என் மலர்
சினிமா செய்திகள்

நடிகர் மோகன்லாலின் 'எம்புரான்' இன்று வெளியானது- கேரளாவில் 746 தியேட்டர்களில் போலீசார் குவிப்பு
- திருவனந்தபுரத்தில் மட்டும் 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- கூட்ட நெரிசலால் வன்முறை மற்றும் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நடிகரும், டைரக்டருமான பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவான 'எம்புரான்' திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது.
கேரளாவில் இந்தப் படம் 746 தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. இந்த தியேட்டர்களில் பாதுகாப்பு நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். திருவனந்தபுரத்தில் மட்டும் 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரசிகர்களின் அதிக கூட்ட நெரிசலால் வன்முறை மற்றும் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த காலங்களில் ஐதராபாத்தில் 'புஷ்பா-2' பட பிரிமீயர் ஷோவில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் பலியான சம்பவத்தை தொடர்ந்து இந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.