என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தெய்வ மச்சான்
- 0
- 0
- 0
வாரம் | 1 | 2 | 3 |
---|---|---|---|
தரவரிசை | 224 | 195 | 180 |
Point | 149 | 225 | 4 |
முன்கூட்டியே நடக்கும் விஷயங்கள் கனவில் வருவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்த படம் தெய்வ மச்சான்.
கதைக்களம்
கிராமத்தில் தன்னுடைய குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார் விமல். இவருடைய தங்கை அனிதா சம்பத்திற்கு திருமண வரன் பார்த்து வருகிறார்கள். ஆனால் சில காரணங்களால் வரன்கள் தடைபட்டு விடுகிறது. இதனால் மன கஷ்ட்டத்தில் அந்த குடும்பமே இருக்கிறது. அந்த கிராமத்தில் பண்ணையாராக இருக்கும் ஒருவரின் தம்பியை அனிதா சம்பத்திற்கு திருமணம் செய்து வைக்க முயற்சிக்க, அவரின் வயது அதிகமாக இருப்பதால் தட்டிக் கழித்து விடுகின்றனர்.
அதன்பின்னர் ஒரு வரன் கிடைக்க இதை எப்படியாவது முடித்து விட வேண்டும் என்று விமல் தீவிரம் காட்டி அந்த வரனை பேசி முடிக்கிறார். மாப்பிள்ளையின் தங்கையை பார்த்த விமல் அவர் மீது காதல் கொள்கிறார். ஒருவழியாக இந்த திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தனது தம்பிக்கு திருமணம் செய்து வைக்காததால் இந்த திருமணத்தை நிறுத்த பண்ணையார் முயற்சி செய்கிறார்.
இதனிடையே விமலின் கனவில் வரும் சாட்டைக்காரன், யார் இறக்க போகிறார்கள் என்பதை முன் கூட்டியே சொல்கிறான். அவர் சொல்லின்படியே அந்த மரணங்களும் நிகழ்கிறது. திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு விமலின் கனவில் வரும் சாட்டைக்காரன் இரண்டு நாட்களில் உன் மச்சான் இறந்துவிடுவார் என்று சொல்கிறார். இதனால் பதறிப்போகும் விமல் இந்த திருமணத்தை நிறுத்த முயற்சி செய்கிறார். இறுதியில் அந்த திருமணம் நடந்ததா? விமல் கனவில் வந்த விஷயம் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கிராமத்து பின்னணியில் நடக்கும் தெய்வ மச்சான் திரைப்படம் மண் மனம் மாறாமல் நடித்து கொடுத்துள்ளார் விமல். வழக்கம்போல் அவரின் எதார்த்த நடிப்பு படத்திற்கு சரியாக பொருந்தியுள்ளது. தங்கையாக வரும் அனிதா சம்பத்திற்கு இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரம் கொடுத்துள்ளனர். இதனை சரியாக செய்ய முயற்சி செய்திருக்கிறார் அனிதா சம்பத்.
பால சரவணின் காமெடி ஆங்காங்கே படத்தில் ஒர்க் அவுட் ஆகியுள்ளது. மேலும் படத்தில் வரும் பிற கதாப்பாத்திரங்களான பாண்டியராஜன், ஆடுகளம் நரேன், தீபா, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலரும் அவர்களின் பணியை சரியாக செய்துள்ளனர்.
இயக்கம்
குடும்ப உறவுகளை காமெடி கலந்த படமாக தெய்வ மச்சான் படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் மார்டின் நிர்மல் குமார். வழக்கமான கதையை காமெடி கலந்து கொடுத்து பாராட்டுக்களை பெறுகிறார். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆங்காங்கே படம் தொய்வு ஏற்படுவது போன்று இருந்தாலும் பார்வையாளர்கள் காமெடியை ரசிக்கும் படி இடம்பெற்றுள்ளது.
இசை
படத்தின் பாடல்கள் மனதில் நிற்கவில்லை என்றாலும் ஓகே என்ற அளவிற்கு கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் காட்வின் ஜே கோடன்.
ஒளிப்பதிவு
கிராமத்து பின்னணியை அழகாக காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் கேமில் ஜே அலெக்ஸ்.
படத்தொகுப்பு
எஸ். இளையராஜா படத்தொகுப்பு சூப்பர்
புரொடக்ஷன்
உதய் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் நிறுவனம் ‘தெய்வ மச்சான்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்