என் மலர்
தோஷ பரிகாரங்கள்
- எல்லா பிரச்சனைகளுக்கும், கஷ்டங்களுக்கும் தீர்வு உண்டு.
- எந்த தெய்வத்தை வழிபாடு செய்தால் என்ன பிரச்சனைகள், கஷ்டங்கள் தீரும் என்று அறிந்து கொள்ளலாம்.
எல்லா பிரச்சனைகளுக்கும், கஷ்டங்களுக்கும் தீர்வு உண்டு. நம் பிரச்சனைகள், சங்கடங்கள் தீர தெய்வ வழிபாடு நன்மை தரும். ஒவ்வொரு கஷ்டங்களும் தீர ஒவ்வொரு கடவுளை வழிபாடு செய்ய வேண்டும். அந்த வகையில் எந்த தெய்வத்தை வழிபாடு செய்தால் என்ன பிரச்சனைகள், கஷ்டங்கள் தீரும் என்று அறிந்து கொள்ளலாம்.
எமது முன்னோர்கள் ஒரு அழகான தொகுப்பினை பட்டியலிட்டு தந்துள்ளனர்.
விக்னங்கள், இடையூறுகள் நீங்க – விநாயகர்
செல்வம் சேர – ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர்
நோய் தீர – ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி
வீடும், நிலமும் பெற – ஸ்ரீ சுப்ரமணியர், செவ்வாய் பகவான்
ஆயுள், ஆரோக்கியம் பெற – ருத்திரன்
மனவலிமை, உடல் வலிமை பெற – ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர்
கல்வியில் சிறந்து விளங்க – ஸ்ரீ சரஸ்வதி
திருமணம் நடைபெற – ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை
மாங்கல்யம் நிலைக்க – மங்கள கௌரி
புத்திர பாக்கியம் பெற – சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி
தொழில் சிறந்து லாபம் பெற – திருப்பதி வெங்கிடாசலபதி
புதிய தொழில் துவங்க – ஸ்ரீகஜலட்சுமி
விவசாயம் தழைக்க – ஸ்ரீ தான்யலட்சுமி
உணவுக் கஷ்டம் நீங்க – ஸ்ரீ அன்னபூரணி
வழக்குகளில் வெற்றி பெற – விநாயகர்
சனி தோஷம் நீங்க – ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர்
பகைவர் தொல்லை நீங்க – திருச்செந்தூர் முருகன்
பில்லி, சூன்யம், செய்வினை அகல – ஸ்ரீ வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர்
அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற – சிவஸ்துதி
- உங்களுக்கு இந்த பரிகார குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கும்.
- இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்தால் பலன் நிச்சயம்.
பெரியவர்கள் நமக்காக நல்லதாக ஒரு சில விஷயங்களை சொல்லி வைத்து சென்றுள்ளார்கள். நல்லது என்று நமக்காக சொல்லப்பட்ட பரிகாரங்களை ஆராய்ச்சி செய்யாமல், அனுபவப்பூர்வமாக பின்பற்றி, அதன் மூலம் வரக்கூடிய பலனை பெறுவதே புத்திசாலித்தனம். இப்படி செய்தால் நல்லது நடந்து விடுமா? இப்படி செய்தால் கோடீஸ்வரர் ஆகி விடுவோமா? என்ற எண்ணத்தோடு பரிகாரத்தை செய்யாதீர்கள். இந்த பரிகாரம் செய்தால் நிச்சயம் நமக்கு நன்மை நடக்கும் என்ற நோக்கத்தோடு எவரொருவர் பரிகாரத்தை செய்கின்றார்களோ, அவர்களுக்கு நிச்சயம் நன்மை மட்டும்தான் நடக்கும்.
அவசர அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தில் வாகன விபத்து என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. வாகனங்களில் பயணிக்கும்போது ஒரு சிறிய காகிதப்பூ உங்களோடு எடுத்து சென்றால் விபத்துகள் ஏற்படாது.
தங்க நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், நிறைய பணம் உள்ளது போன்ற படத்தை காலையில் எழுந்ததும் முதலில் நாம் பார்த்தால் நமக்கு நிறைய பணம் சேரும் என்று சொல்லப்பட்டுள்ளது.
நம்முடைய வீட்டைச் சுற்றி நீரோட்டம் இருப்பது போல இயற்கையாகவே இருந்தால் அது நமக்கு பழக்கத்தை அதிகமாக தரும். இயற்கையான நீரோட்டம் இல்லை என்றால் செயற்கையான நீரோட்டத்தை நாமே உருவாக்கி வைத்துக் கொள்ளலாம்.
தூங்கும் போது எப்போதுமே இடது கை கீழே இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய ஆயுள் நீடிக்கும்.
உங்கள் வீட்டில் இருக்கும் சிறு குழந்தை இரவு தூங்காமல் அழுது கொண்டே இருக்கிறதா. நள்ளிரவில் தூக்கத்தில் திடீரென எழுந்து பயந்து அழுகிறதா. தூங்குகின்ற குழந்தைக்கு பக்கத்தில் ஒரு டம்ளர் தண்ணீரில் கல் உப்பை கரைத்து வையுங்கள். குழந்தை நிம்மதியாக தூங்கும்.
