search icon
என் மலர்tooltip icon
    < Back
    Furiosa: A Mad Max Saga
    Furiosa: A Mad Max Saga

    ஃபுரியோசா: எ மேட் மேக்ஸ் சாகா

    இயக்குனர்: ஜார்ஜ் மில்லர்
    வெளியீட்டு தேதி:2024-05-23
    Points:2059

    ட்ரெண்ட்

    வாரம்12345
    தரவரிசை8292969981
    Point9141010120114
    கரு

    பியூரியோசா எப்படி டிமெண்டஸிடம் இருந்து தப்பித்தாள் என்பதை பற்றிய கதை

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    ஜார்ஜ் மில்லர் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான மேட் மேக்ஸ்: ப்யூரி ரோட் திரைப்படத்தின் முன் பகுதியாக தற்பொழுது வெளியாகியுள்ள பியூரியோசா எ மேட் மேக்ஸ் சாகா திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் கதைக்களம் அனைத்தும் ஒரு டிஸ்டோபியன் உலகத்தில் நடக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. பூமியில் உள்ள எல்லாம் சாரங்கலும், அமைப்புகளும் அழிந்து, முழுவதுமே பாலைவனமாக மாறும் காலத்தில் நடக்கும் கதை தான் பியூரியோசா எ மேட் மேக்ஸ் சாகா.

    ஆனால் இந்த பாலைவனத்தில் ஒரு இடத்தில் மட்டும் பூமியின் சில வளங்களும் , சாரங்களும் அமைந்து இருக்கிறது. ஆனால் இது பெரும்பாலான ஆட்களுக்கு தெரியாது. அப்படி தெரிய வந்தால் அவர்களை அந்த ஊர் மக்கள் கொன்று விடும் வழக்கம் அங்கு நிலவி வருகிறது. அந்த வளம் உள்ள ஊரில் கதாநாயகியான இளம் ஃபுரியோசா அவருடன் அம்மாவுடன் வாழ்ந்து வருகிறார். அவர்கள் ஊரின் வளங்களை திருட வந்த ஒரு பைக்கர் கும்பலிடம் ஃபுரியோசா மாட்டிக் கொள்கிறார். அவரை காப்பாற்ற முயன்ற ஃபுரியோசாவின் தாயை அவள் கண் முன் சுட்டு கொள்கின்றனர்.

    இந்த பைக்கர் கும்பலின் தலைவனான டிமெண்டஸிடம் [கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்} அழைத்து செல்கின்றனர். அங்கு அவளை என்ன செய்கிறார்கள்? ஃபுரியோசா அங்கு இருந்து எப்படி தப்பித்தாள்? தன் தாயை கொன்ற கும்பலை பழி வாங்கினாளா? என்பதே படத்தின் மீதிக் கதை.

    நடிகர்கள்

    படத்தின் நாயகியான அன்யா டெயிலர் ஜாய் மிக சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். சண்டை காட்சிகளில் மிரட்டியுள்ளார். வில்லனான கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் அவரது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சார்லி ஃப்ரேசர், லாச்சி ஹல்ம், டாம் பர்க் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.

    இயக்கம்

    அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக இயக்கி இருக்கிறார் ஜார்ஜ் மில்லர், காட்சிகள், ஒலி, ஆக்‌ஷன் டிசைன் அனைத்தும் பிரமாண்டமாகவும் புதுமையாக உருவாக்கியுள்ளார் இயக்குனர். 'ஃப்யூரியோசா: எ மேட் மேக்ஸ் சாகா' படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் அடுத்த லெவல். ஜார்ஜ் மில்லர் ஒவ்வொரு ஆக்‌ஷன் காட்சியிலும் தனது புத்திசாலித்தனத்தால் பார்வையாளர்களை கவர்கிறார். முதல் பாதியில் இருந்த சுவாரசியம் இரண்டாம் பாதியில் கொஞ்சம் சரிகிறது. பாலைவனத்தில் நடக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் பிரமிக்க வைக்கிறது. மேன் மேக்ஸ்: ஃப்யுரி ரோட் திரைப்படத்திற்கு சிறந்த முன்னுரை படமாக இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் ஜார்ஜ் மில்லர்.

    இசை

    படத்தின் பின்னணி இசை படத்திற்கு மிக பலமாக அமைந்துள்ளது. ஜுன்கி எக்ஸ் .எல் சிறப்பாக படத்தின் இசையை மேற்கொண்டுள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளில் வரும் பின்னணி இசை மிரட்டுகிறது.

    ஒளிப்பதிவு 

    டிஸ்டோபியன் உலகை அற்புதமாக காட்சி படுத்திருந்தார் சைமன் டக்கன், பாலைவனம் ஆக்‌ஷன் காட்சிகள் அட்டகாசம்.

    தயாரிப்பு

    ஜார்ஜ் மில்லர், மிட்சல் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×