என் மலர்


தினசரி
எதிர்மறை எண்ணங்கள் கொண்ட இருவரும் திருமணம் செய்துக்கொண்டால் என்ன நடக்கும் என்பதை பற்றி கதை
கதைக்களம்
ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஐடி துறையில் பணியாற்றி வருகிறார். இவர் போதுமான சம்பளம் வாங்கினாலும் வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்திற்கு முன்னேற வேண்டும் என துடிப்புடன் இருக்கிறார். தான் திருமணம் செய்துக் கொள்ளும் பெண் தன்னை விட அதிக சம்பாதிப்பவராக இருக்க வேண்டும் என நினைக்கிறார்.
மறுபக்கம் நாயகி சிந்தியா லூர்தே அதிகமான சம்பளத்துடன் நல்ல வேலையில் இருக்கிறார். ஆனால் அவரது எண்ணம் திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்லாமல், கணவன் மற்றும் குடும்பத்தாரை கவனித்துக் கொண்டு குடும்பத்தோடு ஒன்றி வாழ வேண்டும் என்பதே அவரது ஆசையாக இருக்கிறது. இந்த எதிர்மறை எண்ணம் கொண்ட இருவரும் திருமணம் செய்துக் கொள்கின்றனர். பணம் மட்டுமே குறிக்கோளாக இருக்கும் ஸ்ரீகாந்த், அன்பு குடும்பம் என இருக்கும் நாயகி, இருவருக்கும் இதனால் என்ன பிரச்சனை ஏற்ப்பட்டது? ஸ்ரீகாந்த் இதனை எப்படி புரிந்துக் கொண்டார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
நிறைய ஆசையை மனதில் சுமந்துக் கொண்டு இருக்கும் ஒரு நடுத்தர குடும்பஸ்தன் கதாப்பாத்திரத்தில் குறைசொல்லாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் ஸ்ரீகாந்த். நாயகியாக நடித்திருக்கும் சிந்தியா லூர்தே,அவரது கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறார்.
ஸ்ரீகாந்தின் அப்பாவாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், அம்மாவாக நடித்திருக்கும் மீரா கிருஷ்ணன், அக்காவாக நடித்திருக்கும் வினோதினி, நண்பராக நடித்திருக்கும் பிரேம்ஜி மற்றும் கே.பி.ஒய்.சரத், சாம்ஸ், சாந்தினி தமிழரசன், ராதாரவி என அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
இயக்கம்
ஒரு வித்தியாசமான குடும்ப பின்னணி கதையை கையாண்டுள்ளார் இயக்குனர் ஜி.சங்கர். காட்சியமைப்பில் கூடுதல் கவனம் செலுத்திருக்க வேண்டும். அனைத்துமே வசனம் வழியே சொல்ல முயற்ச்சித்து இருப்பது பார்வையாளர்களுக்கு சலிப்பை ஏற்ப்படுத்துகிறது.
இசை
இளையராஜாவின் இசை கேட்கும் ரகம். பின்னணி இசை கதைக்களத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவின் பணி படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறது.
தயாரிப்பு
Cynthia Production House நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.