என் மலர்tooltip icon
    < Back
    Chandramukhi 2
    Chandramukhi 2

    சந்திரமுகி 2

    இயக்குனர்: பி.வாசு
    எடிட்டர்:ஆண்டனி
    ஒளிப்பதிவாளர்:ஆர்.டி.ராஜசேகர்
    இசை:எம்.எம். கீரவாணி
    வெளியீட்டு தேதி:28 Sept 2023
    Points:13864

    ட்ரெண்ட்

    வாரம்1234
    தரவரிசை15283140
    Point438361842679618
    கரு

    சந்திரமுகி ஆத்மாவால் ஏற்படும் பிரச்சினை குறித்த கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சந்திரமுகி 2 விமர்சனம்

    கதைக்களம்

    தொழிலதிபரான சுரேஷ் மேனன், ராதிகா தம்பதியினர் குடும்பத்தில் அடுத்தது பிரச்சனைகள் வருகிறது. இதனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் பிரச்சினைகள் தீரும் என்று ஜோதிடர் சொல்ல, குடும்பத்தில் உள்ள அனைவரும் சந்திரமுகி உள்ள பங்களாவிற்கு செல்கிறார்கள்.இவர்களுடன் ராதிகா மகளின் குழந்தைகளுக்கு பாதுகாவலராக இருக்கும் ராகவா லாரன்சும் சந்திரமுகி பங்களாவில் தங்குகிறார். இந்நிலையில் குலதெய்வ கோவிலை சுத்தம் செய்ய சென்ற இரண்டு பேர் மர்மமான முறையில் இறக்கிறார்கள்.அதே சமயம் சந்திரமுகியின் ஆத்மா ராதிகாவின் மகளான லட்சுமி மேனன் உடலுக்குள் செல்கிறது. இதையடுத்து பல பிரச்சினைகள் அந்த பங்களாவில் நடக்கிறது.இறுதியில் சந்திரமுகியின் ஆத்மா லட்சுமி மேனனை விட்டு சென்றதா? சந்திரமுகியின் ஆத்மா ராதிகா குடும்பத்தை என்ன செய்தது? குல தெய்வ கோவிலில் ராதிகாவின் குடும்பத்தினர் வழிபாடு செய்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    நாயகனாக நடித்திருக்கும் ராகவா லாரன்ஸ் வேட்டையனாக வீரத்தையும், பாண்டியனாக காமெடியையும் வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் தனக்கே உரிய பாணியில் நடனம், ரொமான்ஸ் என கலக்கி இருக்கிறார்.நாயகியாக நடித்திருக்கும் கங்கனா ரனாவத் அழகு தேவதையாக ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். சந்திரமுகியாக நடனம், பயம் என அனைத்திலும் ஸ்கோர் செய்து இருக்கிறார். லட்சுமி மேனன் பாவமாகவும், சந்திரமுகி ஆத்மா புகுந்தவுடன் ஆக்ரோஷமான நடிப்பையும் வெளிப்படுத்தி அசர வைத்து இருக்கிறார்.பணிப்பெண்ணாக வரும் மகிமா நம்பியார் அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். துணிச்சலான பெண்ணாக வரும் சபிக்ஷா நடிப்பு சிறப்பு. அனுபவ நடிப்பை ராதிகா மற்றும் சுரேஷ் மேனன் ஆகியோர் கொடுத்து இருக்கிறார்கள். சிருஷ்டி டாங்கே, ரவி மரியா உள்ளிட்ட பலர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.படத்திற்கு பெரிய பலம் வடிவேலுவின் நடிப்பு. தான் பயந்து ரசிகர்களுக்கு சிரிப்பை கொடுத்து இருக்கிறார். குறிப்பாக லாரன்ஸ் உடன் வடிவேலு பேசும் காட்சியில் தியேட்டரில் சிரிப்பு மழை.

    இயக்கம்

    சந்திரமுகி முதல் பாகத்தில் இருந்த அரண்மனையில் ராதிகா குடும்பத்தினர் சென்ற பிறகு சந்திரமுகி ஆத்மாவால் ஏற்படும் பிரச்சினையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பி.வாசு. முதல் பாகத்தை போல இப்படத்தையும் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இயக்கி இருக்கிறார்.

    இசை

    கீரவாணியின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது.

    ஒளிப்பதிவு

    ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு பிரஸ்சாகவும் கலர்புல்லாகவும் அமைந்திருக்கிறது.

    படத்தொகுப்பு

    அந்தோணி படத்தொகுப்பு சிறப்பு

    காஸ்டியூம்

    நீடா லுல்லா, டோரதி ஜெய், கிருத்திகா சேகர், பாரதி சண்முகம், ஐஸ்வர்யா ரகுநாத் காஸ்டியூம் டிசைனில் நடிகர்கள் பளிச்சிடுகின்றனர்.

    புரொடக்‌ஷன்

    லைகா நிறுவனம் ‘சந்திரமுகி -2’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    வாசகர் விமர்சனம்
    5 Feb 2024
    Baby Shilba

    ok

    23 Nov 2023
    Baby Gillba

    Okay

    ×