என் மலர்


டீமன்
கனவுகள் நிஜமானால் என்ன நடக்கும் என்பது குறித்த கதை
கதைக்களம்
நாயகன் சச்சின் சினிமாவில் பெரிய இயக்குனராக வேண்டும் என்கிற கனவோடு உதவி இயக்குனராக இருந்து கொண்டு வாய்ப்பு தேடி அலைகிறார். ஒரு வழியாக தயாரிப்பாளர் மூலம் வாய்ப்பும் பெறுகிறார். கதை விவாதம், படப் பணிகள் என்பதற்கு வசதியாக சச்சின் ஒரு தனி பிளாட் எடுத்து தங்குகிறார்.
ஒருநாள் இரவில் தனிமையாக இருக்கும் போது அமானுஷ்யமான கனவுகள் அவருக்கு வருகின்றன. எல்லாமே அவர் உயிரைப் பறிக்கும் விதமாக உள்ளன. ஒரு கட்டத்தில் கனவுகள் நிஜமாக ஆரம்பிக்கின்றன.
இறுதியில் கனவு பிரச்சனையில் இருந்து அவர் மீண்டாரா? விக்னேஷைப் பின் தொடர்ந்து பயமுறுத்தும் அமானுஷ்ய சக்தி யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் சச்சின் என்ற புதுமுக நடிகர் நடித்துள்ளார். தோற்றத்தில் உடல் மொழியில் ஓரளவிற்கு பொருத்தமாக இருக்கிறார். படத்தில் ஒரு கட்டத்திற்கு மேல் தனி ஆளாக நின்று திரையை ஆக்கிரமித்து கவர்கிறார். அவருக்கு ஜோடியாக கார்த்திகா பாத்திரத்தில் வரும் அபர்ணதி சில காட்சிகள் மட்டுமே வருகிறார். அவரை மேலும் பயன்படுத்தி இருக்கலாம். நண்பராக வரும் கும்கி அஸ்வின் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்.
இயக்குனர்
திகில் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ரமேஷ் பழனிவேல். வழக்கமாக திகில் படங்களில் இருக்கும் டெம்ப்ளேட் விஷயங்கள் இதில் இல்லை. படம் ஆரம்பித்ததில் இருந்தே ஒரு பேய்ப் படம் என்று காட்சிகள் வருகின்றன. ஆனால் போகப் போக உளவியல் சார்ந்த மனப் பாதிப்பு கொண்ட ஒரு பாத்திரத்தையும் ஆவி சம்பந்தப்பட்ட கற்பனையையும் ஒன்றிணைத்துள்ளார்கள். இது ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இசை
ரோனி ரஃபேலின் இசை பக்கபலமாக அமைந்துள்ளது.
ஒளிப்பதிவு
ஆர்.எஸ்.ஆனந்த குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். நான்கு சுவர்களுக்குள் நடக்கும் கதையாக இருந்தாலும் எந்த விதத்திலும் தொய்வு ஏற்படாத வகையில் படத்தைத் தாங்கி பிடித்து இருக்கிறார்.
படத்தொகுப்பு
ரவிக்குமார் படத்தொகுப்பு கவர்ந்துள்ளது.
சவுண்ட் எபெக்ட்
ஹரிஷ் சவுண்ட் மிக்ஸிங்கில் அசத்தியுள்ளார்.
புரொடக்ஷன்
பிளாக் பஸ்டர் புரொடக்ஷன் நிறுவனம் ‘டீமன்’ படத்தை தயாரித்துள்ளது.