search icon
என் மலர்tooltip icon
    < Back
    Animal
    Animal

    அனிமல்

    இயக்குனர்: சந்தீப் ரெட்டி வங்கா
    எடிட்டர்:சந்தீப் ரெட்டி வங்கா
    ஒளிப்பதிவாளர்:அமித் ராய்
    இசை:மனன் பரத்வாஜ்
    வெளியீட்டு தேதி:2023-12-01
    Points:4200

    ட்ரெண்ட்

    வாரம்1234567
    தரவரிசை74725437422114
    Point1052152479548010614796
    கரு

    தந்தை- மகனின் பசப்போராட்டம் குறித்த கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம் 

    நாயகன் ரன்பீர் கபூர் மிகப்பெரிய தொழிலதிபரான அனில் கபூரின் மகன். ரன்பீர் கபூர் சிறு வயதில் இருந்தே அப்பா மீது பாசமாக இருக்கிறார். ஆனால் அப்பா அனில் கபூர் அவர் மீது பாசம் காட்டாமல் இருக்கிறார். இருப்பினும் ரன்பீர் கபூர் அப்பா புள்ளையாகவே வளர்கிறார்.

    ஒரு கட்டத்தில் அனில் கபூரை கொல்ல சதி திட்டம் நடக்கிறது. இதில் அவர் குண்டடி பட்டு தப்பிக்கிறார். தன் தந்தையை கொலை செய்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க ரன்பீர் கபூர் முயற்சி செய்கிறார்.

    இறுதியில் தன் தந்தை அனில் கபூரை கொலை செய்ய முயற்சி செய்தவர்கள் யார் என்பதை ரன்பீர் கபூர் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    நாயகனாக நடித்திருக்கும் ரன்பீர் கபூர், அனிமல் என்கிற டைட்டிலுக்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார்.

    நாயகியாக நடித்து இருக்கும் ராஷ்மிகா மந்தனா யாரும் எதிர்பார்த்திராத திறமையான நடிப்பை கொடுத்து இருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார். கவர்ச்சியிலும் கவர்ந்து இருக்கிறார்.

    அனில் கபூர் தனது முதிர்ச்சியான நடிப்பையும், பாபி தியோல் மிரட்டலான வில்லத்தனத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். சிறிது நேரம் மட்டுமே வந்தாலும் மனதில் பதிகிறார் பிரித்வி ராஜ்.

    இயக்கம்

    தந்தை- மகன் பாசத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா. முதல் பாதி விறுவிறுப்பாகவும் இரண்டாம் பாதி தேவை இல்லாததை வைத்தும் இயக்கி இருக்கிறார் இயக்குனர்.

    ஒரு சில காட்சிகள் பிரமாண்டமாக கொடுத்து இருக்கிறார். குறிப்பாக இடைவேளை காட்சியில் மாஸ் காண்பித்து இருக்கிறார். இரண்டாம் பாதியின் நீளத்தை குறைத்து இருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம்.

    இசை

    ஏழு இசையமைப்பாளர்களை பயன்படுத்தி இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா ஒவ்வொரு பாடலையும் ரசிக்கும் படி கொடுத்துள்ளார். ஹர்ஷவர்தன் ரமேஷ்வரின் பின்னணி இசை படத்துக்கு பெரிய பலம்.

    ஒளிப்பதிவு

    அமித்ராயின் ஒளிப்பதிவு சிறப்பு.

    படத்தொகுப்பு 

    சந்தீப் ரெட்டி வங்கா படத்தொகுப்பு அருமை.

    புரொடக்ஷன் 

    டி சீரிஸ் பிலிம்ஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இணைந்து அனிமல் திரைப்படத்தை தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    வாசகர் விமர்சனம்
    2023-12-07 16:40:24.0
    KALI RAJ

    ×