தினமும் தூபம் போடும்போது சந்தனப் பொடியை சிறிதளவு சேர்த்துக் கொண்டால் வீட்டில் தெய்வ கடாட்சம் நிலைத்திருக்கும்
குழந்தை வரம் வேண்டும் என்று நினைப்பவர்கள் தினம்தோறும் அகில் பட்டை பொடியை சேர்த்து தூபம் போட வேண்டும். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்
வீட்டில் தடைப்பட்டிருக்கும் சுபநிகழ்ச்சிகள் மீண்டும் தொடங்க வேண்டும் என்றால், தூபத்தில் துளசி விதைகளை போட வேண்டும். தூதுவளை பொடியைத் தூபத்தில் போட்டு அந்தப் புகையை வீடு முழுவதும் காண்பிக்க உங்களுடைய குல தெய்வம், உங்கள் வீடு தேடி வரும் என்பது நம்பிக்கை. தூதுவளைக்கு இறைவனுக்கே தூது செல்லக் கூடிய சக்தி உண்டாம்.
- பெருமாளின் ஆயுதங்களில் பிரதானமானது சுதர்சனச் சக்கரம்.
- வைணவர்கள் சக்கரத்தாழ்வார் என்று போற்றுகிறார்கள்.
பெருமாளின் ஆயுதங்களில் பிரதானமானது சுதர்சனச் சக்கரம். அதை வைணவர்கள் சக்கரத்தாழ்வார் என்று போற்றுகிறார்கள். பக்தர்களுக்குத் துயர் ஏற்படுகிற காலத்தில் ஓடிவந்து நம்மைக் காத்து அருள்பவர் அவரே. 13-ம் நூற்றாண்டில் காஞ்சிபுரம் அருகே உள்ள கிராமமான திருப்புட்குழி கிராமத்தில் விஷ ஜுரம் வந்தது. நிறைய மக்கள் அதனால் மடிந்தார்கள்.
அப்போது வாழ்ந்த மகான் வேதாந்த தேசிகர் அந்த ஜுரம் நீங்குமாறு சுதர்சனாழ்வாரை வேண்டிக்கொண்டு ஸ்தோத்திரம் ஒன்றைச் செய்தார். அதைப் பாடி வேண்டியதும் அந்த ஜுரம் விலகி ஓடியது என்று கூறுவார்கள். அந்த மகிமை மிகு அஷ்டகத்தை ஏகாதசி நாளில் பாடினாலோ, கேட்டாலோ சகல நன்மைகளும் கிடைக்கும்.
தற்போது நம்மை அச்சுறுத்தும் இந்த நிலையில் இருந்து மீண்டு எழுந்துவர நமக்குத் தேவை இறைவனின் அருளும் மன வலிமையும். அதை நமக்கு அருள சுதர்சன அஷ்டகம் பாடி நாம் சக்கரத்தாழ்வாரை வேண்டிக்கொள்வோம்.
விரத முறைகள்
ஏகாதசி அன்று உபவாசம் இருப்பது உத்தமம். இயலாதவர்கள் முழு அரிசிச் சோற்றைத் தவிர்ப்பது நல்லது. மேலும், இந்த நாள் முழுவதும் விஷ்ணு சகஸ்ரநாமம் அல்லது ஆழ்வார் பாசுரங்கள் பாராயணம் செய்யலாம். இயலாதவர்கள் பெருமாளின் நாமம் ஒன்றினை உச்சரித்துக் கொண்டேயிருக்கலாம். '
ஜய ஜய ஸ்ரீ சுதர்சனா... ஜய ஜய ஸ்ரீ சுதர்சனா' என்று 108 முறை சொல்லித் துதிக்க மன வலிமையும் ஆரோக்கியமும் மேம்படும் என்பது ஆன்றோர்கள் வாக்கு.
- புதனால் ஏற்படும் தோஷங்கள் நீங்குவதற்கு இந்த கோவிலில் நவகிரகத்தில் உள்ள புதனை வழிபடுவது சிறந்தது.
- சிவனையும், அம்பாளையும் இத்திருத்தலத்தில் பிரித்துப் பார்ப்பதில்லை.
சிவபெருமானும், சக்தி தேவியும் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் வகையில் பிரதோஷ சமயத்தின் போது நெல்லையப்பர் கோவிலில் அம்பாள் சந்நிதிக்கு எதிரே உள்ள நந்தி பகவானுக்கும் பிரதோஷ கால பூஜை நடைபெறுகிறது. இதேபோல் சிவராத்திரி அன்று நள்ளிரவில் நெல்லையப்பருக்கும், அம்பிகைக்கும் சேர்த்துதான் நான்கு ஜாம அபிஷேகமும், பூஜைகளும் நடத்தப்படும்.
எந்தவிதத்திலும் சிவனையும், அம்பாளையும் இத்திருத்தலத்தில் பிரித்துப் பார்ப்பதில்லை. சிவனும் சக்தியும் ஒன்று என்பதனை உணர்த்துவதற்காக உருவாக்கப்பட்ட தலமாகவே இது அமைந்திருக்கிறது.
சிவனும் சக்தியும் ஒன்று என்பதை வலியுறுத்தும் இந்த கோவிலில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து மனப்பூர்வமாக வழிபட்டால் அவர்களின் வாழ்க்கையில் சண்டை சச்சரவு இன்றி ஒற்றுமையாக இருப்பார்கள் என்பது ஐதீகம்.
ஜாதகத்தில் புதனால் ஏற்படும் தோஷங்கள் நீங்குவதற்கு இந்த கோவிலில் நவகிரகத்தில் உள்ள புதனை வழிபடுவது சிறந்தது.
- அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படும்.
- எந்த நேரத்தில் திருஷ்டி கழிக்க வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
திருஷ்டிப்பட்டவர் உடலில் அசதி உண்டாகும். அடிக்கடி கொட்டாவி வரும். எந்த வேலையிலும் மனம் லயிக்காது. ஏதாவது புது உடை அணிந்தால் அது கிழியலாம்.
