என் மலர்


ஜென்டில்வுமன்
தவறு செய்த கணவனை கொல்லும் மனைவியின் கதை.
கதைக்களம்
சென்னையில் நாயகன் ஹரி கிருஷ்ணனும், நாயகி லிஜோமோல் ஜோஸும் திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் ஹரி கிருஷ்ணன் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்து இருப்பதை செல்போன் மூலம் தெரிந்துக் கொள்கிறார் லிஜோமோல். கோபத்தில் ஹரியை லிஜோமோல் கொலை செய்து விடுகிறார். இந்நிலையில் ஹரியின் காதலியான லாஸ்லியா, ஹரியை காணவில்லை என்று போலீசில் புகார் அளிக்கிறார். இறுதியில் ஹரிக்கு என்ன ஆனது என்று போலீஸ் கண்டுபிடித்தார்களா? ஹரியின் உடலை லிஜோமோல் என்ன செய்தார்? சட்டத்தின் பிடியில் லிஜோமோல் சிக்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ஹரி கிருஷ்ணன், மனைவி லிஜோமோல் ஜோஸை கொஞ்சும் போதும், காதலி லாஸ்லியாவை கொஞ்சும் போதும் யதார்த்தமாக நடித்து இருக்கிறார்.
முதல் நாயகியாக நடித்து இருக்கும் லிஜோமோல் ஜோஸ், ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஹரி கிருஷ்ணாவை கொலை செய்யும் போது, சாதாரண ஒரு பெண்ணின் கோபத்தின் வெளிப்பாடாக மனதில் பதிந்து இருக்கிறார். மற்றொரு நாயகியாக வரும் லாஸ்லியா, காதலனை நினைத்து வருந்தும் போதும், இறுதியில் போலீசிடம் போராடும் காட்சிகளிலும் நடிப்பால் கவர்ந்து இருக்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் ராஜீவ் காந்தி, நம்ம ஊர் பொண்ணு என்று சொல்லி கவனம் பெற்றிருக்கிறார்.
இயக்கம்
பெண்ணை ஏமாற்றும் ஆண்-ஐ மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜோஸ்வா சேதுராமன். பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளும் ஆண்களின் நிலையை சிறப்பாக படமாக்கி இருக்கிறார். குறிப்பிட்ட ஆண்கள் என்று சொல்லாமல் அனைத்து ஆண்கள் என்று சொல்லி இருப்பது சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திரைக்கதை மெதுவாக சென்றாலும் இரண்டாம் பாதி ரசிக்கும் படி கொடுத்திருப்பது சிறப்பு.
இசை
கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை கதைக்களத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.
ஒளிப்பதிவு
சா.காத்தவராயனின் ஒளிப்பதிவை சிறப்பாக கையாண்டு இருக்கிறார்.
தயாரிப்பு
Komala Hari Pictures & One Drop Ocean Pictures நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.