என் மலர்tooltip icon

    கிசுகிசு

    பிரபல நடிகர் ஒருவர் என்னதான் தன்னை வெளியில் நல்லவராக காட்டிக் கொண்டாலும் தன்னுடன் படத்தில் நடிக்கும் நடிகைகளை தனக்கு இரையாக்க வேண்டும் என துடித்து வந்தாராம். அம்மா- மகள் என இருவரையும் அடைந்துவிட வேண்டும் என நினைத்து கங்கணம் கட்டிக் கொண்டு அலைந்தாராம். அவரது ஆசைக்கு ஓகே சொல்லவில்லை என்றால் அவர்களை தயாரிப்பாளர்களிடம் சொல்லி படத்தில் இருந்து தூக்கிவிட்டு அடுத்த ஹீரோயினை கரெக்ட் செய்ய ஆரம்பித்துவிடுவாராம்.

    திரைத்துறையில் பிரபலமாக வேண்டுமே என்று நினைக்கும் நடிகைகள் என்ன செய்வது எல்லாம் விதி என்று தலையில் அடித்துக் கொண்டு நடிகருடன் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து வருகிறார்களாம்.

    தன் முதல் படத்திலேயே பிரபலமான நடிகை அதே நடிகருடன் தொடர்ந்து ஜோடி சேர்ந்து வந்தாராம். திடீரென நடிகருக்கு திருமணம் நடக்கவே நடிகையோ சில காலமாக சினிமா பக்கமே வராமல் இருந்தாராம். அதன்பின் நடிக்க தொடங்கிய நடிகையின் படங்கள் சரியாக ஓடவில்லையாம்.

    அதனால் காதல் கதையை விட்டு திரில்லரில் கவனம் செலுத்திய நடிகைக்கு படங்கள் வரவேற்பை பெற தொடங்கியதாம். இதனால் தயாரிப்பாளர்கள் பலர் இதுமாதிரியான கதையில் நடிக்க நடிகையை அணுகினார்களாம். ஆனால் நடிகை மறுத்ததால் கடுப்பான தயாரிப்பாளர் இனி நடிகையை எந்த படத்திலும் நடிக்க வைக்கக்கூடாது என்று முடிவெடுத்துள்ளாராம்.

    ஒரே பாட்டில் இழந்த மார்க்கெட்டை திரும்ப பிடித்த பிரபல நடிகைக்கு அதற்கு பிறகு தொடர்ந்து அந்தமாதிரி பாடல்களுக்கு நடனமாட வாய்ப்புகள் குவிந்ததாம். இதனை மறுத்து வந்த நடிகையிடம் இந்த மாதிரி பாடல்களுக்கு நடனமாடினால் தான் மக்கள் மத்தியில் கொஞ்சமாவது நம் முகம் மறையாமல் இருக்கும் என உறவினர்கள் அறிவுரை கூறவே நடிகையும் ஒப்புக்கொண்டு அந்த மாதிரியான பாடல்களுக்கு நடனமாடி வருகிறாராம்.

    அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை பல படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறாராம். நடிகையின் மீது ஆசை கொண்ட இயக்குனர்கள் பலர் அட்ஜஸ்ட்மென்டுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் கேட்டு வந்தார்களாம். இதற்கு மறுத்த நடிகை ஒரு நாள் காரில் சென்று கொண்டிருக்கும் போது கார் வேறு பக்கமாக திரும்பியதாம். இதனால் பயந்து போன நடிகை என்ன நடக்குமோ என்று நினைக்கும் போது ஒருவர் திடீரென காரின் முன் பாய்ந்து காரை நிறுத்தினாராம். உடனே கீழே இறங்கிய நடிகை அவர்களை பளார் என்று கண்ணத்தில் ஒன்று வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாராம்.

