search icon
என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "காதலிக்க நேரமில்லை".
    • கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

    ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "காதலிக்க நேரமில்லை".

    ஜெயம் ரவி, நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அவர்களுடன் யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

    இந்நிலையில் முக்கியமான அப்டேட்டை அறிவிக்கவுள்ளதாக படக்குழு புது போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இது ரிலீஸ் தேதி குறித்த அப்டேட்டாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    திரைப்படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் பாடல், டீசர் மற்றும் டிரைலர் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகி நவம்பர் 14 ஆம் தேதி வெளியான படம் கங்குவா.
    • கங்குவா திரைப்படம் மூன்று நாட்களில் 127 கோடி ரூபாய் வசூலித்துள்ளது

    நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகி நவம்பர் 14 ஆம் தேதி வெளியான படம் கங்குவா. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுக்க 38 மொழிகளில் அதிக திரைகளில் இந்தப் படம் வெளியானது.

    இந்த நிலையில், கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஒருசிலர் இந்தப் படத்தை பாராட்டி வருகின்றனர்.

    கங்குவா திரைப்படம் மூன்று நாட்களில் 127 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தில் நடித்த சூர்யாவை பலர் விமர்சித்து வரும் நிலையில், நடிகை ஜோதிகா மற்றும் சீனு ராமசாமி ஆகியோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் உடன் பிறப்பே, நந்தன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சரவணன் நடிகர் சூர்யாவை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது தவறு என அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில் "கொந்தளிக்கிறோம்… ஆவேசப்படுகிறோம்… சாபம் விடுகிறோம்… வசவித் தீர்க்கிறோம்… எல்லோர் உணர்வும் மதிக்கத்தக்கது. மாற்றுக் கருத்தில்லை. நடிகர் சூர்யாவும் இயக்குநர் சிவாவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் நம்மை நம்ப வைத்து மோசடி செய்து பணத்தைச் சுருட்டிக் கொண்டு ஓட முயற்சித்தவர்கள் அல்லர். அவர்களின் பெருமுயற்சியும் உழைப்பும் சிலர் பார்வையில் சறுக்கி இருக்கக்கூடும். ஒரு படம் ஏமாற்றி விட்டதாக இந்தளவுக்குக் கொந்தளிக்கும் நாம், நம்மைச் சுற்றி நடக்கும் எத்தனையோ அநீதிகளை, அத்துமீறல்களை, சுரண்டல்களை, மோசடிகளைக் கண்டும் காணாமல் கடக்கிறோம்.

    ஆட்சியில், நிர்வாகத்தில், அரசியல் நிலைப்பாடுகளில் நாம் க்யூவில் நின்று வாக்களித்து தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் தவறு செய்கிற போது இத்தகைய ஆவேசத்தை வெளிப்படுத்தி இருக்கிறோமா? சினிமாவுக்கு எதிராக இவ்வளவு சீறுகிற நாம், நம் பகுதியின் கவுன்சிலரிடம் என்றைக்காவது முறையிட்டிருப்போமா?

    வீட்டைச் சுற்றி தண்ணீர் நின்றாலும், கொசுக்கடி கொன்றாலும், பாதிச்சாமத்தில் கரண்ட் கட்டானாலும், சாலை நடுவே பள்ளம் உண்டாகி உருண்டாலும், நியாயமான விஷயங்களுக்கே லஞ்சம் கொடுக்க வேண்டிய நெருக்கடி வந்தாலும், கண் முன்னே அநீதி நடந்தாலும் அதிகபட்சம் உள்ளுக்குள் குமுறிக்கொண்டே கடக்கிறோம். பிள்ளைகளின் கல்விச் செலவுக்குக் கொஞ்சமும் நியாயமின்றி வசூலிக்கப்படும் கட்டணத்தை கடன் வாங்கியாவது கட்டுகிறோம். உயிர்க் காக்கும் மருத்துவத்தில் நடக்கிற கொடுவினைகளைக்கூடச் சகித்துக் கொள்கிறோம். இந்த ஆவேசமும் கொந்தளிப்பும் அங்கெல்லாம் எப்படி அமைதியாகிறது? ஒரு படம் நம்மை ஏமாற்றுகிற போது பாய்கிற நாம், ஒரு நிஜம் நம்மை ஏமாற்றுகிற போது சகிக்கவும், தாங்கவும் எப்படி பழகிக் கொள்கிறோம்?

