என் மலர்


டப்பாங்குத்து
நாட்டுப்புற கலைஞர்களின் சிக்கலை பேசக்கூடிய திரைப்படம்
கதைக்களம்
கதாநாயகனான சங்கர பாண்டி ஒரு நாட்டுப்புற கலைஞனாக இருக்கிறார். அவரது ஊரில் திருவிழா என எந்த நிகழ்ச்சி வந்தாலும் சங்கர பாண்டியின் கலை நிகழ்ச்சி இல்லாமல் முடியாது. இவருக்கும் இவர் செய்யும் கலை நிகழ்சிக்கும் ஊரில் ஒரு தனி மரியாதை உண்டு. இவர் தன்னுடைய முறை பெண்ணான கதாநாயகியான தீப்தியை காதலிக்கிறார்.
ஆனால் தீப்தியின் தாயாருக்கு அவர் யாரால் கர்ப்பம் ஆனார் என தெரியாத சூழலில் தீப்தி பிறக்கிறாள். அதன் பின் தீப்தியின் தாயார் எங்கு செல்கிறார் என தெரியவில்லை. இதனால் தீப்தி வளர்ப்பு தாயின் மூலம் வளர்கிறாள்.
சங்கர பாண்டியுடன் இணைந்து கலை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் தீப்தி ஆனால் தீப்தியை சங்கர பாண்டியனிடம் இருந்து பிரிக்க நினைக்கிறார் சங்கர பாண்டியனின் மாமா.
இதற்கு பிறகு என்ன ஆனது? இவர்களின் காதல் என்ன நிலை? நாட்டுபுற கலைஞர்களின் நிலை என்ன ? ஏன் சங்கர பாண்டியின் மாமா தீப்தியை பிரிக்க நினைக்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கதாநாயகனான சங்கர பாண்டியன் அக்கதாப்பாத்திரத்திற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுத்து நடித்துள்ளார். கதாநாயகியான தீப்தி சிறப்பான அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். காதல் சுகுமார் கோமாளி வேடம் அணிந்து மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆண்ட்ரூஸ் மற்றும் துர்கா கொடுத்த வேலையை செய்துள்ளனர்.
இயக்கம்
நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வியலை மையமாக வைத்து திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் முத்துவீரன். சமீபத்தில் வந்த திரைப்படங்களில் நிறைய பாடல்கள் இடம்பெற்ற திரைப்படமாக இயக்கியுள்ளார். படத்தின் கதையை பாடல்கள் மூலம் வெளிப்படுத்தியது புதிய முயற்சி. பாடல்களில் கவனம் செலுத்தியது போல் திரைக்கதை மற்றும் கதையில் கூடுதல் கவனம் செலுத்திருக்கவேண்டும். நிறைய பாடல்கள் இருப்பது பார்வையாளர்களுக்கு சோர்வை ஏற்படுத்துகிறது.
இசை
எல்.கே சரவணன் இசையில் பாடல்கள் நன்றாக அமைந்துள்ளது.
ஒளிப்பதிவு
ராஜா. கே பக்தவச்சலத்தின் ஒளிப்பதிவு ஓரளவுக்கு ரசிக்க முடிகிறது.
தயாரிப்பு
Modern Digitech Media LLP தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
Excellent songs