என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
ஷாருக் கான் அதிரடி அரை சதம்: கடைசி பந்தில் சேலத்தை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது கோவை
- முதலில் ஆடிய சேலம் அணி 171 ரன்களை எடுத்தது.
- அடுத்து ஆடிய கோவை 175 ரன்களை எடுத்து வென்றது.
திண்டுக்கல்:
டி.என்.பி.எல். தொடரின் லீக் ஆட்டங்கள் தற்போது திண்டுக்கல்லில் நடந்து வருகின்றன. இன்று நடைபெறும் 25-வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ், சேலம் ஸ்பர்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கோவை அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய சேலம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது. ராஜேந்திரன் விவேக் 43 ரன்கள் எடுத்தார்.
கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஹரிஷ்குமார் 19 பந்தில் 42 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுஜய் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஷாருக் கான் 18 பந்தில் அரை சதம் கடந்து அவுட்டானார்.
கடைசி 11 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சேலம் அணி சிறப்பாக பந்து வீசியது. இதனால் கோவை அணி கடைசி பந்தில் பவுண்டரி அடித்து திரில் வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் கோவை அணி பெற்ற 6வது வெற்றி இதுவாகும்.
சேலம் சார்பில் பொய்யாமொழி 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.