    ஒரு பெரியவர் 'கங்குவா' படத்திற்கு எதிராகக் கொந்தளித்ததைக் காட்டாத சமூக வலைத்தளங்கள் இல்லை. ஆனால் இன்றைக்கும் சுற்றுச் சூழலுக்காக, சமூக நீதிக்காக, ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் மனிதர்களை எத்தனை ஊடகங்கள் காட்டுகின்றன? ஒரு படத்தின் நல்லது கெட்டதுகளை போஸ்ட் மார்ட்டம் செய்து கிழித்துத் தொங்கவிட இவ்வளவு புரட்சியாளர்கள் இருக்கிற தமிழ்நாட்டில் நமக்காகக் கொண்டு வரப்படுகிற திட்டங்களை, செயல்பாடுகளைச் சீர்தூக்கிப் பார்க்க, விவாதிக்க எத்தனை நாதிகள் இருக்கின்றன?

    "சூர்யா ஏமாத்திட்டார்…" என ஆதங்கப்பட்ட / ஆத்திரத்தில் இன்னும் சில வார்த்தைகளைக் கொட்டிய ஒரு நண்பர், நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடியில் 15 லட்சத்தைப் பறிகொடுத்தவர். எல்லோரும் இணைந்து கொடுத்த புகாரில் கையெழுத்துப் போட்டதைத் தவிர, அந்த நண்பர் காட்டிய எதிர்ப்பும், போராட்டமும் எதுவுமில்லை. நண்பரின் விஷயத்தைக் குறிப்பிட்டுச் சொல்லக் காரணம், நாமும் இப்படித்தான்…எத்தனையோ அநீதிகளை நெருக்கடிகளை மென்று செரிக்கிறோம். ஆனால், சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுகிறோம்.

    "படத்தில் ஏன் இவ்வளவு வன்முறைக் காட்சிகள்" என ஆவேசப்படுகிற நாம், நம் கண் முன்னே நடக்கிற கத்திக் குத்துகளைக் கண்டுகொள்ள மாட்டோம். "படத்தில் ஏன் இவ்வளவு மது போதைக் காட்சிகள்?" என ஆவேசப்படுவோம். வரிசைகட்டி மீன் கடைகள் போல் திறந்திருக்கும் டாஸ்மாக் கடைகளைப் பார்த்துக்கொண்டே கடப்போம். படத்தில் எதுவும் தவறான காட்சிகள் வந்துவிடக் கூடாது. நிஜத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இது என்ன மனநிலை?

    நியாயமும் அறச்சீற்றமும் கேள்வி கேட்கும் திராணியும் கொண்ட ஒருவன், தனக்கு எதிராக நடக்கும் அத்தனை அநீதிகளுக்கு எதிராகவும் கொந்தளிப்பான். ஓர் அநீதிக்கு அமைதியாகவும், இன்னோர் அநீதிக்கு புரட்சியாகவும் இருக்க மாட்டான்.

    மூன்றே விஷயங்கள்…

    1.சினிமாகாரர்களை இந்தளவுக்குக் கொண்டாடவும் தேவையில்லை. இவ்வளவு மோசமாகக் குறை சொல்லவும் தேவையில்லை.

    2.இந்தக் கோபத்தை ஆவேசத்தை தட்டிக் கேட்கும் தைரியத்தை சினிமாவுக்கு எதிராக மட்டும் காட்டாமல், நம்மை ஏமாற்றும் அத்தனை அநீதிகளுக்கு எதிராகவும் காட்டுவோம். சினிமா நம் பொழுதுபோக்கு. பொழுது அதைவிட முக்கியம். 3மணி நேரம் வீணாகி விட்டதாகப் புலம்பும் நாம், நம் எம்.பி, எம்.எல்.ஏ. உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு 5 வருடங்களை கொடுத்திருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    3. சில சண்டைகளில் என்ன ஏதென்றே தெரியாமல் போவோர் வருவோரும் சேர்ந்து அடிப்பதுபோல், பெரும்பான்மை கருத்து என்பதாலேயே அதற்கு வலு சேர்க்கும் வேலைகளை ஒருபோதும் செய்யாதீர்கள். ஆய்ந்தறியுங்கள். உங்கள் மனம்தான் உயர்ந்த நீதிபதி.

    பி.கு: நடிகர் சூர்யாவை விமர்சிக்க நமக்கு உரிமை இருக்கிறது. சூர்யாவை விமர்சிக்க அல்ல…

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் கவின் நடித்துள்ள படம் `ப்ளடி பெக்கர்.'
    • இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார்.

    இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் கவின் நடித்துள்ள படம் `ப்ளடி பெக்கர்.' இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார். ஜென் மார்டின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தில் கவின் பிச்சைக்காரனாக ஒரு மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ளார். திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    திரைப்படம் இதுவரை 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. தற்பொழுது படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் நவம்பர் 29 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் ஜாலியோ ஜிம்கானா திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • திரைப்படம் வரும் நவம்பர் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    பிரபு தேவா கடைசியாக நடித்து வெளியான பேட்ட ராப் திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. திரைப்படம் வணிக ரீதியாகவும் பெரிய வசூலை பெறவில்லை.

    இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் நகைச்சுவை திரைப்படமான ஜாலியோ ஜிம்கானா திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தில் கதாநாயகியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார். இவருடன் அபிராமி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ரோபோ சங்கர், சாய் தீனா, யாஷிகா ஆனந்த் மற்றும் மதுசுதன் நடித்துள்ளனர்.

    படத்தின் முதல் பாடலான `போலிஸ் காரனா கட்டிக்கிட்டா' பாடல் ஆண்டிரியாவின் குரலில் டபுள் மீனிங் வரிகளுடன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் வரும் நவம்பர் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    தற்பொழுது படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் இறந்துப் போன பிரபு தேவாவை யாருக்கும் தெரியாமல் இரயிலில் ஏற்ற முயற்சிக்கும் பொழுது. டிடிஆர் வந்து விடுகிறார் அதன் பிறகு நடக்கும் நகைச்சுவையான காட்சி அமைந்துள்ளது.

    படத்திற்கு தணிக்கை குழு யு சான்றிதழை வழங்கியுள்ளது என்பது குறிப்படத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்கி வருகிறார் ஆதிக் ரவிச்சந்திரன்
    • படத்தில் நடிகர் பிரசன்னா மற்றும் அர்ஜூன் தாஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

    கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த 'மார்க் ஆண்டணி' மிகப்பெரிய ஹிட் அடித்தது. அப்படத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

    இதை தொடர்ந்து அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் அஜித் மூன்று கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சுனில் , நஸ்லேன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

    படத்தில் நடிகர் பிரசன்னா மற்றும் அர்ஜூன் தாஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பின் போது எடுக்கப்டும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது படக்குழு வெளியிட்டு வருகின்றனர்.

    நடிகர் அஜித்தும் அவ்வப்போது செல்ஃபிகளையும், கார் ஓட்டுவது போல், வாங்குவது போல், ரேசிங் செய்வது போன்ற வீடியோகள் மற்றும் புகைப்படங்களை பதிவிட்ட வண்ணம் உள்ளார்.

    இந்நிலையில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் யோகி பாபு இணைந்துள்ளார். அப்போது அஜித்துடன் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சூர்யா மற்றும் இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகி நவம்பர் 14 ஆம் தேதி வெளியான படம் கங்குவா.
    • உலகம் முழுக்க 38 மொழிகளில் அதிக திரைகளில் இந்தப் படம் வெளியானது.

    நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகி நவம்பர் 14 ஆம் தேதி வெளியான படம் கங்குவா. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுக்க 38 மொழிகளில் அதிக திரைகளில் இந்தப் படம் வெளியானது. முன்னதாக கங்குவா படம் குறித்து படக்குழு பல்வேறு தகவல்களை தெரிவித்த நிலையில், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறியது.

    இந்த நிலையில், கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்தப் படத்தை பார்த்தவர்களில் பலர் படக்குழு எதிர்பார்த்த விமர்சனத்தை கொடுக்கவில்லை. ஒருசிலர் இந்தப் படத்தை பாராட்டி வருகின்றனர்.

    கங்குவா திரைப்படம் மூன்று நாட்களில் 127 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள மன்னிப்பு பாடலின் வீடியோவை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. இப்பாடலில் சூர்யாவிற்கும் ஒரு சிறுமிக்கும் இடையே உள்ள பாசப் போராட்டத்தை பிரதிபளிக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வணங்கான்'.
    • இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வணங்கான்'.

    இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வணங்கான்'. வணங்கான் படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது.

    அதற்கு முக்கிய காரணம் பாலாவின் பிதா மகன் விக்ரம் சாயலில் அருண் விஜய் இருந்ததே ஆகும். இந்த படத்தின் நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். இயக்குனர் மிஸ்கின் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கன்னியாகுமரி, திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வணங்கான் படமாக்கப்பட்டது.

    படத்தின் டிரைலர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் விரைவில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தை அருண் விஜய் அவர்களது குடும்பத்தினருடன் நேற்று பார்த்தார். படத்தை பார்த்த அனுபவத்தை பற்றி அவரது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

    அதில் "மன நெகிழ்வுடனும் கனத்த இதயத்துடனும், என் இயக்குனர் திரு. பாலா சார் அவர்களுக்கு,

    நான் திரையுலகில் கால் பதித்த காலத்தில் இருந்து, உங்கள் படைப்புகளின் ரசிகனாகவும், உங்களைக் கண்டு வியந்து, நேசித்து, ஒரு நடிகனாக "எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா" என ஏங்கியவனுக்கு தங்களின் இயக்கத்தில் பணியாற்ற 'வணங்கான்' படத்தின் மூலம் வாய்ப்பளித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.

    நம் படப்பிடிப்பின் பொழுது கூட இக்கதையின் பாதிப்பை நான் முழுமையாக உணரவில்லை.

    ஆனால் அதனை இப்பொழுது வெள்ளித்திரையில் காண்கையில்,

    என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை.

    என் பெற்றோரை பெருமையில் நெகிழ்வடைய செய்தமைக்கு உங்களை வணங்குகிறேன்.????

    எனது திரையுலக பயணத்தில், வணங்கான் ஒரு மிக முக்கியமான பாகமாக அமையும் என்பதில் எனக்கு துளி அளவும் சந்தேகமில்லை!

    இப்படைப்பின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து, பக்க பலமாக இருந்து கொண்டிருக்கும்

    திரு. சுரேஷ் காமாட்சி அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். ??

    மக்கள் அனைவரும் இப்படத்தை விரைவில் திரையில் காணும் நாளை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும்...

    உங்கள் அருண் விஜய்." என பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகி நவம்பர் 14 ஆம் தேதி வெளியான படம் கங்குவா.
    • உலகம் முழுக்க 38 மொழிகளில் அதிக திரைகளில் இந்தப் படம் வெளியானது.

    நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகி நவம்பர் 14 ஆம் தேதி வெளியான படம் கங்குவா. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுக்க 38 மொழிகளில் அதிக திரைகளில் இந்தப் படம் வெளியானது. முன்னதாக கங்குவா படம் குறித்து படக்குழு பல்வேறு தகவல்களை தெரிவித்த நிலையில், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறியது.

