என் மலர்tooltip icon
    < Back
    DD Returns
    DD Returns

    டிடி ரிட்டன்ஸ்

    இயக்குனர்: எஸ் பிரேம் ஆனந்த்
    எடிட்டர்:என்.பி.ஸ்ரீகாந்த்
    ஒளிப்பதிவாளர்:தீபக் குமார் பதி
    இசை:ஒபிரோ
    வெளியீட்டு தேதி:28 July 2023
    Points:5218

    ட்ரெண்ட்

    வாரம்1234567
    தரவரிசை113796257282223
    Point8102094128638136321272
    கரு

    காதலிக்காக பணத்தை திருடிய இளைஞன் குறித்த கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக இருக்கும் சந்தானத்திற்கும் சுரபிக்கும் காதல் ஏற்படுகிறது. சுரபியை திருமணம் செய்ய சந்தானத்துக்கு ரூ.25 லட்சம் தேவைப்படுகிறது. அந்தப் பணத்தை பார் உரிமையாளரான பெப்சி விஜயனிடம் திருடி சுரபியின் வீட்டில் கொடுக்க அதனால் ஏற்படும் விளைவுகளே மீதிக்கதை.

    நடிகர்கள்

    பேய்களுடன் கேம் விளையாடி பங்களாவில் சந்தானம் அடிக்கும் நையாண்டி வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது. கலாய்ப்பதில் பேயையும் விடவில்லை.

    வழக்கம்போல் மொட்டை ராஜேந்திரனின் வில்லத்தனத்துடன் கூடிய காமெடி அரங்கை அதிர வைக்கிறது. பார் உரிமையாளராக வரும் பெப்சி விஜயன் பணத்தை பறிகொடுத்து பேயுடன் மாட்டிக் கொண்டு முழிக்கும் காட்சிகள் காமெடி வில்லனாக அவரை மாற்றி உள்ளது. காமெடி நடிகராக முன்னேறி வரும் தங்கதுரைக்கு இந்த படம் பாலமாக அமைந்துள்ளது.

    பேயாக வரும் மசூம்சங்கர், பிரதீப் ராம் சிங் ராவத் ,பிபின், ரீட்டா மானஸ்வி, ஜீவா படம் முழுக்க அந்தரத்திலேயே பறந்து பேயாக வந்து ரசிக்க வைக்கிறார்கள்.

    இயக்கம்

    பழிவாங்கும் கதை, திகில் படங்களுக்கு மத்தியில் திகிலான கதை ரசிகர்களுக்கு குதூகலமான காமெடி விருந்தாக வந்துள்ளது டிடி ரிட்டன்ஸ். இதுவரை வந்த பேய் படங்கள் போல் இல்லாமல் திகிலுடன் சிரிப்பு கலந்து குதூகலமான ஒரு படத்தை தந்துள்ளார் இயக்குனர் பிரேம் ஆனந்த். பேய் என்றால் குழந்தைகளுக்கு பயம் ஏற்படும். அந்த பயத்தை போக்கி பேயை பார்த்தால் சிரிக்க வைத்துள்ள படம் டிடி ரிட்டர்ன்ஸ்.

    இசை

    ஆப்ரோவின் இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

    ஒளிப்பதிவு

    தீபக்குமார் ஒளிப்பதிவில் அசத்தியுள்ளார்.

    படத்தொகுப்பு

    என்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் அசத்தியுள்ளார்.

    சவுண்ட் எபெக்ட்

    ராஜகிருஷ்ணன் சவுண்ட் மிக்ஸிங் படத்திற்கு பலம்.

    புரொடக்‌ஷன்

    ஆர்.கே. என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ’டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.



    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    வாசகர் விமர்சனம்
    28 Nov 2023
    Mathana

    23 Nov 2023
    vigneshwari kumar

    Nice

    ×