சில சமயம் அதில் ஏதாவது கருப்புக்கறை படலாம். வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்சனைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், கைப்பொருள் இழப்பு என வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும்.
கணவன்-மனைவி இடையே காரணம் இல்லாத பிரச்னைகள், சந்தேகங்கள், உறவினர்களுடன் பகை, சுபநிகழ்ச்சிகளில் தடை, ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படுதல், சாப்பிட பிடிக்காமல் போவது, எல்லோரிடமும் எரிந்து விழுவது, கெட்ட கனவுகள், தூக்கமின்மை, எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது போன்றவை உண்டாகும்.
தூக்கம் அதிகமாகலாம் சப்பாடு பிடிக்காமல் போகலாம். அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படும். கிடைக்கும் சந்தர்ப்பத்தில் இருந்த விஷயங்கள் எல்லாம் கை நழுவிப் போகும்.
கவனிக்க :
திருஷ்டிக் கழிக்க அந்தி சாயும் நேரம் உகந்தது. திருஷ்டிக் கழிப்பவர் திருஷ்டி சுற்றிக்கொள்பவரைவிட வயதில் மூத்தவராக இருந்தல் அவசியம். திருஷ்டிக்கழிக்கும் நாட்கள் செவ்வாய் அல்லது ஞாயிறு மாலைப் பொழுதாக இருக்க வேண்டும். கிழக்குத் திசையை நோக்கி நிற்க வேண்டும்.
தனியாகவோ அல்லது கூட்டமாகவோ எப்படி வேண்டுமானலும் திருஷ்டி கழிக்கலாம். ஆனால் கூட்டத்தில் நிற்பவர்களில் பாதிபேருக்கு ஒருவரும், மீதி பேருக்கு மற்றொருவர் என்று மாற்றி மாற்றி திருஷ்டி கழிக்க கூடாது. நிற்கிற அத்தனை பேருக்கும் ஒரே நபர் தான் திருஷ்டி கழிக்க வேண்டும்.
கண் திருஷ்டி பரிகாரங்கள்
மலர்கள் :
வாசலில் அல்லது வீட்டிற்கு வருகிறவர்களின் கண்படும்படியான இடத்தில் பெரிய பாத்திரத்தில் பூக்களை மிதக்க வைக்கலாம். பூக்களுக்கு திருஷ்டியை கிரகத்துக் கொள்ளும் ஆற்றல் உள்ளது. வீட்டு வாசலில் செடிகள் வைக்கிறவர்கள் வெறும் அலங்காரச் செடிகளை வைக்காமல் ஒரு ரோஜா செடியாவது வைக்க வேண்டும். ஏனென்றால் ரோஜா செடியில் முட்கள் இருக்கும். முள் செடிகள் திருஷ்டியை போக்கிடும்.
வாழை :
ஒட்டுமொத்த பார்வையையும், சிந்தனையையும் திசை திருப்புவதற்கு ஏதேனும் ஒரு பொருளை வாசலிலேயே தொங்கவிடுவது நல்லது. சிலர் பூசணிக்காய், அகோரமான பொம்மை என தொங்க விடுவார்கள்.
இவை எல்லாவற்றையும் விட இயற்கைத் தாவரங்கள், செடிகொடிகள் போன்றவற்றிற்கு ஆதிக்கம் அதிகமாக இருக்கும். வாழைக்கன்று நடும் அளவிற்கு இடமிருந்தால் வாழையை நடுங்கள்.
ஏனென்றால் வாழை ஒவ்வொரு விநாடியும் துளிர்த்துக் கொண்டே இருக்கும். எந்ததெந்த திருஷ்டி இருக்கிறதோ அதை அப்போதே களைந்துவிடும் அருங்குணம் உண்டு. அதை வைத்தால் இன்னும் நல்லது.
மீன்தொட்டி :
இது வீடு, அலுவலகம் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். வருகிறவர்களின் பார்வையை திசை திருப்பும் பொருட்டு மீன் தொட்டியை வைக்கலாம்.
உப்பு :
குளிக்கும் போது அந்த நீரில் உப்பு சேர்த்து குளித்தால் கண் திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சம்பல், அலர்ஜி ஏதாவது ஏற்பட்டால் நீங்கிடும். இதனை வாரம் ஒரு முறை செய்யலாம். குறிப்பாக அவரவர் பிறந்த கிழமைகள் அல்லது செவ்வாய் கிழமைகளில் இப்படிக் குளிக்கலாம்.
எலுமிச்சை :
நம் வீட்டிற்குள் கெட்ட சக்தி நுழையாமல் தடுக்கவும், கெட்ட எண்ணம் உடைய மனிதர்களின் தாக்கம் பாதிக்காமல் இருக்கவும், கண் திருஷ்டி விலகவும் வீட்டு வாசலில் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் கற்றாழை கட்டி தொங்கவிடலாம்.
வாசலில் ஒரு எலுமிச்சை, ஒரு பச்சை மிளகாய் என மாற்றி மாற்றி 3 எலுமிச்சை நான்கு பச்சை மிளகாய் என கெட்டியான கயிறில் கோர்த்து தொடங்க விடலாம். செவ்வாய் கிழமையில் இதைச் செய்ய வேண்டும்.
படிகாரம் :
உங்கள் உழைப்புக்கு கிடைத்த பலன் அல்லது உங்களது தொடர் வெற்றியால் கூட கண் திருஷ்டி விழும். இதனால் வேலையில் திடீர் மாற்றங்கள், தடங்கள்கள் அடிக்கடி வரும். இப்படியிருந்தால் அதனை படிகாரத்தைக் கொண்டு சரி செய்யலாம்.
