என் மலர்


டாக்கு மகாராஜ்
குடும்பத்துகாக போராடும் ஒரு கதாநாயகனின் கதை
கதைக்களம்
ஒரு பள்ளிக்கூடத்தை நடத்தி வருகிறார் சச்சின் கெடேகர் இருக்கிறார். அந்த ஊரில் மகிழ்ச்சியாக தன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். மறுபக்கம் எம்.எல்.ஏ வின் தம்பி யானை தந்தம் கடத்தல் மற்றும் மற்ற சமூக விரோத செயல்களை செய்து வருகிறார். இதனை தெரிந்துக்கொண்ட சச்சின் கெடேகர் காவல் நிலையத்தில் புகார் அழிக்கிறார். சச்சினின் பேத்தியான சிறுமிக்கு இந்த எம்.எல்.ஏ வால் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் எம்.எல்.ஏ விற்கும் சச்சினுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.
பல ஆண்டுகளாக கதாநாயகனான பாலகிருஷ்ணா சிறையில் இருக்கிறார். ஒரு சீக்ரட் ஏஜெண்டாக சச்சீன் வீட்டில் ஒருவர் வாழ்ந்து வருகிறார். எம்.எல்.ஏ விற்கும் சச்சினுக்கும் இடையே மோதல் உண்டானதை பால கிருஷ்ணாவிடம் அவர் கூறுகிறார். உடனே பால கிருஷ்ணா சிறையில் இருந்து தப்பித்து அவர்களுக்கு உதவி செய்ய அந்த வீட்டிற்கு வருகிறார். பால கிருஷ்ணாவிற்கும் அந்த குடும்பத்திற்கும் என்ன தொடர்பு? பாலய்யா ஏன் சிறையில் இருக்கிறார்? உண்மையில் பாலய்யா யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கதாநாயகனான பால கிருஷ்ணா அவரது பாணியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மாஸ், சண்டை காட்சிகளிலும் எமோஷனல் வசனம் பேசுவதிலும் பார்வையாளர்களை கட்டிப்போடுகிறார். பல இடத்தில் கூஸ்பம்ஸ் செய்ய வைக்கிறார். பாபி தியோல் மற்றும் கன்னட நடிகரான ரிஷி போட்டிப்போட்டு வில்லத்தனத்தை காண்பித்துள்ளனர்.
ஷ்ரதா ஸ்ரீநாத் ,VTV கணேஷ், ஆடுகளம் நரேன், ஊர்வசி ரவுட்டலா கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.
இயக்கம்
பாபி கொல்லி ஒரு மாஸ் கமெர்ஷியல் எண்டர்டெய்னர் திரைப்படமாக டாக்கு மகாராஜ் திரைப்படத்தை இயக்கியுள்ளார். முந்தைய பாலய்யாவின் படங்களை ஒப்பிடும் பொழுது இப்படத்தில் லாஜிக் மீறல்கள் சற்று குறைவே. முதல் பாதி ஒரு கதையை சொல்லி இரண்டாம் பாதியில் பிளாஷ்பேக் ஆரம்பிக்கும்போது வேறொரு கதைக்கு மாறுவது பார்வையாளர்களிடம் சோர்வை உருவாக்கிறது. இரண்டாம் பாதி திரைக்கதையில் சற்று கூடுதல் கவனம் செலுத்திருக்க வேண்டும்.
இசை
தமனின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய தூணாக உள்ளது.
ஒளிப்பதிவு
விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு படத்தின் பெரிய பலம். சண்டை காட்சிகளை மிகவும் நேர்த்தியாக எடுத்துள்ளார்.
தயாரிப்பு
Sithara Entertainments & Fortune Four சினிமாஸ் நிறுவனம் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளது.