search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டிஎன்பிஎல் 2024: சேப்பாக் வெற்றிபெற 142 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கோவை
    X

    டிஎன்பிஎல் 2024: சேப்பாக் வெற்றிபெற 142 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கோவை

    • டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய கோவை 142 ரன்களை எடுத்தது.

    சேலம்:

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 8-வது தொடர் சேலத்தில் இன்று தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.

    இன்றைய முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ், அதிக முறை சாம்பியன் ஆன சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சேப்பாக் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, கோவை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுரேஷ்குமார் 4 ரன்னிலும், சுஜய் குமார் 6 ரன்னிலும் அவுட்டாகினர். கேப்டன் ஷாருக் கான் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தார். அப்போது கோவை அணி 3 விக்கெட்டுக்கு 24 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

    அடுத்து பால சுப்ரமணியன் சச்சினுடன் முகிலேஷ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்த நிலையில் முகிலேஷ் 31 ரன்னில் வெளியேறினார். ராம் அரவிந்த் 12 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்களை எடுத்துள்ளது. சிறப்பாக ஆடிய சச்சின் அரை சதமடித்து 63 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சார்பில் அபிஷேக் தன்வர் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    Next Story
    ×