கடைகளில் படிகாரக் கல் என்றே கிடைக்கிறது. அதனை வாங்கிக் கொள்ளுங்கள். திருஷ்டிக்கு ஆளான நபரை கிழக்கு நோக்கி உட்கார வைத்து தலையை மூன்று முறை வலமிருந்து இடமாகவும், பின்னர் இடமிருந்து வலமாகவும் மூன்று முறை சுற்றவேண்டும்.
தலையிலிருந்து பாதம் வரை மேலிருந்து கீழாக இறக்கி திருஷ்டி கழிக்க வேண்டும். பின்னர் அதனை முச்சந்தியில் போட்டுவிட்டு திரும்பி பாராமல் வந்திடுங்கள்.
படிகாரத்தை நீரிலும் போடலாம். அப்படிச் செய்தால் அந்த நீரை பிறர் கால் படாத இடத்தில் ஊற்ற வேண்டும்.
ஆகாயகருடன் கிழங்கு :
கண் திருஷ்டி நீக்கும் பொருட்களில் மிக முக்கியமானது "ஆகாய கருடன் கிழங்கு". இது நாட்டு மருந்து கடைகளிலும், சந்தைகளிலும் கிடைக்கும். இதன் அளவை பொறுத்து விலை மாறுபடும்.
இதை வாங்கி கிழங்கை சுற்றி வளர்ந்திருக்கும் வேர்களை நீக்காமல் தண்ணீரில் கழுவி, முழுவதும் மஞ்சள் தடவி குங்குமம் வைத்து வீட்டிற்கு வெளியே வாசலில் கட்டினால் கண்திருஷ்டி நீங்கி விடும்.
இதை வீட்டிற்கு உள்ளே கண்டிப்பாக கட்ட கூடாது.
தண்ணீர் :
நம் வீட்டிற்கு வருபவர்கள் நம்முடைய வீட்டைப் பார்த்தோ அல்லது நம் வளர்ச்சியைப் பார்த்து தொடர்ந்து ஆச்சரியப்பார்வையை வீசினால் அல்லது பொறாமைப்பட்டால் அவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுங்கள்.
இப்படி செய்வதால் அவர்களின் மனநிலை எதுவாக இருந்தாலும் சரி, அவர்களின் எண்ணங்கள் எதுவாக இருந்தாலும் சரி, அதன் தாக்கம் அந்த இல்லத்தை பாதிக்காது.
எண்ணெய் :
உடல் மெலிந்து, சுறுசுறுப்பு குறைந்தோ, அல்லது ஏதாவது வியாதி மாறி மாறி வந்துக் கொண்டே இருந்தால் கண் திருஷ்டியும் ஒரு காரணமாக இருக்கலாம்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி அதில் உங்களின் முகம் தெரியுமாறு பார்த்து மூன்று முறை உங்கள் பெயரைச் சொல்லவேண்டும். பின்னர் அதனை யாருக்காவது தானமாக கொடுத்துவிட வேண்டும்.
கால்கட்டைவிரல் :
பொறாமையால் விடும் பெருமூச்சும் திருஷ்டியாக உருவெடுக்கும். முதலில் கண் திருஷ்டி காலுக்கே படும். நம் உடலில் எப்பொழுதும் ஏதாவது அடிபட்டு கொண்டே இருந்தாலும் அல்லது தீராத உடல் உபாதைகள் இருந்தாலும், கால் கட்டை விரலின் நகத்தில் கருப்பு மை வைத்தால் திருஷ்டி அண்டாது. கட்டை விரலின் நகத்தை ஆரோக்கியத்தின் கண்ணாடி என்கிறார்கள் நம் முன்னோர்கள்.
கடுகு :
குடும்பத்தில் இருக்கும் அனைவரின் தோஷம் நீங்க, தெருமண் கொஞ்சம் எடுத்து கடுகு, உப்பு, மூன்று மிளகாய், எல்லாம் சேர்த்து கிழக்கு பார்த்து அமர்ந்து மூன்று முறை எல்லோரையும் சுற்றி எரியும் விறகு அடுப்பில் போட்டுவிடவேண்டும். இது கண் திருஷ்டியை போக்கும் இதை செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமையில் செய்ய வேண்டும்.
குழந்தை :
கைக்குழந்தைகளுக்கு கண் திருஷ்டி பட்டால் சரியாக உணவு சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு ஒருகைப்பிடி உப்பை எடுத்து, தாய் மடியில் குழந்தையை வைத்து இடமிருந்து வலமா மூன்று முறையும் வலமிருந்து இடமாக மூன்று முறையும் சுற்றி அப்படியே குழந்தையின் அம்மாவுக்கும் சுற்றி அந்த உப்பை தண்ணியில போட்டிட வேண்டும்.
- நீங்கள் செய்யும் சில செயல்கள் வீட்டில் செல்வம் குறைய காரணமாக இருக்கிறது.
- நீங்கள் செய்யும் எந்த செயல்கள் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பார்க்கலாம்.
1. கழுவப்படாத எச்சில் மற்றும் சமையல் பாத்திரங்கள் அதிக நேரம் அப்படியே இருப்பது..
2. வீட்டில் பெண்கள் விளக்கேற்றாமல், ஆண்கள் விளக்கேற்றுவது...
3. தலைமுடி தரையில் உலாவருவது..
4. ஒற்றடைகள் சேருவது..
5. சூரிய மறைவுக்கு பின் வீட்டைப் பெருக்குவது, துடைப்பது, தூங்குவது...
6. எச்சில் பொருள்கள், பாத்திரங்கள், காபி கோப்பைகள் ஆங்காங்கே இருப்பது...
