search icon
என் மலர்tooltip icon
    < Back
    Fight Club
    Fight Club

    பைட் கிளப்

    இயக்குனர்: அப்பாஸ் ஏ ரஹ்மத்
    எடிட்டர்:கிருபாகரன் பி
    ஒளிப்பதிவாளர்:லியோன் பிரிட்டோ
    இசை:கோவிந்த் வசந்தா
    வெளியீட்டு தேதி:2023-12-15
    Points:6384

    ட்ரெண்ட்

    வாரம்12345
    தரவரிசை3436876254
    Point2579345717111760
    கரு

    போதைப்பொருட்களும், அரசியலும் இளைஞர்கள் வாழ்க்கையை எப்படி புரட்டிப்போடுகிறது என்பது குறித்த கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    குத்துச்சண்டை வீரராக இருக்கும் பெஞ்சமின் தன்னுடைய பகுதி இளைஞர்களை சிறந்த வீரர்களாக உருவாக்க ஆசைப்படுகிறார். இவரின் தம்பி ஜோசப் மற்றும் நண்பர்கள் போதைப்பொருட்கள் விற்கும் தொழில் செய்கிறார்கள். இதனை பெஞ்சமின் கண்டிக்கிறார்.

    இதனால் கோபமடைந்த கஞ்சா விற்பனையாளர் கிருபா, ஜோசப்பை தன்னுடன் சேர்த்துக் கொண்டு பெஞ்சமினை கொலை செய்கிறார். இந்த பழியை ஏற்றுக் கொண்டு ஜோசப்பை சிறை செல்ல சொல்லும் கிருபா விரைவில் சிறையில் இருந்து வெளியில் எடுப்பதாக வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிவிடுகிறார். அதுமட்டுமல்லாமல் பெரிய அரசியல்வாதியாகவும் மாறுகிறார்.

    பல வருடங்கள் ஜெயிலில் இருந்து வெளியே வரும் ஜோசப் தன் அண்ணனை கொலை செய்ய காரணமாக இருந்த கிருபாவை தன் பகுதி இளைஞர்களை வைத்து கொலை செய்ய திட்டமிடுகிறார்.

    இறுதியில் இந்த இளைஞர்களின் நிலை என்ன ஆனது? ஜோசப் ஆசை நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    துடிப்பான இளைஞனின் வாழ்க்கையை அரசியல் எப்படி புரட்டிப்போடுகிறது என்பதை விஜய்குமார் தன் நடிப்பின் மூலம் அசத்தலாக வெளிப்படுத்தியிருக்கிறார். மற்ற நடிகர்கள் அனைவரும் புதுமுகங்கள் என்றாலும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து பாராட்டை பெறுகிறார்கள்.

    இயக்கம்

    வடசென்னையை மையமாக வைத்து கதையை இயக்கியிருக்கிறார் இயக்குனர் அப்பாஸ் ஏ ரஹ்மத். போதைப்பொருட்களும், அதை சார்ந்த அரசியலும் எப்படி இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றுகிறது என்பதை தெளிவாக காட்சிப்படுத்தியுள்ளார். படத்தில் சண்டைக்காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளதை குறைத்திருக்கலாம்.

    இசை

    கோவிந்த் வசந்தா இசை படத்திற்கு பலம்.

    ஒளிப்பதிவு

    லியோன் பிரிட்டோ ரத்தம் தெறிக்கும் சண்டை காட்சிகளை அருமையாக காட்டியுள்ளார்.

    படத்தொகுப்பு

    கிருபாகரன் படத்தொகுப்பு சூப்பர்.

    காஸ்டியூம்

    தினேஷ் மனோகரன் காஸ்டியூம் டிசைனில் கதாபாத்திரங்கள் பளிச்சிடுகின்றனர்.

    புரொடக்‌ஷன்

    ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் ‘பைட் கிளப்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.


    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    வாசகர் விமர்சனம்
    2023-12-15 12:49:07.0
    vignesh sara

    ×