என் மலர்


ஆக்வாமேன் 2
எதிரியை வெல்ல நினைக்கும் ஆக்வாமேன் குறித்த கதை.
கதைக்களம்
ஆக்வாமேன் தன் குடும்பத்துடன் வாழ்த்து வருகிறார். இவர் இயற்கையை மாசுபடுத்தி அட்லாண்டிஸ் ராஜ்ஜியத்தையே அழிக்க முயற்சிக்கும் தனது சகோதரர் கோர்டாக்ஸை, மந்திரசக்தியை பயன்படுத்தி பாலை வனத்தில் சிறைபிடிக்கிறார்.
இந்த நேரத்தில் முதல் பாகத்தில் தனது தந்தையை கொன்ற ஆக்வாமேனை பழிவாங்க துடிக்கும் பிளாக் மேண்டாவிற்கு, கோர்டாக்ஸின் மந்திர கோல் கிடைக்கிறது. இதன் மூலம் ஆக்வாமேனை இவர் பழிவாங்க நினைக்கிறார். பிளாக் மேண்டாவை தடுப்பதற்கு ஆக்வாமேன் சிறைப்பிடித்த தன் சகோதரனை விடுவிக்க வேண்டும்.
இறுதியில் ஆக்வாமேன் தன் சகோதரனை விடுவித்தாரா? பிளாக் மேண்டா என்ன ஆனார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
ஆக்வாமேன் முதல் பாகத்தில் ஜேசன் மோமோவை பார்த்து பிரமித்து போன ரசிகர்களுக்கு இரண்டாம் பாகத்தில் அதற்கான வாய்ப்பை ஜேசன் மோமோ கொடுக்கவில்லை. இவர் தன் கதாபாத்திரத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
கதாநாயகியான ஆம்பர் ஹெர்ட் நடிப்பு ரசிகர்களை கவரவில்லை என்பதே உண்மை. பிளாக் மேண்டாவாக வரும் யாஹ்யா அப்துல் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்துள்ளார்.
இயக்கம்
2021-ம் ஆண்டு தொடங்கிய ஆக்வாமேன்-2 திரைப்பம் ரீ சூட் செய்ததன் மூலம் 2023-ம் ஆண்டு வரையில் தொடர்ந்தது. இயக்குனர் ஜேம்ஸ் வான் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். எந்த ஒரு முக்கிய கதாபாத்திரமும் சரியாக கையாளப்படவில்லை என்பது மிகப்பெரிய பின்னடைவு.
பிரமாண்ட கிராபிக்ஸ் காட்சிகள், ஆங்கங்கே இடம்பெற்று இருக்கும் நகைச்சுவை காட்சிகள் ஆகியவை படத்திற்கு பலம்.
ஒளிப்பதிவு
டான் பர்கெஸ் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தளித்துள்ளது.
படத்தொகுப்பு
கிர்க் மோரி படத்தொகுப்பு ஓகே.
புரொடக்ஷன்
டிசி ஸ்டுடியோஸ், அட்டாமிக் மான்ஸ்டர், சாப்ரான் கம்பெனி நிறுவனம் இணைந்து ‘ஆக்வாமேன் 2’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.