என் மலர்


தில் ராஜா
அதிகாரவர்கத்திடம் மாட்டிக் கொள்ளும் சாமானியனின் கதை
கதைக்களம்
கதாநாயகன் விஜய் சத்யா சிவில் இன்ஞினியரிங் வேலையை செய்து வருகிறார். இவருக்கு ஷெரினோடு திருமணமாகி அழகான பெண் குழந்தை இருக்கிறது. இவர்கள் குடும்பத்துடன் ஒரு நாள் காரில் சென்றுக் கொண்டு இருக்கும் போது ஷெரினை பார்த்த பெரிய அராசியல்வாதியின் மகனும் அவரது நான்கு நண்பர்களும். ஷெரினை எப்படியாவது அடையவேண்டும் என்ற நினைப்பில் காரை வழி மறிக்கின்றனர்.
அங்கு விஜய் சத்யா மாட்டிக்கொள்ளும் போது அந்த ஏரியா கவுன்சிலர் இவர்களை காப்பாற்ற கையில் துப்பாக்கியுடன் வருகிறார். எதிர்பாராத விதமாக அரசியல்வாதியின் மகன் அந்த கவுன்சிலரை சுட்டு கொலை செய்து விடுகிறார். அந்த கலவரத்தில் தப்பித்து கதாநாயகன் குடும்பத்துடன் தப்பித்து செல்கிறார், பின் தொடர்ந்த இந்த அரசியல் நபர்கள் காரை வழி மறித்து சண்டை நடக்கிறது. அப்பொழுது அந்த அந்த அரசியல்வாதியின் மகனை விஜய் சத்யா தற்காப்புக்காக எதிர்பாராத விதமாக கொலை செய்து விடுகிறார்.
பின் வீட்டில் தலைமறைவாக இருக்கும் விஜய் சத்யா போலிசால் தேடப்பட்டு வருகிறார். இவர்களை பிந்தொடர்ந்த அந்த நான்கு நண்பர்களும் காணாமல் சென்றுவிடுகின்றனர்.இதற்கு அடுத்து என்ன ஆனது? போலிசிடம் இருந்து எப்படி தன்னை காத்துக் கொண்டார் விஜய் சத்யா ? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
விஜய் சத்யா ஆக்ஷன் காட்சிகளில் பளிச்சிடுகிறார். ஷெரின் அளவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இயக்கம்
ஒரு அதிகாரவர்கத்திடம் மாட்டிக்கொள்ளும் சாமானியனின் கதையை மையப்படுத்தி இயக்கி இருக்கிறார் ஏ. வெங்கடேஷ். படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக சென்றாலும் அது இரண்டாம் பாதியில் இல்லாதது வருத்தம். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
இசை
அம்ரிஷின் பாடல்கள் பெரிதாக உதவவில்லை. படத்தின் பின்னணி இசை கேட்கும் ரகம்.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் மனோ நாராயணன் அவரது பணியை சிறப்பாக மேற்கொண்டுள்ளார்.
தயாரிப்பு
இப்படத்தை கோவை பாலா தயாரித்துள்ளார்.