என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
கிரிக்கெட் (Cricket)
![இந்தியா-பாக். போட்டி அக்டோபர் 14ம் தேதிக்கு மாற்றம்: உலக கோப்பை கிரிக்கெட் புதிய அட்டவணை வெளியீடு இந்தியா-பாக். போட்டி அக்டோபர் 14ம் தேதிக்கு மாற்றம்: உலக கோப்பை கிரிக்கெட் புதிய அட்டவணை வெளியீடு](https://media.maalaimalar.com/h-upload/2023/08/09/1929761-icc-world-cup.webp)
இந்தியா-பாக். போட்டி அக்டோபர் 14ம் தேதிக்கு மாற்றம்: உலக கோப்பை கிரிக்கெட் புதிய அட்டவணை வெளியீடு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- உலக கோப்பை கிரிக்கெட் அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.
- நவம்பர் 12-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இரண்டு போட்டிகள் நவம்பர் 11-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன.
புதுடெல்லி:
இந்தியாவில் நடைபெற உள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 9 லீக் போட்டிக்கான தேதியை மாற்றி புதிய அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.
அக்டோபர் 15ம் தேதி நடைபெறவிருந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 14ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால், டெல்லியில் அக்டோபர் 14ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான்-இங்கிலாந்து போட்டி அக்டோபர் 15ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் இலங்கை- பாகிஸ்தான் மோதும் போட்டி அக்டோபர் 12 ஆம் தேதியில் இருந்து 10 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. லக்னோவில் நடைபெறும் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா ஆட்டம் அக்டோபர் 13ம் தேதிக்கு பதில் 12ம் தேதியே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதேபோல் சென்னையில் அக்டோபர் 14ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட வங்காளதேசம்-நியூசிலாந்து ஆட்டம் அக்டோபர் 13ம் தேதிக்கு மாற்றப்பட்டுளள்து. இப்போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறும்.
லீக் சுற்றின் கடைசியில் நவம்பர் 12-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இரண்டு போட்டிகள் நவம்பர் 11-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன. அதன்படி காலை 10:30 மணிக்கு ஆஸ்திரேலியா - வங்காளதேசம் அணி புனேவில் மோதுகிறது. பிற்பகல் 2.00 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து - பாகிஸ்தான் விளையாடுகின்றன.
நெதர்லாந்திற்கு எதிரான இந்தியாவின் கடைசி லீக் ஆட்டம் 11ம் தேதியில் இருந்து 12 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இப்போட்டி பெங்களூருவில் பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. துவக்க ஆட்டம் மற்றும் இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.