என் மலர்
அசாம்
- கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது.
- இதில் இந்திய வீரரான சதீஷ்குமார் சாம்பியன் பட்டம் வென்றார்.
கவுகாத்தி:
கவுகாத்தியில் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் சதீஷ்குமார் கருணாகரன், சீனாவின் ஜூ ஜுவான் உடன் மோதினார்.
இந்தப் போட்டியில் சதீஷ்குமார் 21-17, 21-14 என்ற புள்ளிக்கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார். இந்தப் போட்டி 44 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
கடந்த ஆண்டு நடந்த ஒடிசா மாஸ்டர்ஸ் சூப்பர் 100 போட்டியில் சதீஷ்குமார் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீராங்கனை அன்மோல் அரையிறுதியில் வெற்றி பெற்றார்.
கவுகாத்தி:
கவுகாத்தியில் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்தியாவின் அன்மோல் கர்ப், சக வீராங்கனை மான்சி சிங்குடன் மோதினார்.
இதில் அன்மோல் கர்ப் 21-19, 21-17 என்ற புள்ளிக்கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்தப் போட்டி வெறும் 40 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சதீஷ்குமார் 13-21, 21-14, 21-16 என்ற புள்ளிக்கணக்கில் சீன வீரரை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார்.
இதேபோல், பெண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிரஸ்டோ ஜோடி, சீனாவின் கெங் ஷு லியாங்-வாங் டிங் கெ ஜோடியை 21-14, 21-14 என வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.
- கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீராங்கனை காலிறுதியில் வெற்றி பெற்றார்.
கவுகாத்தி:
கவுகாத்தியில் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் அன்மோல் கர்ப், தாய்லாந்து வீராங்கனையுடன் மோதினார்.
இதில் அன்மோல் கர்ப் 21-13, 22-24, 22-20 என்ற புள்ளிக்கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இந்தப் போட்டி சுமார் ஒரு மணி நேரம் 14 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
- கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் ரஜாவத் 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.
கவுகாத்தி:
கவுகாத்தியில் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் தருண், சக வீரரான பிரியான்ஷு ரஜாவத்துடன் மோதினார்.
இதில் தருண் 24-22, 15-21, 21-13 என்ற புள்ளிக்கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இந்தப் போட்டி சுமார் ஒரு மணி நேரம் 10 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
- உணவகங்கள், விடுதிகள், பொது இடங்களிலும் மாட்டிறைச்சி சமைப்பதற்கும் உண்பதற்கும் தடை
- கோயில்களை சுற்றி 5 கி.மீ. சுற்றளவில் கால்நடைகளை அறுப்பதும், இறைச்சியை விற்பதும் குற்றமாகும்.
அசாம் மாநிலத்தில் மாட்டிறைச்சிக்குத் தடை விதிப்பதாக அம்மாநில முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அசாமில் திருத்தம் செய்யப்பட்ட கால்நடை பாதுகாப்புச் சட்டம் 2021ன் படி இந்துக்கள், ஜைனர்கள், சீக்கியர்கள் பெரும்பான்மையாக வசிக்கக் கூடிய இடங்கள் மற்றும் கோயில்களை சுற்றி 5 கி.மீ. சுற்றளவில் கால்நடைகளை அறுப்பதும், இறைச்சியை விற்பதும் குற்றமாகும்.
இந்த சட்டத்தை திருத்தி புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாக அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார். அதன்படி அசாம் மாநிலத்தில் உணவகங்கள், விடுதிகள், பொது இடங்களிலும் மாட்டிறைச்சி சமைப்பதற்கும் உண்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
இந்த தடையை மீறுபவர்களுக்கு 3 முதல் 8 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.3 முதல் 5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாட்டிறைச்சி தடைக்கு அசாம் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
- கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் ரஜாவத் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
கவுகாத்தி:
கவுகாத்தியில் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பிரியான்ஷு ரஜாவத், சக வீரரான ஆர்யா பிவ்பதகியுடன் மோதினார்.
இதில் ரஜாவத் 22-20, 21-14 என்ற புள்ளிக்கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இந்தப் போட்டி சுமார் 35 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
இதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் தன்வி சர்மா முதல் சுற்றில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- அசாம் மாநிலத்தின் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
- இதில் கரீம்கஞ்ச் மாவட்டத்தை ஸ்ரீபூமி என பெயர் மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கவுகாத்தி:
அசாம் மாநிலத்தின் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமை தாங்கினார்.
