என் மலர்


கேப்டன் அமெரிக்கா ப்ரேவ் நியூ வேர்ல்ட்
கதைக்களம்
படத்தின் தொடக்கத்திலேயே ஹாரிஸன் போர்ட் அமெரிக்கா பிரசிடண்ட் ஆக பதவி ஏற்கிறார். இந்த அமெரிக்கா பிரசிடண்டுக்கு ஒரு தரப்பு ஆதரவும் மறு பக்கம் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இச்சூழ்நிலையில் தற்பொழுது கேப்டன் அமெரிக்காவான சாமிற்கு வைட் ஹவுஸில் இருந்து அழைப்பு வருகிறது. இதனை தொடர்ந்து சாம் அவரது நண்பரான பிராட்லியை அழைத்துக் கொண்டு ஒயிட் ஹவுஸிற்கு செல்கிறார்.
அங்கே வெள்ளை மாளிகையில் பல நாட்டு ஜனாதிபதிகள் இருக்கின்றன ஒரு முக்கியமான மீட்டிங் நடைப்பெறவுள்ளது. அப்பொழுது எதிர்ப்பாராத விதமாக கதாநாயகனுடன் வந்த பிராட்லி அமெரிக்காவின் ஜனாதிபதியை கொல்ல முயற்சிக்கிறார். உடனே அங்கு இருந்த பாதுகப்பு வீரர்கள் அவரை கைது செய்கின்றனர்.
தன்னுடைய நண்பன் எதற்கு இப்படி திடீர் என ஜனாதிபதியை கொன்றார், இதற்கு பின் வேறொரு மர்மமும் பின்னணி இருப்பதை கதாநாயகன் உணர்கிறார். இதனை கண்டு பிடித்து தன் நண்பன் ஒரு நிரபராதி என நிறுபிக்க களத்தில் இறங்குகிறார் சாம். இதற்கு அடுத்து என்ன ஆனது? நண்பனை காப்பாற்றினாரா சாம்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கதாநாயகனான ஆண்டனி மாக்கி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். முதலில் இவர் கேப்டன் அமெரிக்கா கதாப்பாத்திரத்திற்கு நியாயம் சேர்ப்பாரா என்ற கேள்வி எழுந்த சூழ்நிலையில் அதை திறம்பட செய்துள்ளார். இவருக்கு சமமாக போட்டிப் போட்டு நடித்துள்ளார் ஹாரிசன் ஃபார்ட். சேத் ராலின்ஸ், சிரா ஹாஸ் நடித்த கதாப்பாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளனர்.
இயக்கம்
கேப்டன் அமெரிக்கா சீரிசில் இது 4 - வது படமாகவும். மார்வல் சினிமாட்டிக் யூனிவர்சில் 35 திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை ஜூலியஸ் ஓனா இயக்கியுள்ளார். MCU ரசிகர்களுக்கு இப்படம் அதிருப்தியைதான் ஏற்படுத்தியுள்ளது. ஆக்ஷன் காட்சிகளில் படக்குழு உழைப்பை கொடுத்துள்ளனர். ரெட் ஹல்க் மற்றும் இந்தியன் ஓஷன் ஆக்சன் காட்சிகளை மிரட்டியுள்ளனர். படத்தின் கதையிலும் திரைக்கதையிலும் கூடுதல் கவனம் செலுத்திருக்கவேண்டும். மார்வல் படத்திற்கான நகைச்சுவை காட்சிகள் இல்லை என்பது பலவீனம்.
இசை
லாரா கார்ப்மானின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம்.
ஒளிப்பதிவு
கிராமர் மொர்கெந்தா ஒளிப்பதிவு மிரள வைத்துள்ளது என்றே சொல்லலாம். படத்தின் சண்டை காட்சிகளில் மிரட்டியுள்ளார்.
தயாரிப்பு
மார்வல் எண்டர்டெயின்மண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.