    ஒரே படத்தில் நடித்து பிரபலமான நடிகையை தங்கள் படத்தில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் முயற்சி செய்து வந்தார்களாம். ஆனால், நடிகையோ குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் படப்பிடிப்பில் கலந்து கொள்ளமாட்டேன், புரொமோஷன்களில் கலந்து கொள்ளமாட்டேன் என பல கண்டீசன்கள் போட்டாராம்.

    படம் ஹிட்டாக வேண்டுமே என்ற ஆசையில் இயக்குனர்களும் ஓகே சொன்னார்களாம். இப்படி கொடிகட்டி பறந்த நடிகை திடீரென திருமணம் செய்து கொண்டாராம். திருமணத்திற்கு பிறகு யாருக்குதான் மார்கெட் இருந்தது என்று நினைத்த இயக்குனர்கள் இப்போது நடிகையை ஓரம் கட்டி வருகிறார்களாம்.

    நடிகை ஒருவர் குறிப்பிட்ட படங்களில் நடித்தாலும் மிகப்பெரிய அளவில் பிரபலமாக இருந்தாராம். நடிகை அழகில் மயங்கிய நடிகர்கள் பலர் நடிகைக்கு வலை விரித்தார்களாம். ஆனால், நடிகையோ யாரிடமும் சிக்காமல் தன் வேலையை மட்டும் பார்த்து வந்தாராம். இப்படி இருந்த நடிகை திடீரென தூர தேசத்தில் இருப்பவர் ஒருவரை காதலிக்கிறேன் என்றதும் வலை வீசிய நடிகர்களுக்கு எல்லாம் இதயம் நொறுங்கிவிட்டதாம்.

    தன் காதலனுடன் ஊர் ஊராக சுற்றுப்பயணம் சென்ற நடிகை திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானாராம். குழந்தை பிறந்ததும் என்ன நினைத்தாரோ தெரியவில்லை தன் பழைய காதலனை விட்டு விட்டு புதிய காதலனை தேடிக்கொண்டாராம். இப்போது அந்த காதலனுடன் தேசம் தேசமாக சுற்றி வருகிறாராம்.

    பிரபல நடிகர் ஒருவர் தன்னுடன் பல படங்களில் ஜோடியாக நடித்த நடிகையை ஆசை.. ஆசையாய் காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். இருவரும் சில வருடங்கள் மகிழ்ச்சியாக இருந்த நிலையில் திடீரென நடிகை விவாகரத்து கேட்டாராம். நடிகரும் எந்தவித ஆட்சேபனையும் இல்லாமல் விவாகரத்து கொடுத்துவிட்டாராம். நடிகை மீது தவறு இருப்பதால் தான் நடிகர் எதுவும் சொல்லாமல் விவாகரத்து கொடுத்துவிட்டார் என்று பலரும் பேசி வந்தார்களாம்.

    ஆனால், நடிகர், நடிகை இருக்கும்போதே வேறு ஒரு ஹீரோயினுடன் தொடர்பில் இருந்துள்ளாராம். இது தெரிந்து தான் நடிகை, நடிகரை விட்டு பிரிந்து சென்றுவிட்டாராம். நடிகை சென்றதும் இதுதான் வாய்ப்பு என்று நினைத்த நடிகர் காதலியின் வீட்டில் தஞ்சம் புகுந்துவிட்டாராம்.

    ஊருக்கு அறிவுரை சொல்லும் பிரபல நடிகருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறதாம். இவர் அறிவுரை மட்டுமல்லாமல் பலபேருக்கு உதவி செய்தும் வருகிறாராம். பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பொது கருத்துகளை கூறி வரும் நடிகர் பல படங்களிலும் நடித்து வருகிறாராம்.

    நல்லவர் என பெயர் எடுத்த நடிகர், நடிகை மீது ஏற்பட்ட மோகத்தால் பிளேபாய் ஆகிவிட்டாராம். இவர் கமிட்டான படங்களிலுள்ள நடிகைகளுடன் ஊர் சுற்றி வருவதால் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தில் இருகிறார்களாம்.