இந்தக் கூட்டத்தில் அசாம் மாநிலத்தின் கரீம்கஞ்ச் மாவட்டத்தை ஸ்ரீபூமி என பெயர் மாற்றுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக, அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா கூறுகையில், 100 ஆண்டுகளுக்கு முன்பு, கபிகுரு ரவீந்திரநாத் தாகூர் நவீன கரீம்கஞ்ச் மாவட்டத்தை ஸ்ரீபூமி - மா லட்சுமியின் நிலம் என விவரித்தார். இன்று, அசாம் அமைச்சரவை நமது மக்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி உள்ளது.
மாவட்டத்தின் பெயரை மாற்றும் நடவடிக்கை, மாவட்ட மக்களின் எதிர்பார்ப்புகளையும், அபிலாஷைகளையும் பிரதிபலிக்கும் என தெரிவித்தார்.
- அசாம் மாநிலம் கம்ரூப் மாவட்ட பகுதியில் நடந்ததாக கூறப்படுகிறது.
- காண்டாமிருகம் தொடர்ந்து வெறிகொண்டு ஓடியபடி கண்ணில் கண்டவர்களையெல்லாம் துரத்துகிறது.
சிறுத்தைகள், புலிகள் போன்றவையும், யானைகளும்கூட ஊருக்குள், தோட்ட பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்வதை கேள்விப்பட்டு இருப்போம். தாவர உண்ணி விலங்குகளான காண்டாமிருகம் பெரும்பாலும் ஊர்ப்புறத்தில் நுழைவது இல்லை. ஆனால் ஆக்ரோஷமான அவை ஊருக்குள் நுழைந்தால் என்ன நடக்கும் என்பதை சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ள ஒரு வீடியோ படம்பிடித்து காட்டுகிறது.
கிராம மக்கள் பீதி கிளம்ப ஓடுவதை வீடியோவில் பார்க்க முடிகிறது. இந்த சம்பவம், அசாம் மாநிலம் கம்ரூப் மாவட்ட பகுதியில் நடந்ததாக கூறப்படுகிறது. சிறிய ஊரை ஒட்டிய தோட்ட பகுதிக்குள் இருந்து அந்த காண்டாமிருகம் சாலைக்கு ஏறி வருகிறது. எதிரே ஒரு மனிதரை கண்டதும் அது ஆக்ரோஷம் அடைந்து அவரை தாக்க ஓடுகிறது.
இதனால் பீதி அடைந்த அந்த நபர் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு தப்பித்து ஓடுகிறார். காண்டாமிருகம் தொடர்ந்து வெறிகொண்டு ஓடியபடி கண்ணில் கண்டவர்களையெல்லாம் துரத்துகிறது. மக்கள் பீதியில் கூச்சலிடுவதும் வீடியோவில் பதிவாகி உள்ளது. கேமராவில் படம் பிடித்தவரும் காண்டாமிருகத்திற்கு போக்கு காட்டியே வீடியோவை பதிவு செய்து உள்ளார். 2 நாட்களில் இந்த வீடியோ 2 கோடியே 67 லட்சம் தடவை ரசிக்கப்பட்டு உள்ளது.
- நாகாலாந்தின் பல்வேறு பகுதிகளில் நாய் இறைச்சி பொதுமக்கள் சாப்பிடுகின்றனர்.
- பிற மாநிலங்களில் இருந்து நாகாலாந்திற்கு நாய்களை இறைச்சிக்காக கடத்துகின்றனர்.
அசாம் மாநிலத்தில் இறைச்சிக்காக சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 19 நாய்களை போலீசார் மீட்டனர். நாய்களை கடத்தியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்
இந்த நாய்களை அசாம் மாநிலத்தில் இருந்து நாகாலாந்திற்கு கொண்டு சென்று நாய் இறைச்சிக்கு விற்பனை செய்ய கைது செய்யப்பட்டவர்கள் திட்டமிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
நாகாலாந்தின் பல்வேறு பகுதிகளில் நாய் இறைச்சி பொதுமக்கள் சாப்பிடுகின்றனர். 2020 ஆம் ஆண்டு நாய் இறைச்சி வியாபாரத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் 2023 ஆம் ஆண்டு கவுகாத்தி உயர் நீதிமன்றம் அந்த உத்தரவை ரத்து செய்தது.
நாகாலாந்தில் நாய் இறைச்சி சாப்பிடப்பட்டாலும் பிற மாநில மக்கள் நாய் இறைச்சியை சாப்பிடுவதில்லை. ஆகையால் பிற மாநிலங்களில் இருந்து நாகாலாந்திற்கு நாய்களை இறைச்சிக்காக கடத்தும் போக்கு அண்மைக்காலங்களில் அதிகரித்துள்ளது.
- கவுகாத்தி நீதிமன்றத்தில் பொதுநல மனு நிராகரிக்கப்பட்டது.