7. தினமும் தலைக்கு குளிப்பவர்களைத் தவிர, மற்ற பெண்கள் செவ்வாய் வெள்ளி நீங்கலாக.. இதர நாளில் தலை குளிப்பது...
8. ஆண்கள் புதன் சனி தவிர, மற்ற நாளில் தலைக்கு எண்ணெய் வைத்து குளிப்பது..
9. குழாய்களில் தண்ணிர் சொட்டுவது...
10. சுவற்றில் ஈரம் தங்குவது...
11. செல் (கரையான்) சேருவது...
12. பூரான் போன்ற விஷ ஜந்துகள் உலாவுவது..
13. அதிக நேரம் ஈரத்துணிகள் போட்டு வைப்பது...
14. தேவைக்கு அதிகமான பொருட்கள் வைத்திருப்பது... வீணடிப்பது...
15. உணவுப் பொருட்களை வீணடிப்பது.. சாக்கடையில் கொட்டுவது...
16. உப்பு, பால், சர்க்கரை, அரிசி போன்றவற்றைச் சுத்தமாகத் தீரும் வரை வாங்காமல் இருப்பது...
17. குறைந்த பட்ச வெளிச்சம் இல்லாமல், மின்சாரம் சேமிப்பதாகச் சொல்லிக் கொண்டு, வெளிச்சமில்லாமல் இருட்டில் இருப்பது..
18. மெல்லிசை கேட்காமல், சதா காலம் ராஜஸ இசையை, அதிக சப்தமுள்ள இசைகளை கேட்பது..
19. இல்லை, இல்லை.. வராது, வராது... வேண்டாம், வேண்டாம்... போன்ற வார்த்தைகளை அதிகம் உச்சரிப்பது..
20. படுக்கையையும், பூஜைப் பொருட்களையும் வேலையாட்களைக் கொண்டு சுத்தம் செய்வது..
21. வாசலில் செருப்பு, துடப்பம் போன்றவற்றால் அலங்கோலப்படுத்தி வைத்திருப்பது...
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional
- சூரிய நமஸ்காரத்துடன் ஒவ்வொரு நாளையும் தொடங்குவோம்.
- சூரியனை நினைத்து விளக்கேற்றுவோம்.
பிரபஞ்சத்தில் சூரிய சக்தி அளப்பரியது. இயற்கையான சூரியனை வணங்குவதும் வழிபடுவதும் சாலச்சிறந்தது என்கிறார்கள் முன்னோர்கள்.
வருடந்தோறும் பொங்கல் பண்டிகை கொண்டாடுகிறோம். கிட்டத்தட்ட அது சூரியனுக்கு நாம் செலுத்தும் வணக்கம். அதேபோல, வருடம் 365 நாளும் சூரிய வணக்கம் செய்வதும் சூரிய பகவானை வணங்குவதும் நம்மையும் நம் இல்லத்தையும் செழிப்பாக்கவல்லது.
எந்த பூஜை செய்வதாக இருந்தாலும் முதலில் பிள்ளையாரை வணங்குகிறோம்தானே. அதேபோல, ஒவ்வொருநாளும் சூரியனைப் பார்த்து நமஸ்கரிக்கவேண்டும் என்கிறது சாஸ்திரம்.
இந்த ஞாயிறு நாளில், நம் முதல் வணக்கம், சூரிய பகவானுக்கு என இருக்கட்டும். சூரிய பகவானை கிழக்கு நோக்கி தரிசிப்போம். இந்த உலகத்துக்காகவும் உலக மக்களுக்காகவும் பிரார்த்திப்போம்.
கிழக்கு நோக்கி நிற்பதும் அமர்வதும் அமர்ந்து சாப்பிடுவதும் உன்னதமான விஷயங்கள். கிழக்கு என்பது விடியலின் குறியீடாகியிருக்கிறது. கிழக்கில் உதிக்கும் சூரிய பகவானும் நம் வாழ்வின் விடியலுக்கான வரப்பிரசாதி.
எனவே, சூரிய நமஸ்காரத்துடன் ஒவ்வொரு நாளையும் தொடங்குவோம். ஞாயிறு நாளில், சூரிய நமஸ்காரம் செய்வோம். சூரியனை நினைத்து விளக்கேற்றுவோம். ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகங்களைப் பாராயணம் செய்வோம்.
இயலாதவர்கள், ஆதித்ய ஹ்ருதயத்தை காதாரக் கேட்பதே பலம் சேர்க்கும். வலு கொடுக்கும். வளமாக்கும்.
ஆதித்ய ஹ்ருதயம் சொல்லச் சொல்ல, கேட்கக் கேட்க, தீய சக்திகளின் தாக்கம் குறையும். நல்ல நல்ல கதிர்வீச்சுகள் நம்மைச் சூழும். அரணெனக் காக்கும். ஆயுள் பலம் தந்தருளும். செய்யும் காரியங்கள் யாவும் வீரியமாகும்.
- கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்கள் பொதுவானவை.
- புரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் பலன் ஒன்று தான்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்கள் பொதுவானவை. வழக்கமாக செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. புரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் பலன் ஒன்று தான்...
1. படுக்கை அறையில் தலைக்கு அருகே நீரை வைத்து உறங்கிவிட்டு அந்த நீரை காலையில் செடிகளுக்கு விட சுக்கிரதோஷம் படிப்படியாக குறையும். இந்த விவரத்தை மாற்றியும் சொல்லலாம், படுக்கைக்கு நாம் எடுத்து செல்லும் குடிநீர் காலையில் மிதம் இருந்தால் செடிகளுக்கு குறிப்பாக துளசி அல்லது தொட்ட சிணுங்கி செடிகளுக்கு விட்டு விட வேண்டும்.
