search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சுதந்திரமாக விளையாடினால் கோப்பை நிச்சயம்: ரோகித்தை வாழ்த்திய கங்குலி
    X

    சுதந்திரமாக விளையாடினால் கோப்பை நிச்சயம்: ரோகித்தை வாழ்த்திய கங்குலி

    • ரோகித் 5 ஐ.பி.எல். பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
    • உலகக் கோப்பை தொடரில் அவர் முன்னணியில் இருந்து வழிநடத்தினார் என்றார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் இந்தியாவின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

    ரோகித் சர்மாவை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க்கை என்பது முழு வட்டம். 6 மாதத்துக்கு முன் அவர் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாகக்கூட இல்லை, அதே மனிதர் இப்போது இந்தியாவை உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

    அவர் 2 உலகக் கோப்பை இறுதிப்போட்டிகளில் விளையாடியுள்ளார். அங்கு அவர் தோல்வி அடையாமல் இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளார். இது அவரது கேப்டன்சி மற்றும் தலைமைத்துவத் தரத்தைப் பற்றி பேசுகிறது.

    நான் பி.சி.சி.ஐ. தலைவராக இருந்தபோதும், விராட் இனி இந்திய அணிக்கு கேப்டனாக இருக்க விரும்பாதபோதும், அவர் கேப்டனாக ஆனதால் எனக்கு ஆச்சரியமில்லை.

    அவர் கேப்டனாக தயாராக இல்லாததால் அவரை கேப்டனாக்க அதிக நேரம் பிடித்தது. அவரை கேப்டனாக்க அனைவரிடமிருந்தும் நிறைய உந்துதல் தேவைப்பட்டது, அவருக்கு கீழ் இந்திய கிரிக்கெட்டின் முன்னேற்றத்தைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

    ரோகித் 5 ஐ.பி.எல். பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இது மிகப்பெரிய சாதனை ஆகும். ஐ.பி.எல். வெல்வது சில நேரங்களில் மிகவும் கடினம். சர்வதேச கிரிக்கெட்டை விட ஐ.பி.எல். சிறந்தது என்று நான் கூறவில்லை.

    ஆனால் ஐ.பி.எல்.லில் வெற்றி பெற 16-17 (12-13) போட்டிகளில் வெற்றிபெற வேண்டும். உலகக் கோப்பையை வெல்ல 8-9 போட்டிகளில் வெற்றிபெற வேண்டும். உலகக் கோப்பையை வெல்வதில்தான் கவுரவம் அதிகம். நாளை ரோகித் அதை வெல்வார் என நம்புகிறேன்.

    உலகக் கோப்பை தொடரில் அவர் முன்னணியில் இருந்து வழிநடத்தினார். அற்புதமாக பேட்டிங் செய்தார். அது நாளை தொடரும் என நம்புகிறேன். இந்தியா மிக சரியாக முடிக்கும் என நம்புகிறேன். அவர்கள் சுதந்திரமாக விளையாட வேண்டும்.

    அவர்கள் போட்டியின் சிறந்த பக்கமாக இருந்தனர். நான் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன். பெரிய போட்டிகளை வெல்வதற்கு அது அவசியம் என்பதால் நாளை அவர்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் கிடைக்கும் என நம்புகிறேன் என குறிப்பிட்டார்.

    Next Story
    ×