என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
1 போட்டி - 2 சாதனை: தொடரும் ரோகித் அதிரடி
- 2015ல் டி வில்லியர்ஸ் அடித்த 58 சிக்சர்கள்தான் இதுவரை சாதனையாக இருந்து வந்தது
- 2019ல் மோர்கன் அடித்த 22 சிக்சர்கள்தான் இதுவரை சாதனையாக இருந்து வந்தது
இந்தியாவில் அக்டோபர் 5 அன்று தொடங்கிய ஐசிசி ஆண்கள் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் உலக கோப்பை 2023 போட்டித்தொடரில் இதுவரை இந்தியா ஒரு போட்டியிலும் தோல்வி அடையாமல் ரசிகர்கள் உற்சாகம் அடையும் அளவிற்கு வெற்றி பெற்று வந்திருக்கிறது. இத்தொடரின் இறுதி போட்டி, நவம்பர் 19 அன்று குஜராத் மாநில அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதுவரை பேட்டிங்க், ஃபீல்டிங் மற்றும் பவுலிங் என அனைத்து அம்சங்களிலும் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதால், இந்தியா கோப்பையை வெல்வது எளிது என நம் நாட்டிலும், பிற நாடுகளிலும் உள்ள இந்தியர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் போட்டிகளை கண்டு வருகின்றனர்.
இத்தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா உட்பட இந்திய வீரர்கள் பல சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர்.
நவம்பர் 12 அன்று கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இந்தியாவிற்கும் நெதர்லாந்திற்கும் இடையேயான போட்டி நடைபெற்றது. முதலில் ஆடிய இந்திய வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்து நெதர்லாந்திற்கு 411 என இலக்கு நிர்ணயித்தனர்.
இதில் களமிறங்கிய இந்திய கேப்டனும் முன்னணி வீரருமான ரோகித் சர்மா, 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 54 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார்.
தனது 61 ரன் குவிப்பின் போது ரோகித் சர்மா 2 சாதனைகளை நிகழ்த்தினார்.
ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் ஒரு வருட காலகட்டத்தில் ஒரு வீரர் அடிக்கும் சிக்சர்களுக்கான கணக்கெடுப்பில், ரோகித், இதுவரை 60 சிக்சர்களை அடித்துள்ளார். இதுவரை 2015ல் தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் அடித்திருந்த 58 சிக்சர்கள்தான் அதிக எண்ணிக்கைக்கான சாதனையாக இருந்து வந்தது. ரோகித் அந்த சாதனையை முறியடித்தார்.
இது மட்டுமின்றி மற்றொரு சாதனையையும் ரோகித் புரிந்தார்.
ஐசிசி உலக கோப்பைக்கான ஒரு போட்டி தொடரின் போது, ஒரு அணியின் கேப்டன் அடிக்கும் அதிக சிக்சர்கள் எண்ணிக்கைக்கான கணக்கெடுப்பில், 24 சிக்சர்கள் அடித்து ரோகித் முதலிடம் வகிக்கிறார். இதுவரை 2019-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் இயான் மோர்கன் அடித்த 22 சிக்சர்கள்தான் சாதனையாக இருந்து வந்தது. ரோகித் அந்த சாதனையையும் முறியடித்தார்.
இந்தியாவிற்கு இன்னும் 2 போட்டிகள் மீதம் உள்ளதால் ரோகித்தின் சிக்சர் கணக்குகளும், அவரது சாதனைகளும் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்