2. அடிக்கடி பசுவிற்கு வாழை பழம், கற்கண்டு பொங்கல் கொடுப்பது சந்திரனின் ஆசிகளை நமக்கு கொடுத்து புகழை பெற்று தரும்.
3. வசதி இல்லாத குடும்பத்தினருக்குப் ஈமச் சடங்குகள் செய்ய பணம், பொருள் கொடுத்து உதவி செய்தல் சனியின் ஆசிகளை கொடுத்து ஆயுளை விருத்தி செய்யும்.
4. ஆசான், வேதம் படித்தவர, நம் முன்னோர்கள் மற்றும் சாதுக்களை விழுந்து வணங்கிட, புண்ணிய யாத்திரைக்கு இல்லாதவருக்கு பொருள் கொடுத்து உதவுவது, குழந்தை பெற்ற ஏழை தம்பதியருக்கு பொருள் கொடுத்து உதவுவது குருவின் ஆசிகள் கிடைக்கும்.
5. சிதலம் அடைந்த கோவில்களுக்கு நீர்நிலை உண்டாக்குதல் /தண்ணீர் தொட்டி /குளம் சரி செய்தல் அல்லது செய்பவருக்கு உதவுதல் தேவதைகளின் ஆசிகளை கொடுத்து நமக்கு வசியமும் கவர்ச்சியும் கொடுத்துவிடும்.
6. சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வதும் பசித்து தவிக்கும் உயிர்களுக்கு உணவு அளிப்பதும், கோவிலுக்கு சொர்ணத்தை தானமாக அல்லது கலசத்திற்கு தருவது, தொழு நோய் /குஷ்டம் கண்டவர்களுக்கு வைத்திய செலவு அல்லது அவர்களுக்கு நல்ல உணவு அளிப்பது சூரியனின் ஆசிகளை கொடுத்து நல்ல ஆரோக்கியம் மற்றும் வம்ச விருத்தி செய்யும்.
7. திருமணம் செய்ய ஏழை பெண்களுக்கு பொருள் கொடுத்து உதவுதல், நம் வாழும் மனை, தொழில் செய்யும் மனை கைகளால் தொட்டு வணங்குதல், மேலும் பூமிக்கு மரியாதை செய்தல், பல உயிர்களை வளர்த்தல் (விலங்கு, பறவைகள் ), உயிர் பலிகளை நாம் தவிர்த்தல், இல்லாதவர்களுக்கு மருத்துவ செலவிற்கு பணம் கொடுத்தல் செவ்வாயின் ஆசிகளை கொடுத்து அஷ்ட சுகங்களையும் தரும்.
8. ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு பொருள் உதவி செய்தல், புதன் கிழமைதோறும் அன்னதானம் செய்தல், புதிய உடைகளை தானம் செய்தல் (குறிப்பாக குளிர் காலத்தில் செய்வது ) புதனின் ஆசிகளை நமக்கு கொடுத்து சண்டை, பொறாமையினால் வரும் நோய் (திருஷ்டி )நீதிமன்ற சோதனை போன்ற தொல்லைகளை விலக்கி நல்ல தொழில், மென்மையான வாழ்க்கையை கொடுக்கும்.
9. பாம்புகளை கண்டதும் அடிக்காமல் இருப்பது, இறந்த நாகத்தின் உடலை கண்டதும் தீயிட்டு கொளுத்துவது, குடி கெடுத்தவன், குடிகாரன், குரு துரோகி, பசுவை கொன்றவன், சண்டாளன் - இவர்களிடம் நட்பு கொள்ளாமல் தவிர்ப்பது ராகு-கேது ஆசிகளை கொடுத்து அதிர்ஷ்டம், போகம், மற்றும் சகல பாக்கியத்தை அனுபவிக்கும் ஆசிகளை தரும். ( இந்த பஞ்ச மஹா பாவிகளை அடையாளம் கண்டு கொள்வது சற்று சிரமம் தான், தெரிந்தே சேர்வது நமக்கு தரித்தரம் )
10. பாழடைந்த சிவன் கோவிலில் விளக்கு ஏற்றுவது, பிரதோஷ நாளில் சிவ ஸ்தலங்களுக்கு முடிந்த வரையிலான அபிஷேகத்திற்கு தேவையிலான பொருட்களை வாங்கி கொடுப்பது, வெள்ளத்துடன் பச்சரிசி தூளை கலந்து அந்த கோவிலின் சுற்று பிரகாரத்தில் தூவி விடுவது தேவர்களை சாந்தி படுத்திவிடும், இவர்கள் நம் முன்னோர்களுக்கு மோட்ச பதவி அளிப்பார்கள்.
- வீடு மனை யோகம் தருவதில் முதலிடம் எப்போதுமே முருகனுக்குதான்.
- வெள்ளிக்கிழமைகளில் வேலவனை வழிபடுவது மகத்துவம் நிறைந்தது.
செவ்வாய்க்கிழமைகளில் முருகக்கடவுளை வணங்குவது செவ்வாய் தோஷத்தையெல்லாம் போக்கவல்லது என்கிறார்கள். முருகப்பெருமானின் வேலுக்கு பாலபிஷேகம் செய்து பிரார்த்தித்து கொண்டால், இதுவரை உள்ள பாவங்களெல்லாம் பறந்தோடும் என்பதும், கவலைகள் அனைத்தும் காணாமல் போகும் என்பதும் ஐதீகம்.