- ஒரே ஆண்டில் 171 என்கவுன்டர்கள் என்பது கடந்து போகக்கூடிய விஷயம் அல்ல
அசாமில் ஒரே வருடத்தில் போலீசாரால் 171 பேர் என்கவுண்டரில் கொல்லப்பட்டது குறித்து உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. கடந்த 2021-22 காலக்கட்டத்தில் அசாம் போலீசால் 171 என்கவுன்டர்கள் நடத்தப்பட்டன.
இந்த என்கவுன்டர்கள் குறித்து விசாரணை நடந்த வேண்டும் என்றும் கவுகாத்தி நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட பொதுநல மனு நிராகரிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து விவகாரம் உச்சநீதிமன்றத்துக்குச் சென்ற நிலையில் நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வின் முன் தற்போது விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதிகள், ஒரே ஆண்டில் 171 என்கவுன்டர்கள் என்பது கடந்து போகக்கூடிய விஷயம் அல்ல, காவல்துறை குறிப்பிட்ட சமூகத்தினரைக் குறிவைக்கின்றனரா? தங்களது அதிகார வரம்பை மீறுகின்றனரா? என்பதை அசாம் போலீஸ் விளக்க வேண்டும் என்றும் என்கவுன்டர்கள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை குறித்த விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.
- ஃபேர்பிளே செயலிக்கான விளம்பரத்தில் நடிகை தமன்னா நடித்திருந்தார்.
- அமலாக்கத்துறை இயக்குநரகம் நடிகை தமன்னாவுக்கு 2 ஆவது முறையாக சம்மன் அனுப்பியது.
ஐபிஎல் போட்டிகளை ஃபேர்பிளே செயலியில் சட்ட விரோதமாக ஒளிபரப்பிய வழக்கில், அச்செயலியின் விளம்பர தூதரான நடிகை தமன்னாவிடம் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
ஃபேர்பிளே என்பது மகாதேவ் ஆன்லைன் கேமிங் செயலியின் துணை செயலியாகும். இது கிரிக்கெட் போன்ற பல்வேறு நேரடி விளையாட்டுகளில் சட்டவிரோதமாக பெட்டிங் செய்வதற்கான செயலியாகும். மகாதேவ் ஆன்லைன் செயலியை துபாயைச் சேர்ந்த சவுரப் சந்திரகர் மற்றும் ரவி உப்பல் ஆகியோர் உருவாக்கினர்.
இந்த செயலி மீது கடந்தாண்டு பண மோசடி வழக்குப் பதியப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை ஓராண்டாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
ஃபேர்பிளே செயலிக்கான விளம்பரத்தில் நடிகை தமன்னா நடித்திருந்தார். இந்நிலையில், நடிகை தமன்னா கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரை ஃபேர்பிளே செயலியில் சட்ட விரோதமாக ஒளிபரப்பு செய்ய உதவியதால், தங்கள் நிறுவனத்திற்குக் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வியாகாம் நிறுவனம் புகார் அளித்தது.
இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக நடிகை தமன்னாவுக்கு மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பி விசாரித்தனர்.
இந்நிலையில், அசாம் மாநிலம் கவுகாத்தியில் அமலாக்கத்துறை இயக்குநரகம் நடிகை தமன்னாவுக்கு 2 ஆவது முறையாக சம்மன் அனுப்பியது.
இதனையடுத்து இன்று மதியம் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு ஆஜரான தமன்னாவிடம் அதிகாரிகள் 5 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். ஆனாலும் விசாரணை விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அசாமில் அகர்தலா- லோகமான்ய திலக் விரைவு ரெயில் தடம் புரண்டு விபத்து.
- விபத்தில் பெரிய உயிர் சேதமோ காயமோ ஏற்படவில்லை.
அசாம் மாநிலத்தில் அகர்தலா- லோகமான்ய திலக் விரைவு ரெயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:-
ரெயில் 12520 அகர்தலா- எல்டிடி எக்ஸ்பிரஸின் 8 பெட்டிகள் இன்று மதியம் 3.55 மணியளவில் லும்டிங்கிற்கு அருகிலுள்ள டிபலாங் நிலையம் லும்டிங் அருகே தடம் புரண்டன.
இந்த விபத்தில் பெரிய உயிர் சேதமோ காயமோ ஏற்படவில்லை. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.
விபத்தை தொடர்ந்து, ரெயில்வே அதிகாரிகளை ஒருங்கிணைத்து வருகிறோம். மேலும், மீட்பு ரெயில் விரைவில் சம்பந்தப்பட்ட இடத்தை அடையும்.
லும்டிங்கில் உள்ள ஹெல்ப்லைன் எண்கள் 03674 263120, 03674 263126.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.