என் மலர்


டபுள் ஐஸ்மார்ட்
வில்லனின் மைண்டை கதாநாயகனுக்கு டிரான்ஸ்ஃபர் செய்வதால் ஏற்படும் பிரச்சனையின் கதை.
கதைக்களம்
வில்லனான சஞ்சய் தத் மாஃபியா உலகத்தில் ஒரு பெறும் புள்ளியாக உள்ளார். கொலை, கொள்ளை, போதைப் பொருள் என அனைத்து தீய செயல்களிலும் ஈடுப்பட்டு வருகிறார். இவரை உலகின் மிகப் பெரிய பயஙகரவாதி என உலக்த்தில் உள்ள அனைத்து போலீசும் இவரை தேடி வருகின்றன. ஆனால் இவருக்கு மூளையில் கட்டி இருப்பதால் மருத்துவர்கள் இவர் 3 மாதங்கள் மட்டுமே உயிர் வாழ முடியும் என தெரிவின்றனர். இதனால் நெடு நாள் வாழ வேண்டும் என ஆசையுடன் உயிர் பிழைப்பதற்கு கதாநாயகனின் மூளையுடன் மைண்ட் டிரான்ஸ்ஃபர் செய்தால் நினைத்த காரியம் நடக்கும், அவரது உடலில் நீண்ட காலம் வாழலாம் என ஒரு விஞ்ஞானி கூறுகிறார். சொன்னது போல ராம் பொதினேனி மூளையில் மைண்ட் டிரான்ஸ்ஃபர் செய்கின்றனர் அதற்கடுத்து என்ன ஆனது ? சஞ்சய் தத் நினைத்த காரியம் நடந்ததா? ராம் பொதினேனி இதனால் எவ்வாறு பாதிக்கப்பட்டார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கதாநாயகனான ராம் பொதினேனி துறுதுறுவென அராத்து ஆளாக நடித்துள்ளார். சஞ்சய் தத் வில்லத்தனத்தில் மிரட்டியுள்ளார். கதாநாயகியான காவ்யா தாபர் பொம்மைப் போல் கொடுத்த வேலையை செய்துள்ளார்.
இயக்கம்
ஐஸ்மார்ட் ஷங்கர் படத்தின் தொடர்ச்சியாகவே இப்படத்தையும் இயக்கியுள்ளார் இயக்குனர் பூரி ஜெகன்நாத். படத்தின் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம். நகைச்சுவை நடிகர் அலியின் கதாப்பாத்திரத்தை வீணடித்துள்ளார். நகைச்சுவை பார்வையாளரிடம் வொர்க் அவுட் ஆகாதது படத்தின் மைனஸ்.
இசை
மணிஷர்மாவின் இசையில் அமைந்துள்ள பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம்.
ஒளிப்பதிவு
சாம் கே நாயுடு ஒளிப்பதிவு பட ஓட்டத்திற்கு பெரும் உதவி செய்துள்ளது.
தயாரிப்பு
பூரி ஜெகன்நாத் இப்படத்தை தயாரித்துள்ளார்.