அதேபோல், வெள்ளிக்கிழமைகளில் வேலவனை வழிபடுவது மகத்துவம் நிறைந்தது. வெள்ளிக்கிழமையில் முருகப்பெருமானுக்கு விளக்கேற்றி, செந்நிற மலர்கள் சூட்டி, கற்கண்டு நைவேத்தியம் செய்து, கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்தால் பட்ட துயரெல்லாம் பஞ்சாய் பறந்தோடும்.
வாழ்வில் இதுவரை இல்லாத, கிடைக்காத, தாமதப்பட்டு வந்த முன்னேற்றமெல்லாம் வரிசையாக கிடைக்கும். வீடு மனை யோகம் தருவதில் முதலிடம் எப்போதுமே முருகனுக்குதான். எனவே, முருகனை மனதார தொடர்ந்து பிரார்த்தனை செய்தால் சொந்த வீட்டில் உங்களை அமரச் செய்து அழகு பார்ப்பார்.
- குலதெய்வ வழிபாட்டை தினம் தினம் நாம் செய்ய வேண்டும்.
- குலதெய்வ வழிபாடு செய்வது பெரியதாக கஷ்டம் ஒன்றுமில்லை.
குலதெய்வம் குலதெய்வ கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்த 1 பொருள் உங்கள் வீட்டில் இருந்தால் போதும். உங்கள் குடும்பத்திற்கு தீராத துன்பங்களோ துயரங்களோ ஒருபோதும் வராது.
இது தவிர ஒரு சின்ன பரிகாரம். குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு சென்று, குலதெய்வ வழிபாடு செய்து முடித்துவிட்டு, குலதெய்வ கோவிலில் இருந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுத்துக் கொள்ள வேண்டும். குடும்ப தலைவனின் கையால் ஒரு கைப்பிடி மண், குடும்பத் தலைவியின் கையால் ஒரு கைப்பிடி மண், இரண்டையும் எடுத்து ஒரு மஞ்சள் நிற துணியில் வைத்து முடிந்து கொள்ளுங்கள்.
இதை வீட்டிற்கு கொண்டு வாருங்கள். சுத்தபத்தமாக பூஜை அறையில் வைத்து விடுங்கள். இதில் சிறிதளவு மஞ்சள் தூளை மட்டும் கலந்து கொள்ளுங்கள் போதும். ஒரு செம்புத்தகட்டில் உங்களுடைய குலதெய்வத்தின் பெயரை எழுதி அந்த சின்ன செம்பு தகடை இந்த மண்ணோடு வைத்து மஞ்சள் துணையிலேயே முடிச்சு போட்டு, கட்டி வீட்டில் பத்திரமான ஒரு இடத்தில் வைத்து விடுங்கள்.
யார் கைக்கும் படாமல் இந்த மண் உங்கள் வீட்டிலேயே இருக்கட்டும். கொஞ்சம் உயரமாக வீட்டிற்கு உள் பக்கத்தில் ஆணி அடித்து அதில் இதை மாட்டி வைத்தால் கூட போதும். தினம் விளக்கு ஏற்றும் போது ஊதுவத்தியை இந்த முடிச்சுக்கும் காண்பித்து விடுங்கள். அவ்வளவுதான். வருடத்திற்கு ஒருமுறை குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது புதிய மண்ணை எடுத்து வரலாம். பழைய மண்ணை உங்களுடைய வீட்டிற்கு உள்ளேயே ஏதாவது ஒரு மண் பாங்கான இடத்தில் கொட்டி விடுங்கள்.
இப்படி குலதெய்வ கோவிலில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணில் குலதெய்வமே குடியிருக்கும். உங்களுடைய முன்னோர்கள் காலடித்தடம் பட்ட மண் அது. இனி உங்களுடைய அடுத்த அடுத்த சந்ததியர்கள் செல்லக்கூடிய இடம்தான் அது. அப்படிப்பட்ட பொக்கிஷமான அந்த ஒரு கைப்பிடி மண் உங்கள் வீட்டில் இருப்பது அந்த குலதெய்வமே உங்கள் வீட்டில் வாசம் செய்வதாக அர்த்தம்.
விதியின் கட்டாயத்தில் நம் குடும்பத்திற்கு வரக்கூடிய துன்பத்திலிருந்து துயரத்திலிருந்து காப்பாற்றுவது நம்முடைய குலதெய்வம் தான். அப்படிப்பட்ட குலதெய்வ வழிபாட்டை தினம் தினம் நாம் செய்ய வேண்டும். குலதெய்வ வழிபாடு செய்வது பெரியதாக கஷ்டம் ஒன்றுமில்லை. வீட்டில் இருக்கும் பெண்கள் விளக்கு ஏற்றும் போது குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை சொல்லி 'நீ தான் என்னுடைய குடும்பத்தை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்'. என்று குலதெய்வத்தை தினம் தினம் நினைவுகூர்ந்தாலே போதும். குலதெய்வம் உங்கள் வீட்டில் தங்கி குடும்பத்தை காக்கும். குலதெய்வத்தின் பெயரை ஒரு நாளும் உச்சரிக்காமல் இருக்காதீங்க.
பெண்கள் மட்டும் தான் இப்படி குலதெய்வத்தை நினைவு கூற வேண்டும் என்று அவசியம் கிடையாது. அந்த வீட்டில் இருக்கும் ஆண்கள், குழந்தைகள் பெரியவர்கள் என்று எல்லோரும் தினமும் குலதெய்வ வழிபாடு செய்துவிட்டு, அவரவர் வேலையை தொடங்கினால், அந்த நாள் நல்லபடியாக செல்லும்.
- அருணகிரிநாதர் இத்தல முருகனை குறித்து திருப்புகழ் பாடி உள்ளார்.
- முருகப்பெருமான் சூரனை அழித்து தேவர்களை காத்தார்.