    இந்த நிலையில், கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்தப் படத்தை பார்த்தவர்களில் பலர் படக்குழு எதிர்பார்த்த விமர்சனத்தை கொடுக்கவில்லை. ஒருசிலர் இந்தப் படத்தை பாராட்டி வருகின்றனர்.

    படத்தை பற்றி வேண்டுமென்றே அவதூறு கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர் என குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இது குறித்து நடிகை ஜோதிகா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவை பதிவிட்டார்.

    இந்நிலையில் படத்தின் வசூலைக் குறித்து படக்குழு பதிவை பதிவிட்டுள்ளனர். மூன்று நாட்களில் திரைப்படம் 127 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. திரைப்படம் இன்னும் வரும் நாட்களில் அதிகம் வசூலிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • திரைப்படத்தின் டைட்டில் டீசர் வீடியோவை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.
    • திரைப்படத்தை அறிமுக இயக்குனரான செந்தில் நல்லசாமி இயக்கவுள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுள் இருப்பவர் நடிகை நயன்தாரா.

    இந்நிலையில் நயன்தாரா அடுத்து நடித்துள்ள திரைப்படத்தின் டைட்டில் டீசர் வீடியோவை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த டீசரை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. டைட்டில் டீசர் காட்சிகள் மிகவும் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்துள்ளது . இது ஒரு பீரியட் ஆக்ஷன் டிராமா கதைக்களத்துடன் அமைந்துள்ளது.

    இப்படத்தை டிரம்ஸ்டிக்ஸ் ப்ரொடக்ஷன் மற்றும் மூவிவெர்ஸ் இந்தியா தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. டிரம்ஸ்டிக்ஸ் ப்ரொடக்ஷன் இதற்கு முன் இமைக்கா நொடிகள், யானை, திரிஷா இல்லனா நயன்தாரா போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

    திரைப்படத்தை அறிமுக இயக்குனரான செந்தில் நல்லசாமி இயக்கவுள்ளார். படத்திற்கு ராக்காயி என்ற தலைப்பு வைத்துள்ளனர். திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கவுள்ளார். கவுதம் ராஜேந்தர் ஒளிப்பதிவு செய மற்றும் பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். இப்படம் தமிழ் , தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

    படத்தில் நடித்துள்ள மற்ற சக நடிகர்கள்களை பற்றிய தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • காமெடியனாகவும், கதாநாயகனாகவும் என்னை மக்கள்தான் கொடுத்தார்கள்.
    • விடுதலை-2 படம் டிசம்பர் 20-ந்தேதி வெளியாக உள்ளது.

    திருச்செந்தூர்:

    நடிகர் சூரி இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


    அடுத்தடுத்து சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறேன். விடுதலை-2 படம் டிசம்பர் 20-ந்தேதி வெளியாக உள்ளது. உலகின் தலை சிறந்த மேதைகளில் இளையராஜாவும் இருப்பார். 83 வயதிலும் பாடல் எழுதி இசை அமைத்து பாடி உள்ளார்.


    தமிழ் சினிமாவில் அவர் இருக்கும் இந்த கால கட்டத்தில் நானும் உள்ளேன் என்பதை பாக்கியமாக நினைக்கிறேன். இறைவன் உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் இளையராஜாவுக்கு கொடுத்து இன்னும் பல படங்களில் அவர் இசையமைக்க நான் இறைவனை வேண்டுகிறேன்.

    அற்புதமான வாழ்வியலை கொடுக்கக் கூடிய இசையமைப்பாளர் அவர். காலத்திற்கும் நாம் படித்து கொண்டே இருக்க வேண்டிய புத்தகம் தான் இளையராஜா.

    கதாநாயகனாக நன்றாக தான் போய்க்கொண்டிருக்கிறது. காமெடியனாகவும், கதாநாயகனாகவும் என்னை மக்கள்தான் கொடுத்தார்கள். விடுதலை பாகம்-2 படத்துக்கு பிறகு வெற்றிமாறன் பங்களிப்பில் ஒரு படத்திற்கான அறிவிப்பு விரைவில் வர உள்ளது.


