search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டி20 போட்டி: ஈரப்பதத்தில் மைதானம்- டாஸ் போடுவதில் தாமதம்
    X

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டி20 போட்டி: ஈரப்பதத்தில் மைதானம்- டாஸ் போடுவதில் தாமதம்

    • இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று நடக்கிறது.
    • ஆடுகளத்தை சரிசெய்யும் பணியில் மைதான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.

    மொகாலியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று நடக்கிறது.

    இன்றைய போட்டியில் தோல்வி அடைந்தால் சொந்த மண்ணில் தொடரை இழக்க நேரிடும் என்பதால் இந்திய அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.

    இந்த நிலையில் ஆடுகளம் ஈரப்பதமாக இருப்பதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக 6.30 மணிக்கு டாஸ் போடப்படும். மைதானத்தில் தற்போது பெரிய அளவில் மழை இல்லை என்றாலும் நேற்று பெய்த பலத்த மழை காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக உள்ளது.

    இதை சரிசெய்யும் பணியில் மைதான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணி முடிந்த பிறகு டாஸ் போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வானிலை மையத்தின் அறிவிப்பின்படி, நாக்பூரில் இன்று 64 சதவீதம் மேக மூட்டம் கானப்படும் என்றும், வெப்பநிலையானது 29 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கும் என்றும் மழையால், ஆட்டம் பெரிதும் பாதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×