அம்மனின் 64 சக்தி பீடங்களில் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலும் ஒன்று. விசுவாமித்திரர், அகத்தியர், காத்தியாயனர், நாரதர், முசுகுந்த சக்கரவர்த்தி ஆகியோர் இத்தலத்தில் வழிபாடு செய்து உள்ளனர். சிவன், பெருமாள், முருகன், அனுமன் என 4 பேரும் இத்தலத்தில் அருள்பாலிப்பது இக்கோவிலின் சிறப்பாகும்.
அருணகிரிநாதர் இத்தல முருகனை குறித்து திருப்புகழ் பாடி உள்ளார். கோச்செங்கட் சோழன் கட்டிய 72 மாட கோவில்களில் இதுவும் ஒன்று.
தேவர்கள், சூரபத்மனிடமிருந்து தங்களை காக்க முருகப்பெருமானுக்கு 'திரி சதை' செய்து வேண்டி கொண்டனர். இதனால் முருகப்பெருமான் சூரனை அழித்து தேவர்களை காத்தார்.
சிங்கார வேலவனுக்கு, அம்மன் தன் சக்தியை வேலாக வழங்கிய இத்தல முருகனுக்கு "சத்ரு சம்ஹார திரி சதை" அர்ச்சனை செய்தால் எதிரிகள் தொந்தரவு விலகி நலம் விளையும் என்பது ஐதீகம்.
சிக்கல் சிங்காரவேலவரை தரிசித்தால் சிக்கல்கள் யாவும் நீங்கிடும் என்பது ஐதீகம்.
இந்த கோவில் தமிழகத்தில் நாகப்பட்டினம் அருகே சிக்கல் என்கிற கிராமத்தில் அமைந்துள்ளது. திருவாரூரிலிருந்து 18 கி.மீ தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து மேற்கே 5 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
- ஜாதகத்தில் நான்கு திசைகள் நடக்கின்ற பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
- பொன், பொருள் இவற்றிற்கு அதிபதியாக இருப்பவர்கள் சுக்கிரன் மற்றும் குரு.
மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து அந்த காசை சிறுக சிறுக சேமித்து வைத்து, அதிலிருந்து சிறு தொகையை எடுத்து ஒரு பொருளை வாங்கி வைத்திருப்போம். ஆனால் அதையும் அடகு வைக்கும் நிலைமை வரும் பொழுது நமது மனதிற்குள் ஏற்படும் மனக் குமுறல்களை சொல்வதற்கு வார்த்தையே கிடையாது. இவ்வாறு ஒவ்வொரு வீட்டிலும் இருக்கின்ற பெண்கள் இந்த வேதனையை அனுபவிக்கிறார்கள்.
நகையை அடகு வைப்பதாக இருந்தால் அதற்கான சரியான காரணம் இருந்தால் மட்டுமே அடகு வைக்க வேண்டும். ஏனென்றால் ஜோதிடத்தின் படி பொன், பொருள் இவற்றிற்கு அதிபதியாக இருப்பவர்கள் சுக்கிரன் மற்றும் குரு. இவர்களுடைய ஸ்தானம் ஜாதகத்தில் பாதகமாக இருந்தது என்றால் அந்த நேரத்தில் நகையை அடகு வைக்க வேண்டிய நிலைமை உண்டாகும். இவற்றை அறிந்து கொள்ள நம்மை நாமே சற்று கவனமாக சிந்திக்க வேண்டும். அதிகமாகக் கோபப்படுவது, குழப்பம் அடைவது, அதிக ஆசை கொள்வது, வருகின்ற கோபம் உச்சத்தை அடைவது இவ்வாறான வெளிப்பாடுகள் இருந்தது என்றால் அது நமது ஜாதகத்தில் சரியான நிலைமை இல்லை என்பதை தெரிந்து கொள்வதாக அமைகிறது.
ஜாதகத்தில் நான்கு திசைகள் நடக்கின்ற பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முதலாவதாக ராகு திசை நடக்கிற பொழுது நகையை வைத்து ஏதேனும் தொழிலில் முதலீடு செலுத்துவதாக இருந்தால் அந்தப் பணம் விரையம் தான் ஆகும். இரண்டாவதாக குரு திசை நடக்கின்ற பொழுது அடகு வைக்கின்ற நகை நூற்றுக்கு 70 சதவிகிதம் மறுபடியும் நமது கைக்கு வராமல் போய்விடும்.
அவ்வாறு நூற்றுக்கு 70 சதவீதம் சுக்ர திசை நடப்பவர்களுக்கும், நூற்றுக்கு ஐம்பது சதவிகிதம் கேது திசை நடப்பவர்களும் பாதிப்பு ஏற்படும். எனவே மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவ்வாறு ஒரு நகை ஒரு முறை அடகிற்க்கு சென்று விட்டது என்றால் அது மீண்டும் மீண்டும் அடகு வைக்க சென்றுகொண்டே இருக்கும். இதனை தவிர்ப்பதற்காக நகையைக் முதன் முதலில் வாங்கி அணிகின்ற பொழுது ஆண், பெண் யாராக இருந்தாலும் இந்த மந்திரத்தை சொல்லி அணிய வேண்டும்.
மந்திரம்
"ஓம் சொர்ண காஞ்சன மாதங்கி
வசம் வசம் வசம் வா ஸ்ரீம் மம
தநூகரன புவாய நமோ நம".
அதேபோல் நகையை அடகு வைத்தவர்கள் இந்த மந்திரத்தைதினமும் சொல்லி வந்தால் விரைவில் அடகு வைத்த நகையை மீட்டெடுக்கலாம்.