search icon
என் மலர்tooltip icon

    கால்பந்து

    கோபா அமெரிக்கா கால்பந்து சாம்பியன் பட்டம் வென்றது அர்ஜென்டினா
    X

    கோபா அமெரிக்கா கால்பந்து சாம்பியன் பட்டம் வென்றது அர்ஜென்டினா

    • இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முனைப்பு காட்டினர்.
    • போட்டி முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

    கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா அணிகள் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறின. இன்று அதிகாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது.

    பரபரப்பாக துவங்கிய இந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. விறுவிறுப்பாக நடைபெற்ற இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முனைப்பு காட்டினர். எனினும், போட்டி முடியும் வரை இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.


    இதனால் போட்டியில் முடிவு கிடைக்காத சூழல் நிலவியது. போட்டி சமனாவதை தவிர்க்கும் நோக்கில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. கூடுதல் அவகாசத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதில் தீவிரம் காட்டிய இரு அணி வீரர்களும் கோல் அடிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தின.

    போட்டியின் 112 ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் லோ செல்சோ அசிஸ்ட் செய்ய லௌடரோ மார்டின்ஸ் இறுதிப் போட்டியின் முதலாவது கோலை அடித்தார். இது அர்ஜென்டினா கோப்பையை வெல்ல காரணமாக மாறியது. போட்டி நிறைவில் அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

    Next Story
    ×