    கங்குவா திரைப்படம் நன்றாக உள்ளது. எனக்கு பிடித்திருக்கிறது. ஒரு எளிய ரசிகனாக குடும்பத்துடன் சென்று பார்த்தேன். 4 பேர் சொல்லும் எதிர்மறை கருத்துக்களை பார்க்க வேண்டாம். நிறைய பேர் கூறும் நல்ல கருத்துக்களை பார்க்க வேண்டும்.

    கங்குவா திரைப்படம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முயற்சித்துள்ளார்கள். அந்த எண்ணத்திற்கு நான் தலை வணங்குகிறேன். பல பேருடைய உழைப்பு இந்த படத்தில் உள்ளது. பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளார்கள்.

    எதிர்மறை விமர்சனம் செய்தால்தான் வரவேற்கப்படுகிறது என நினைத்து சிலர் தன்னை பிரபலப்படுத்தி கொள்ள காமிரா முன்பு எதிர்மறை விமர்சனத்தை செய்து வருகின்றனர்.

    தனுஷ், நயன்தாரா விவகாரத்தை நான் பார்க்க வில்லை. அது இரண்டு பேருக்கும் உட்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நயன்தாரா இன்று பிறந்தநாளை டெல்லியில் குடும்பத்துடன் கொண்டாடினார்.
    • பொதுமக்களிடம் ஆர்வமுடன் கை குலுக்கி பேசி மகிழ்ந்தார்.

    தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்பவர் நயன்தாரா. விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன்தாராவுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நயன்தாராவுக்கு இன்று 40-வது பிறந்தநாள். அவரது பிறந்த நாளையொட்டி நயன்தாராவின் சினிமா வாழ்க்கை மற்றும் காதல் திருமணத் தொகுப்புகள் ஆவணப்படமாக நெட்பி ளிக்ஸ் தளத்தில் இன்று வெளியாகி இருக்கிறது.


    முன்னதாக படம் பற்றி சில தினங்களுக்கு முன்பு வெளியான 3 நிமிட புரோமோவில் நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகள் எனது அனுமதியின்றி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு நஷ்டஈடாக ரூ.10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என தனுஷ் தனக்கு நோட்டீஸ் அனுபியதாக நயன்தாரா நேற்று முன்தினம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

    இந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை உருவாக்கியது. சர்ச்சைகளுக்கு மத்தியில் நயன்தாரா இன்று தனது பிறந்த நாளை டெல்லியில் குடும்பத்துடன் கொண்டாடினார்.

    முன்னதாக நேற்று மாலை டெல்லியில் உள்ள பிரபல சுற்றுலா தலமான 'குதுப்மினாரை' கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் சுற்றிப்பார்த்தார்.


    நயன்தாராவை கண்டதும் ஏராளமான பொதுமக்கள் உற்சாகம் அடைந்து அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

    நயன்தாராவும் பொதுமக்களிடம் ஆர்வமுடன் கை குலுக்கி பேசி மகிழ்ந்தார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2012-ம் ஆண்டு கலகலப்பு படம் வெளியானது.
    • 2018-ம் ஆண்டு கலகலப்பு-2 வெளியானது.

    சென்னை:

    சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான படம் 'கலகலப்பு'. விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், மனோபாலா, ஓவியா, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்த இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.


    அடுத்து அந்த படத்தின் இரண்டாம் பாகம், 'கலகலப்பு-2 என்ற பெயரில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியானது.


    இதில் ஜீவா, ஜெய் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதுகலவையான விமர்சனங்களைப் பெற்றது. விரைவில் 'கலகலப்பு 3' உருவாகும் என்று கூறப்பட்டு வந்தது.


    இந்நிலையில், 'கலகலப்பு 3' படத்தின் அப்டேட்டை நடிகை குஷ்பு வெளியிட்டுள்ளார்.

    இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், விரைவில் 'கலகலப்பு 3' உருவாக இருப்பதாகவும், நடிகர்கள் மற்றும் பிற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    ×