search icon
என் மலர்tooltip icon
    < Back
    Finder - Project 1
    Finder - Project 1

    பைண்டர் - ப்ராஜெக்ட் 1

    இயக்குனர்: வினோத் ராஜேந்திரன்
    இசை:சூர்ய பிரசாத் ஆர்
    வெளியீட்டு தேதி:2024-04-20
    Points:388

    ட்ரெண்ட்

    வாரம்12
    தரவரிசை254180
    Point104284
    கரு

    செய்யாத குற்றத்திற்காக சிறையில் இருக்கும் நபரை காப்பாற்றும் தனியார் துப்பறிவு நிறுவனம் நடத்தும் நாயகன்.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம் 

    மனைவி மகளுடன் வாழ்ந்து வரும் சார்லி மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவர் ஊரில் இருப்பவரிடம் பணம் வாங்கி சீட்டு கட்டி வருகிறார். சீட்டு பணத்தை வாங்கியவர் சார்லியை ஏமாற்றி விட்டு ஓடி விடுகிறார். இதனால் ஊரில் இருக்கும் மக்கள் அனைவரும் பணத்தை திருப்பி கேட்கிறார்கள்.

    என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் சார்லி, பணம் தேவைக்காக உறவினர் சென்ராயன் மூலம் செய்யாத குற்றத்திற்காக ஜெயிலுக்கு செல்கிறார். 6 மாதத்தில் வெளியே வந்து விடலாம் என்று ஜெயிலுக்கு செல்லும் சார்லிக்கு ஆயுள் தண்டனை கிடைக்கிறது.

    இந்நிலையில் தனியார் துப்பறியும் நிறுவனம் நடத்தி வரும் வினோத் ராஜேந்திரன், குற்றம் செய்யாமல் சிறையில் இருப்பவர்களை மீட்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்.

    இதை அறிந்த சார்லியின் மகள் பிரணா, 8 வருடங்களாக செய்யாத குற்றத்திற்காக சிறையில் இருக்கும் தன் தந்தை சார்லியை மீட்டு தருமாறு கேட்கிறார்.

    இறுதியில் வினோத், சிறையில் இருக்கும் சார்லியை குற்றவாளி இல்லை என்று நிரூபித்து வெளியில் கொண்டு வந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள் 

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் வினோத் ராஜேந்திரன், ஹீரோ அந்தஸ்து இல்லாமல் கதையின் நாயகனாக நடித்து இருக்கிறார். உண்மையான குற்றவாளியை தேடும் முயற்சியில் கவனிக்க வைத்திருக்கிறார். இவருக்கு உறுதுணையாக வரும் நாயகி தாரணி, அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    படத்திற்கு பெரிய பலம் சார்லியின் நடிப்பு. தன்னுடைய அனுபவ நடிப்பால், குடும்பத்தினருடன் சந்தோசமாக இருப்பது, பணம் கஷ்டம் வரும்போது வருந்துவது, பணத்தை திருப்பிக் கொடுக்க போராடுவது, சிறையில் இருந்து கொண்டு குடும்பத்தை பற்றி நினைப்பது என கவர்ந்திருக்கிறார். வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த கவனிக்க வைத்தார் சென்ராயன். சார்லியின் மகளாக வரும் பிரணா கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்.

    இயக்கம் 

    நாயகனாக நடித்திருக்கும் வினோத் ராஜேந்திரனே இப்படத்தை இயக்கி இருக்கிறார். செய்யாத குற்றத்திற்காக சிறையில் இருப்பவர்களை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் வினோத் ராஜேந்திரன். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக நகர்த்தி இருக்கிறார். ஆனால், ஒரே மாதிரியான  காட்சிகள் அடுத்தடுத்து வருவது சலிப்பை ஏற்படுத்துகிறது.

    இசை 

    சூர்யா பிரசாத் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை கதைக்கு தேவையான அளவிற்கு கொடுத்து இருக்கிறார்.

    ஒளிப்பதிவு 

    பாபு ஆண்டனியின் ஒளிப்பதிவு சிறப்பு. மீனவ கிராமத்தை அழகாக காண்பித்து இருக்கிறார்.

    தயாரிப்பு 

    இப்படத்தை ரஜீஃப் சுப்பிரமணியம் தயாரித்துள்ளார்.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×