிருக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. மேலும், இதற்காக சூர்யா சிறப்பு பயிற்சிகள் எடுத்து வருவதாகவும், படத்தில் பயன்படுத்துவதற்காக மாடு ஒன்றும் வாங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

    வாடிவாசல் திரைப்படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தப் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

    • STR49 படத்தை பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளார்
    • படத்தின் இசையை சாய் அபயங்கர் மேற்கொள்கிறார்.

    சிம்பு அடுத்து நடிக்கும் STR49 படத்தை பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளதாகவும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அண்மையில் அறிவிக்கப்பட்டது.

    இப்படம் மிகப்பெரிய மாஸ் மற்றும் கலக்கலப்பான திரைப்படமாக இருக்கும். வசூல் ராஜா MBBS திரைப்படத்தை போல் ஒரு பக்கா கமெர்ஷியல் ஜாலி திரைப்படமாக இருக்கும். முழுக்க முழுக்க கல்லூரியில் நடக்ககூடிய திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.

    இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் இணைந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளார் நடிகர் சிம்பு.

    படத்தின் நடிகர் சந்தானம் காமெடியன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10 வருடங்களுக்கு பிறகு நடிகர் சந்தானம் காமெடியனாக இப்படத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் நடிப்பதற்காக சந்தானம் 13 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டதாகவும் அதன் அட்வான்சாக 7 கோடி ரூபாயை தயாரிப்பாளர் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

     

    சிம்பு தற்பொழுது தக் லைஃப் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிம்பு நடித்த பல திரைப்படங்களில் சந்தானம் காமெடியனாக நடித்துள்ளார் கடைசியாக இது நம்ம ஆளு படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

    • டொவினோ தாமஸ் அடுத்ததாக நரி வேட்டை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் அடுத்ததாக நரி வேட்டை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை அனுராஜ் மனோகர் இயக்கியுள்ளார். இதற்கு முன் இவர் ஷேன் நிகாம் நடிப்பில் இஷ்க் திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

    இப்படமே சேரன் நடிக்கும் முதல் மலையாள திரைப்படமாக அமைந்துள்ளது. இவர்களுடன் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் பிரியம்வட கிருஷ்ணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழியில் வெளியாக இருக்கிறது.

    உண்மையான சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது. படத்தின் இசையை ஜேக்ஸ் பிஜாய் மேற்கொள்ள படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான மின்னல்வாலா பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

    • சுந்தர் சி மற்றும் காமெடி நடிகர் வடிவேலு கேங்கர்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.
    • கேங்கர்ஸ் திரைப்படம் ஏப்ரல் 24ம் தேதி வெளியாக இருக்கிறது.

    நீண்ட இடைவேளைக்குப் பிறகு இயக்குனர் சுந்தர் சி மற்றும் காமெடி நடிகர் வடிவேலு கேங்கர்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.

    சுந்தர் சி மற்றும் வடிவேலு கூட்டணி மிகப்பெரிய சக்சஸ் கூட்டணி என்று கோலிவுட் திரையுலகில் கூறப்பட்ட நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக பல ஆண்டுகளாக இருவரும் திரைப்படத்தில் இணையாமல் இருந்தனர்.

    15 வருடங்களுக்குப் பிறகு இணையும் சுந்தர் சி மற்றும் வடிவேலு காமெடி கூட்டணி ரசிகர்கள் ரசிக்கும் வகையில் இருக்கும் என்றும் கைப்புள்ள, வீரபாகு மாதிரி சிங்காரம் என்ற கேரக்டரில் கேங்கர்ஸ் படத்தில் வடிவேலு நடித்து இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

    இந்நிலையில் கேங்கர்ஸ் திரைப்படம் ஏப்ரல் 24ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வடிவேலு இப்படத்தில் பல கெட்டப்புகளில் நடித்துள்ளார்.

    படத்தின் முதல் பாடலான குப்பன் பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் சுந்தர் சி மற்றும் வடிவேலு ஒரு வீட்டில் எதையோ திருட செல்கிறார்கள்.அங்கு நடக்கும் நகைச்சுவை காட்சியாக அமைந்துள்ளது.

    • நடிகர் சூர்யா நடிக்கும் 44-வது திரைப்படம் 'ரெட்ரோ.'
    • ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.

    நடிகர் சூர்யா நடிக்கும் 44-வது திரைப்படம் 'ரெட்ரோ.' இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.

    இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.

    ஏற்கனவே வெளியான இப்படத்தின் கண்ணாடி பூவே மற்றும் கனிமா பாடல்கள் மிகவும் வைரலான நிலையில், இப்படத்தின் அடுத்த பாடலான தி ஒன் பாடலையும் படக்குழு வெளியிட்டது.

    மேலும், ரெட்ரோ படத்திற்கான டப்பிங் பணிகளை சூர்யா முழுவதுமாக முடித்துள்ளார். படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நாளை சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைப்பெற இருக்கிறது.

    திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளனர். படத்தின் நேரளவு 2 மணி நேரம் 48 நிமிடம் 30 வினாடியாக உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இதற்கு முன் இயக்கிய பேட்ட மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் நேரமும் இதே அளவு இருந்தது.இதனால் ரெட்ரோ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • நடிகர் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் அடுத்த மாதம் 16-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.

    இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'மாமன்'. லார்க் ஸ்டுடியோ சார்பில் கே.குமார் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக ஐஸ்வர்யா லஷ்மி நடித்துள்ளார். நடிகர் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    லப்பர் பந்து புகழ் ஸ்வஷிகா, கீதா கைலாசம், விஜி சந்திரசேகர், நிகிலா சங்கர், பால சரவணன், பாபா பாஸ்கர் மற்றும் குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் பிரகீத் சிவன் உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் அடுத்த மாதம் 16-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.

    இந்த நிலையில், நடிகர் சூரியின் அடுத்த படத்திற்கான டைட்டில் லுக் போஸ்டர் நாளை காலை 11.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோ இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும், 'காயத்தை உண்டாக்கிய ஈட்டியால் மட்டுமே குணப்படுத்த முடியும்' என்ற வசனத்துடன் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

    ×