    பல படங்களில் நடித்து பிரபலமான நடிகைக்கு வயது ஏற ஆரம்பித்தவுடன் மார்க்கெட் குறைய ஆரம்பித்துவிட்டதாம். பிரபலமாகிவிட்டோமே அதை தக்க வைத்து கொள்ள வேண்டுமே என நினைத்த நடிகை சமூக வலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து சம்பாரித்து வந்தாராம். ஆனாலும் அவர் நினைத்த பாப்புலாரிட்டி கிடைக்கவில்லை என்றதும் ஆசை வார்த்தைகளை கூறி இயக்குனரை வளைத்துபோட்டு ஜாலியாக சுற்றி வருகிறாராம்.

    முக்கிய இயக்குனர்களின் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஒரு கட்டத்தில் பிரபலமானாராம். தொடர்ந்து படங்களில் நடித்தவருக்கு சில நாட்களில் வாய்ப்புகள் குறைந்துவிட்டதாம். இதனால் நடிகை கவர்ச்சியில் இறங்கிவிட்டாராம். கவர்ச்சியில் மட்டும் இறங்கினால் போதாது அதற்கான வேலைகளிலும் ஈடுபடவேண்டும் என்று முடிவெடுத்த நடிகை தன் புகைப்படங்களை தயாரிப்பாளர்களிடம் கொடுத்து வாய்ப்பு கேட்டு வந்தாராம்.

    தயாரிப்பாளர்களும் நடிகையின் தொல்லை தாங்காமல் அவரை பல மணிநேரம் காக்க வைத்துவிட்டு அனுப்பிவிடுவார்களாம். ஆனால், முயற்சியை கைவிடாத நடிகை விடாது கருப்பு போன்று தயாரிப்பாளர்களை பின் தொடர ஆரம்பித்தாராம். இதனால் பயந்து போன தயாரிப்பாளர்கள் நடிகையை கண்டதும் தலைதெறிக்க ஓடுகிறார்களாம்.

    ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான நடிகைக்கு அந்த ஒரு சில படங்களுக்கு பிறகு யாருமே நடிக்க வாய்ப்பு தரவில்லையாம். சரி வாய்ப்பு கிடைக்க சமூக வலைதளத்தில் ஒரு எண்ட்ரிய போடுவோம் என நினைத்த நடிகை கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் நடத்தி பட்டைய கிளப்பினாராம்.

    இந்த புகைப்படங்களை எல்லாம் பார்த்த இயக்குனர் ஒருவர் சரி போனாபோகட்டுமே என்று நடிகைக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தாராம். இந்த படத்தில் நடித்து முடித்த நடிகைக்கு வேறு படங்கள் கைவசம் இல்லாததால் நேர்காணல்களில் இனி நடிக்கமாட்டேன் என்று கூறிவருகிறாராம். இதற்கு பலரும் நடிகை வாய்ப்பு கிடைக்காததால் இப்படி சொல்கிறார் என்கின்றனர்.

    இளம் நடிகை தன் திறமையால் படிப்படியாக முன்னேறி பல படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தாராம். இப்படி வளர்ந்து வரும் நிலையில் திடீரென நடிகையின் படங்களில் சில சரிவை சந்திக்கவே நடிகையை ஹீரோயினாக புக் செய்ய பல இயக்குனர்கள் தயங்கினார்களாம்.

    இதனால் சோகமான நடிகை கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வந்தாராம். அதுவும் வசூல் ரீதியாக முன்னேற்றத்தை தொடாததால் ஷாக்கான இயக்குனர் ஒருவர் தன் படத்தில் புக் செய்து படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில் நடிகையை படத்தில் இருந்து நீக்கிவிட்டாராம். இதனால் நடிகையை ராசி இல்லாதவர் என்று பலர் கூறுகிறார்கள்.

    ×